Search This Blog n

11 December 2014

நிலக்கரி சிறப்பு வசதிகள் மசோதா அறிமுகம்

 
பாராளுமன்றத்தில்  நிலக்கரி சுரங்க (சிறப்பு வசதிகள்) மசோதாவை மின்சாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 1993ம் ஆண்டு முதல் நடந்த சுரங்க ஒதுக்கீடுகள் சட்ட விரோதமாக நடந்ததாக கூறி, மொத்தமுள்ள 218 ஒதுக்கீடுகளில் 204 ஒதுக்கீடுகளை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. தற்போது உள்ள நிலவரப்படி ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழப்பதுடன், பல்வேறு நிலக்கரி நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
தற்போது இயங்கி வரும் நிலக்கரி சுரங்கங்களில் தொடர்ந்து நிலக்கரி உற்பத்தியை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இதனால் ஒரு போதும் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது என்று தெரிவித்தார். மேலும், சிறுதொழில் நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தும் இந்த மசோதாவில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்க இந்த மசோதா வழிவகுக்கும் எனக்கூறி திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சவுகதா ராய் எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment