Search This Blog n

07 May 2013

அணு உலையை மூடும் வரை தொடர் போராட்டம்,.=, :


. இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விபரம் இதுவரை தெரியவில்லை.
ஆனால் கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் எந்த பகுதியிலும் இந்த அளவிற்கு தொடர் போராட்டங்கள் நடந்தது கிடையாது. ரஷ்ய நாட்டுடன் அணு உலை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே அணு உலை அமைக்ககூடாது என்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் கொடுத்தவன் நான் தான்.
தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை காரணம் காட்டி கூடங்குளம் அணு உலை அமைக்கும் விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அணுஉலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
தென் தமிழகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை கருவிகள் மிகவும் மோசமானவை. நாட்டில் உள்ள 27 அணு உலைகளில் இருந்து வெறும் 2.7 சதவீதம் தான் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

Post a Comment