Search This Blog n

02 December 2014

திருமண பரிசாக ரத்தம் மற்றும் உறுப்பு தானம்

குஜராத்தில் நவீன திருமணம் ; திருமணத்திற்கு போனா நல்ல வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வரலாம்  இது தான் நாம் கேள்வி பட்டு இருக்கிற திருமணம் ஆனால்  குஜராத்தில்  நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றவர்கள் எல்லாம் ரத்தம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்து உள்ளனர்.
இந்த திருமணத்திற்கு வந்தவர்கள் மொத்தம் 350 பேர்  திருமண பரிசாக ரத்தம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்து உள்ளனர்.

குஜராத்தில் டாக்டர் பேசானியா எனபவர் தனது மகள் டாகடர் தேவயானியின் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டு செய்து இருத்தார்.மண மகன் ஜெய் பாண்ட்யாவும்  ஒரு டாக்டர் தான் உறுப்பு தான விழிபுணர்வுக்காக  திருமணத்திற்கு வருபவர்கள் அனைவரும்  திருமண பரிசாக ரத்தம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மற்றும் அவர்களிடம் வாழ் நாளில் ரத்தம் மற்றும் உறுப்புதான் செய்வது குறித்து உறுதி மொழி எடுக்க கேட்டு கொள்ளப்பட்டது.

இது குறித்து டாக்டர் பேசானியா கூறும் போது எனது மகனும் மருமகளும் திருமண நாளில் ரத்த தானம் செய்தனர். நாங்கள் திருமண விழாவில் மதிப்பு மிக்க பொருளை பரிசாக வாங்குவதில்லை என முடிவு செய்தோம். நாங்கள் தங்கள் வாழ்நாளில் அவர்களிடம் ரத்தம் மற்றும் உறுப்பு தான்ம் செய்யுமாறு உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மண மக்களும் உறுதி மொழி எடுத்து கொண்டனர். மேலும் புகையிலை பொருட்களை விட்டு விலகி இருத்தல் குறுஇத்தும் உறுதி மொழி எடுத்தனர். என கூறினார்.
இந்த திருமணத்தை டாக்டர் பேசானியா கின்னஸ் சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்திலும் பதிவு செய்து உள்ளார்.
இதற்கு முன் டாக்டர் தனது மகன் திருமண நிகழ்ச்சியிலும் ரத்த தான முகாம் நடத்தி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment