Search This Blog n

09 December 2014

இரவு முழுவதும் சுடுகாட்டில் தூங்கி நிரூபிக்க அதிரடி முயற்சி!

கர்நாடகா - பேய்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலும், மூடநம்பிக்கை குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி இரவு முழுவதும் சுடுகாட்டில் தூங்கினார். கர்நாடகாவில் கலால் வரித் துறை அமைச்சராக இருப்பவர் சதீஷ் ஜர்கிஹோலி. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மாநில சட்டப்பேரவையில், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என குரல் கொடுத்து வருபவர்களுள், சதீஷூம் ஒருவர்.

சுடுகாட்டில் பேய்கள் உலாவும் என மக்களுள் சிலர் நம்பிவரும் நிலையில், அது பொய்யான நம்பிக்கை என்பதை நிரூபிக்க சதீஷ் திட்டமிட்டார். இதற்காக, நேற்று முன்தினம் பெலகாவி சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை உண்டார் சதீஷ். அத்துடன் நிற்காமல், பேய்கள் நடமாட்டம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், சுடுகாட்டிலேயே இரவு முழுவதும் நன்றாக தூங்கினார்.

இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அமைச்சர் சதீஷ் கூறும்போது, “முதல் முறையாக நான் சுடுகாட்டில் இரவு முழுவதையும் கழித்துள்ளேன். முதலில், சுடுகாட்டில் பேய்கள் தங்கியிருந்து, நடமாடும் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன்.

இரண்டாவது, சுடுகாட்டைப் பற்றிய அச்சத்தை மக்களிடமிருந்து போக்க விரும்புகிறேன். உண்மையில், சுடுகாடுகள் புனிதமான இடங்களாகும். என்னுடைய பதவியே போனாலும், மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். லட்சுமியை பில்கேட்ஸ் வணங்கவில்லை. ஆனால், அவர்தான் உலக பணக்காரர்களுள் ஒருவராக உள்ளார். நான் கூட லட்சுமியை வணங்குவது கிடையாது. ஆனால், எனது வணிகத்தில் ரூ.600 கோடிவரை எனக்கு பணம் புரள்கிறது. என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment