Search This Blog n

06 March 2015

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில்???

  இலங்கை நாடாளுமன்றத்தில் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றுகிறார். இலங்கை வரலாற்றில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். 3 நாள் அரசு முறை பயணமாக செல்லும் அவர் தமிழர்கள் அதிக வாழும் யாழ்பாணம் மற்றும் கண்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 
இந்திய நிதி உதவியுடன் 50,000 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிகளையும் அவர் பார்வையிட இருக்கிறார். 
இந்த பயணத்தின் போது பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்துவது, தமிழர்  பிரச்சனை, மீனவர் விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்தும் அந்நாட்டு அதிபர் சிறிசேன உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் முக்கிய பேச்சு நடத்துவார்  என்று எதிபார்க்கப்படுகிறது. 
திரிகோண மலையில் இந்திய நிறுவனம் சார்பில் 500 மெகவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் அமைப்பதற்கான இறுதி ஒப்புதலும் இந்த  சந்திப்பின் போது அளிக்கப்பட உள்ளது. 1987-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கைக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். ராஜிவ் காந்திக்கு  பின்னர் இந்திய பிரதமர்கள் யாரும் இலங்கைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

Post a Comment