Search This Blog n

16 December 2014

இந்திய ரயில்வே துறையால் நடத்தப்பட்ட தேர்வில் ஜெயலலிதா

தொடர்புடைய கேள்வி இடம்பெற்றது குறித்தான விசாரணை நடத்திடக் கோரியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திங்களன்று மாநிலங்களைவில் தெரிவித்தார்.
ரயில்வே வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வில், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்தான கேள்வி எழுப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
இது உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ளதாக அஇஅதிமுகவின் உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் இது தொடர்பான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள்.
இது தொடர்பில் பதிலளித்த அருண் ஜெட்லி, இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தேர்வு வாரியத்தால்

 கடந்த 14 ஆம் தேதி ஞாயிறன்று நடத்தப்பட்ட வேலை வாய்ப்புக்கான தேர்வில் இந்த விவகாரம் தொடர்புடைய கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கான வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 43ஆவது கேள்வியில், இந்திய மாநிலங்களில், மாநில முதல்வராக பொறுப்பு வகித்த எவர், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்தார் என்று கேட்கப்பட்டிருந்தது.
அதற்கான விடைத்தேர்வுகளாக லாலு பிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா, ஜெயலலிதா மற்றும் பி.எஸ்.எட்டியூரப்பா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இது தொர்டர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், சமுக ஊடகங்களில் வேகமாக பரவியதால், இது பரபரப்பான விடயமாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்திலும் சர்ச்சையாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா முதல்முறையாக முதல்வர் பதவி வகித்த 1991-1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகால சிறை தண்டனையையும், 100 கோடி அபராதத் தொகையையும் தண்டனையாக விதித்தது.
இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியையிழந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment