Search This Blog n

03 May 2013

மன்மோகன் மீண்டும் எம்.பி., ஆவாரா?

பிரதமர் மன்மோகன் சிங் உட்பட, அசாமிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, இருவரின் பதவிக்காலம், ஜூன், 14ல் முடிவடைவதால், புதியவர்களை தேர்வு செய்ய, வரும், 30ம் தேதி தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் பிரதமர் மன்மோகன் சிங், அசாம் மாநிலத்திலிருந்து, முதன் முறையாக, 1991ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், 1995, 2001, 2007ம் ஆண்டுகளில், அதே மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,யானார். அவரின் தற்போதைய, ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம், ஜூன், 14ம் தேதியுடன் முடிவடைகிறது.
 அதேபோல், அசாம் மாநிலத்திலிருந்து, மன்மோகன் சிங்குடன் தேர்வான, அசாம் கனபரிஷத் கட்சியின், குமார் தீபக் தாஸ் பதவிக்காலமும், அதேநாளில் முடிவடைகிறது. காலியாகும் இந்த இரு இடங்களுக்கும், மே, 30ம் தேதி தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான முறையான அறிவிப்பு, வரும், 13ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனுத்தாக்கல் துவங்கி விடும்.
 21ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 23ம் தேதி. அவசியம் ஏற்பட்டால், 30ம் தேதி, காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்று மாலை, 5:00 மணிக்குப் பிறகு, ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
 ஏற்கனவே, நான்கு முறை, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ள, பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவாரா என்பது, அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும். மன்மோகன் சிங், 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில், தெற்கு டில்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

Post a Comment