Search This Blog n

16 November 2014

நெடுஞ்சாலை விளக்குகள்: மின்சாரம் விரயமாகும் அவலம்

திருவள்ளூர்- திருத்தணி நெடுஞ்சாலை, ஜே.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் பகலில் எரியும் மின் விளக்குகளால் மின்சாரம் விரயம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியான திருத்தணி நெடுஞ்சாலையில டோல்கேட் முதல் ஜே.என்.சாலையில் ஆயில்மில் பகுதி வரை சாலையோரம் மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை நகராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், நாள்தோறும் மாலை 6 மணிக்கு எரியத் தொடங்கும் இந்த விளக்குகள் மறுநாள் காலை 11 மணி வரையில் எரிவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, மின்பற்றாக்குறை உள்ள நிலையில் இதுபோல் பகலில் விளக்குகள் எரிவதால் மின்சாரம் விரயம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி பொறியாளர் பாபு கூறியதாவது: நகராட்சி அதிகாரிகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை நகர்ப் பகுதிகளில் மேற்பார்வையிட்டு வருகின்றனர். மாதத்தில் 2 நாள்கள் மின் விளக்குகள் பகல் நேரத்தில் எரியும். அந்த நேரத்தில் நகராட்சி மின் ஊழியர்கள் அந்த விளக்குகளின் தன்மை குறித்து சோதனை செய்வர் என்றார் அவர இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment