Search This Blog n

05 December 2014

கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் பார்வை இழப்பு

பஞ்சாப்பில் சுகாதார பாதுகாப்பு விதிகளை மீறி தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண் சிகிச்சை முகாமில், கண்புரை அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட 14 பேர் கண் பார்வையை இழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தொண்டு மருத்துவமனையில் நடந்த முகாமில் பொதுமக்கள் கண் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளனர்

. முகாமில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்களின் கண் கட்டுகள் நீக்கப்பட்ட பின்னர், அதில் 14 பேர்கள் கண் பார்வையை இழந்தது தெரியவந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 60 வயதை கடந்த முதியவர்கள் என்று தெரியவந்துள்ளது. “கடுமையாக சுகாதாரமற்ற நிலையில்” மருத்துவ முகாம் நடத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. இதுதொடர்பாக அமிர்தசரஸ் துணை கமிஷ்னர் ரவி

பாகத் பேசுகையில், 6-7 பேர் வரையில் பாதி பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களது பார்வை பாதுகாப்பு தொடர்பாக தெரிந்துக் கொள்ள ஒருவார காலம் எடுக்கும். கண் சிகிச்சை முகாம் நடத்திய அமைப்பாளர்கள் விதிமுறைகளை மீறியுள்ளனர். அவர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்திய மருத்தை தெரிவிக்கவில்லை மற்றும் சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் பற்றியும் தெரிவிக்கவில்லை. எந்த டாக்டர் அறுவை சிகிச்சை செய்தார் என்பது தொடர்பாகவும், தவறான மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் நாங்கள் விசாரித்து வருகிறோம். என்று கூறியுள்ளார். அதிகமான மக்கள் இன்று பரிசோதனைக்காக வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்டோர்களது

எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். அம்ரித்சரஸ் சிவில் அறுவை சிகிச்சை மையம் இதுதொடர்பாக விசாரணை நடத்துகிறது. இந்த சம்பவம் இலவச மருத்துவ முகாம் பாதுகாப்பு தொடர்பாக மேலும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, கடந்த மாதம் சத்தீஷ்கார் மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 12 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் மேலும் 34 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய சம்பவம் மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment