Search This Blog n

04 May 2013

மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் நண்பரின் ,.




டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், நண்பரின் பேட்டியை ஆதாரமாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பத்து நாட்களுக்குப் பின்னர் அந்த மாணவி உயிரிழந்துவிட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது.
மாணவி பலாத்காரத்திற்கு ஆளானபோது அங்கிருந்த ஒரே சாட்சியான அவரது நண்பரும் தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து வீசப்பட்டார்.
மருத்துவ சிகிச்சைக்குபின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மாணவியின் நண்பர் பேட்டி அளித்தார்.
அந்த சிடியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச், தனியார் தொலைக்காட்சிக்கு பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பர் அளித்த பேட்டியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தது.
ஏற்கனவே பல வழக்குகளில் ஊடகங்களுக்குத் தரும் பேட்டியை ஆதரமாக ஏற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே டெல்லி காவல்துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

Post a Comment