Search This Blog n

20 May 2013

ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த?


ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 3 வீரர்களையும் டெல்லி பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தால் அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் 3 வீரர்களையும் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரி ரவிசவானி தலைமையிலான விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் 3 வீரர்கள் மீதும் இறுதிக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பொலிசில் கிரிமினல் புகாரும் அளித்து உள்ளது.
இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கப்டன் ராகுல் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீசாந்தின் செயல்பாட்டால் டிராவிட் அதிருப்தி அடைந்து இருந்தார். இதனால் கடந்த 9-ம் திகதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம் பெறுவதை விரும்பவில்லை. எப்படியோ அந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுவிட்டார்.
அந்த ஆட்டத்தில்தான் அவர் தனது 2-வது ஓவரில் 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக ஸ்ரீசாந்த் ரூ.40 லட்சம் பணத்தை சூதாட்ட தரகரிடம் பெற்று இருக்கிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு ராஜஸ்தான் ஆடிய சென்னை (12ம் திகதி), மும்பை (15ம் திகதி) அணிகளுக்கு எதிராக ஸ்ரீசாந்த் சேர்க்கப்படவில்லை. மும்பையுடன் மோதிய ஆட்டத்துக்கு மறுநாள்தான் (16ம் திகதி) ஸ்பாட் பிக்சிங் வழக்கில் ஸ்ரீசாந்த் கைதானார்.
மேலும் ஸ்ரீசாந்த் அணியில் இருந்து கடந்த 12-ம் திகதியே கழற்றி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது சண்டித்தனம் அதிகரித்ததால் சென்னை அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு வீரர்கள் தங்கி இருந்த ஓட்டலை விட்டு வெளியேறுமாறு அணி நிர்வாகம் அவரை கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்ரீசாந்தின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்துதான் அவரை கேப்டன் டிராவிட் சிக்க வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணி நிர்வாகி ஒருவர் இதை மறுத்துள்ளார்.
அவர் கூறும்போது மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டதற்கும், ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் ஸ்பாட் பிக்சிங் சந்தேகம் எதுவுமில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட முடிவு. ஸ்பாட்பிக்சிங் நடந்து இருக்கலாம் என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு அப்போது இல்லை என்றார்
 

0 கருத்துகள்:

Post a Comment