Search This Blog n

22 May 2013

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ?? :


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 4 ஆண்டுகள் நிறைவையொட்டி பாராளுமன்ற பொது விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 தேர்தல் எப்போது நடைபெற வேண்டுமோ அப்போது நடைபெறும். தற்போதைய சூழ்நிலையில், முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்தவும் எந்தத் தேவையும் எழவில்லை. கூட்டணிக் கட்சியினர் சொல்வதை எல்லாம் அரசால் செய்ய இயலாமல் போகலாம். மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களை மையப்படுத்தியே பிரச்னைகளைப் பார்க்கின்றன. அந்த அரசுகள் தேசிய சிந்தனையில் அணுக வேண்டும்.
 கடந்த 9 ஆண்டுகளில் சோனியா காந்திக்கும் மன்மோகனுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. இதேபோல் சமீபத்தில் பதவி நீக்கப்பட்ட இரண்டு மத்திய மந்திரிகள் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சோனியாவும் பிரதமரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்தனர். வரும் தேர்தலில் அவர் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
 கட்சியினரும் அனைத்துத் தரப்பினரும் தன்னைச் சுட்டிக் காட்டி கூறுவதை ராகுல் காந்தி காது கொடுத்துக் கேட்பார் என்று நினைக்கிறேன். அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்.,.-,
 

0 கருத்துகள்:

Post a Comment