Search This Blog n

23 May 2013

குறுவைச் சாகுபடி பொய்க்கும் அபாயஎச்சரிக்கை

காவிரி டெல்டா பகுதிகுகளில் இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடி பொய்க்கக்கூடிய சூழல் நிலவுவதாக திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சர்களிடம் கேட்டால், சந்தையில் விலை உயர்ந்தால்தான் வீட்டில் யாரும் சமைக்காமல் அம்மா உணவகங்களில் சாப்பிட வருவார்கள் என்று கூறுவர்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசுப் பஸ்களில் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் இதுவரை முதியோர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.

110-வது விதியின் கீழ் 100-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா படித்துள்ளார். அதில்கூட முதியோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு இல்லை.

திமுக மீதான காழ்ப்புணர்வின் காரணமாக இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தையே அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

2006-2011 வரையான திமுக ஆட்சியில் ரூ.3,907 கோடியில் 1.65 கோடி வண்ணத் தொலைக்காட்சிகள் கொள்முதல் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டன.

அதில் 2011 மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் 1.27 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டன.

அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் மையங்களுக்கு வழங்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்து அரசாணையும் பிறப்பித்தது.

ஆனால் அவற்றை வழங்குவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் மதிப்பு ரூ.22.82 கோடியாகும்.

திமுக ஆட்சியில் 2006-11-ஆம் ஆண்டு வரை குறுவைப் பயிரும், சம்பா பயிரும் பொய்த்ததில்லை. ஆனால் தற்போதைய ஆட்சியில் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துபோய் உள்ளதால் சாகுபடிக்கு அணையை திறந்துவிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆனால் ஆட்சியாளர்களோ காவிரி வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தங்கள் பணியை முடித்துக் கொள்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment