Search This Blog n

30 December 2014

கடும் பனிப்பொழிவு: ரயில் விமான போக்குவரத்து பாதிப்பு


டெல்லியில் வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் டெல்லியில் தட்பவெட்பம் 2.6 டிகிரி செல்சியசாக குறைந்தது. அன்று, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் பனிப்பொழிவு இருந்தது.

டெல்லியில் இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மக்கள் அதை தாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.பனிப்பொழிவு காரணமாக டெல்லி மாநகரம் பனி மூட்டத்தில் மூழ்கியது. 50 மீட்டர் தூரத்தில் வருபவர்களை கூட பார்க்க முடியாதபடி பனி மூட்டம் இருந்தது. இதனால் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக 100 ரெயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. 30 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

வடமாநில மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பனிப்பொழிவும், குளிர்காற்றும் இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment