Search This Blog n

04 November 2014

யாத்திரை பக்தர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமையில் நேரடி தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வார விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
தர்ம தரிசனம் செய்ய பக்தர்கள் சில நாள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பாத யாத்திரை பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு (திவ்யதரிசனம்) அனுமதிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுவதாக தேவஸ்தானம் கருதுகிறது.
இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேரடி தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. விரைவில் இது அமுல்படுத்தப்படும் என்று கோவில் கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராஜ் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ‘‘பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தர்ம தரிசன பக்தர்களை மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் திவ்ய தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்து உள்ளோம்’’ என்றார்.
திருப்பதி கோவிலில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 41,815 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 18 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கு தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆனது. பாத யாத்திரை பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்து நின்றனர்.
கோவிலில் இன்று சால கட்லா கைசிக துவாதசி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் பெருமாளுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுவது விசேஷமாகும்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment