Search This Blog n

06 May 2013

தேர்தல் வாக்குப்பதிவு வரும் 8-ம் திகதி


கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
மாலை 5 மணி நிலவரத்தின்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 60 - 65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 223 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களை சுமார் 4 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் தேர்வு செய்கிறார்கள். மைசூர் அருகில் உள்ள பிரியபட்டணா தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் சன்னமோகே கவுடா மாரடைப்பு காரணமாக இறந்தார். அந்தத் தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 3 ஆயிரத்து 945 வேட்பாளர்களில் 253 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3 ஆயிரத்து 691 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வாபஸ் பெற்றவர்கள் தவிர இறுதியாக 2947 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
பிரதான கட்சிகளான காங்கிரஸ் சார்பில் 224 வேட்பாளர்களும், பா.ஜ.க. சார்பில் 223 வேட்பாளர்களும் (சீட் வழங்கப்பட்ட ஒரு வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை) மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 222 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 180 வேட்பாளர்களும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 30 வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 17 வேட்பாளர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 9 வேட்பாளர்களும், 1233 சுயேட்சை வேட்பாளர்களும் இந்த தேர்தல் களத்தில் இருந்தனர்.
கர்நாடகாவில் சரிந்து வரும் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க.வும், இழந்த செல்வாக்கை மீண்டும் கைப்பற்றும் முனைப்புடன் காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. பெங்களூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி, மற்றும் மாநில தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த தேர்தலில் பெங்களூரில் மட்டும் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 2 1/2 தேர்தல் அலுவலர்கள் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் பணியாற்றினர். 34 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தனர். மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது.
வாக்குப் பதிவு தொடங்கிய முதல் மூன்று மணி நேரம் வரை சராசரியாக 20 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பகல் ஒரு மணி நிலவரப்படி வாக்குப் பதிவு சுமார் 30 சதவிகிதத்தை எட்டியது. மாலை 4 மணி நிலவரப்படி 50 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தன.
மாலை 5 மணி நிலவரப்படி 60 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கோரடகெராவில் தன் வாக்கைப்பதிவு செய்தார். எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமைய்யா வர்ணாவில் ஓட்டு போட்டார்.
சில இடங்களில் மின்னணு எந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக ஓட்டுப் பதிவில் காலதாமதம் ஏற்பட்டது. மற்றபடி தேர்தல் அமைதியாக நடந்தது. தேர்தல் களத்தில் மொத்தம் 2,939 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 170 பேர் பெண்கள். தேர்தல் நடைபெறும் 30 மாவட்டங்களிலும் 51,450 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இதில் 9,954 ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாகவும், 149 ஓட்டுச்சாவடிகள் நக்சலைட்டுக்கள் நடமாடும் பகுதிகளில் இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து ஓட்டுச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடக தேர்தல் முடிவை தெரிந்துகொள்ள ஒட்டு மொத்த இந்தியர்களும் ஆர்வமாக உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை 8-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க. உடைந்து விட்டதாலும், அந்த கட்சி மீது பல ஊழல் புகார்கள் எழுந்ததாலும், இந்த தடவை காங்கிரஸ் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
என்றாலும் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 64.91 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 1978 ஆண்டு பதிவான 71.9 சதவிகிதம் வாக்குகளே கர்நாடக சட்டசபை தேர்தல் வரலாற்றில் அதிகபட்சமாக பதிவாகிய வாக்குகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
அந்த தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்று 33.86 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.59 சதவீத ஓட்டுகளையும், ஜனதா தளம் (எஸ்) 28 இடங்களில் வெற்றி பெற்று 19.13 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment