Search This Blog n

16 March 2015

அக்கா தங்கச்சியைப் பாத்து பொறாமைப்படுறதும்!

 லாஸ் ஏஞ்சலெஸ்: வாங்க மக்களே, ஒரு அக்கா தங்கச்சி இடையே நடந்து வரும் லடாயைப் பாருங்கள்.
அக்கா – தங்கை என்றாலே சின்னச் சின்ன சண்டைகளும், ஊடல்களும் சகஜம்தான். ஆனால் அது சிறு வயதில் இருக்கலாம். வளர்ந்து பெரியவர்களான பிறகும் கூடவா இருக்கும்.. வளர்ந்த பிறகு அக்காவும், தங்கையும் பாசத்தைப் பொழிவார்கள், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் கிம் கர்தஷியான் விஷயத்தில் இது தலைகீழாகியுள்ளது.
தனது தங்கை கைலி ஜென்னரைப் பார்த்து கிம் கர்தஷியான் பொறாமைப்படுவதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டுள்ளது. தன்னை விட கைலி அழகாக இருக்கிறார், சிறப்பாக செயல்படுகிறார் என்பதுதான் கிம்மின் கவலைக்குக் காரணமாம்.
ரியாலிட்டி ஷோ ஸ்டாரான கிம், தனது ஒன்று விட்ட தங்கையான ஜென்னர் தன்னை விட சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாகவும், அழகாக இருப்பதாகவும் தனது தாயார் கிறிஸ் ஜென்னரிடம் கூறினாராம். ஜென்னரின் வளர்ச்சி, கிம்முக்கு நிறைய பொறாமையை கொடுத்திருப்பதாக மிர்ரர் செய்தியும் பரபரக்கிறது.
கிம்முக்கு 34 வயதாகிறது. ஜென்னருக்கோ 17 வயதுதான். தன்னை ஜென்னர் காப்பியடிப்பதாகவும் புலம்புகிறாராம் கிம். ஆனால் இதெல்லாம் உண்மையில்லை என்று கூறுகிறார் ஜென்னர்.
ஜென்னர் ஒரு வளரும் பாடகி ஆவார். கிட்டத்தட்ட கிம்மைப் போலத்தான் இருப்பார் ஜென்னர். இருவரது ஸ்டைலும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இதனால்தான் கிம்முக்குப் பொறாமை என்று சொல்கிறார்கள்.
அக்காவைப் பாத்து தங்கச்சி பொறாமைப்படுறதும், தங்கச்சியைப் பாத்து அக்கா பொறாமைப்படுறதும் சகஜந்தானப்பா!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment