Search This Blog n

19 March 2015

பரவி வரும் பன்றிக் காய்ச்சல்: 30 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு

 இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சலால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வரும் எச்1என்1 என்ற வைரஸால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல், ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், மார்ச் 15-ம் திகதி நிலவரப்படி, குஜராத்தில் 387 பேரும், ராஜஸ்தானில் 378 பேரும், மராட்டியத்தில் 293 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 239 பேரும் பன்றிக் காய்ச்சலால் பலியாகியுள்ளனர்.
மேலும், தெலுங்கானாவில் 72, கர்நாடகாவில் 71, பஞ்சாப்பில் 51, அரியானாவில் 45, உத்தரப்பிரதேசத்தில் 35, ஆந்திராவில் 20, மேற்கு வங்காளத்தில் 19, இமாச்சல்ப்பிரதேசத்தில் 18, ஜம்மு-காஷ்மீரில் 16, சத்தீஸ்கரில் 14, தமிழ்நாட்டில் 13, டெல்லி மற்றும் கேரளாவில் தலா 11 என நாடு முழுவதும் பலர் பலியாகியுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவிக்கையில், தற்போது நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 30,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1,809 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment