Search This Blog n

04 May 2013

ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு: ராமதாஸ் மீண்டும் ?


மதுரையில் ரஜினிகாந்தின் ரசிகர்களை பாமகவினர் தாக்கிய வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸை மீண்டும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்தில் சிகரெட் பிடித்து நடித்தது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 2004ம் ஆண்டு தெரிவித்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், 2004ம் ஆண்டு ஏப்ரல் 2ம் திகதி மதுரைக்கு வருகை தந்த ராமதாசுக்கு நெல்பேட்டை பகுதியில் ரஜினி ரசிகர்கள் கருப்பு கொடி காட்டினர்.
இதைத்தடுத்த பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 11 பேர் மீது விளக்குத்தூண் பொலிஸார் வழக்கு பதிந்தனர்.
மதுரை நீதிமன்றில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸ், இளஞ்செழியன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனால் ராமதாசுக்கு ஏற்கனவே நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்து இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இளஞ்செழியன் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.
தற்போது ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை தாக்குதல் வழக்கிலும் அவரை கைது செய்யும் வகையில் பிடிவிராந்து பிறப்பிக்கும்படி பொலிஸார் மதுரை நீதவான் நீதிமன்றில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதவான் நீதிமன்றம், ராமதாசை கைது செய்யுமாறு பிடிவிராந்து பிறப்பித்தார். பொலிஸார் பிடிவிராந்தை திருச்சி சிறைக்கு அனுப்பியதால் நேற்றிரவே ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
ராமதாசை இன்று மதுரைக்கு அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் பொலிசார் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது
 

0 கருத்துகள்:

Post a Comment