Search This Blog n

23 May 2013

பல்கலைக்கழக புதிய துணைவேந்தர்

                             
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.ராஜாராம் (55) நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, வேலூரில் உள்ள தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராக இவர் பணிபுரிந்துள்ளார்.
 கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ், கம்ப்யூட்டர் மொழிகள், ஹை வோல்டேஜ் என்ஜினீயரிங் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர். இவரது கட்டுரைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன,இதற்கான உத்தரவு வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் பேராசிரியராக இருக்கிறார். ஓரிரு நாள்களில் அவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக்கொள்வார் எனத் தெரிகிறது.
திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டிசம்பர் 31, 2010 முதல் ஜூலை 31, 2012 வரை இருந்துள்ளார். கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் ஓருங்கிணைக்கப்பட்டவுடன் இவர் கோவையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
தாற்காலிக துணைவேந்தர்...ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தாற்காலிக துணைவேந்தராக மூத்தப் பேராசிரியர் காளிராஜ் நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பருடன்
காளிராஜ் ஓய்வு பெற்றாலும், அவருக்கு மே 31 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க முன்னாள் துணைவேந்தர் எஸ்.சச்சிதானந்தம் தலைமையில் மூவர் குழு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடம் வந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து மூவர் கொண்ட பட்டியலை ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு அண்மையில் பரிந்துரைத்தது.
பி.இ. கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் முழுநேர துணைவேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணைவேந்தராக நியமன உத்தரவு வெளியான நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் ராஜாராம் செயல்படுவார்.

0 கருத்துகள்:

Post a Comment