Search This Blog n

13 May 2013

அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மன்னிப்பு


தென்கொரிய ஜனாதிபதியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஜனாதிபதி அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பார்க் முதன்முறையாக கடந்த வாரம் (மே 5 - 9) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, அவருடன் சென்றிருந்த செய்தித் தொடர்பாளர் யூன் சாங்-ஜங், கொரிய அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து நாடு திரும்புவதற்கு முன்பே யூன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலக தலைமை அதிகாரி ஹியூ டே-இயோல் செய்தியாளர்களிடம் கூறுகையில், யூன் தலைகுனிவை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார். அது ஒரு வெட்கக்கேடான சம்பவம்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் நாட்டு மக்களிடமும், வெளிநாடுகளில் வசிக்கும் கொரிய மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வாஷிங்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் யூன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment