Search This Blog n

14 May 2013

கவர்னர் ரோசய்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த பெண்.,


தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பத்மராவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயா விந்தியால், இவர் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பின் பொதுச் செயலராக உள்ளார்.
இந்நிலையில் சிரளா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் கிருஷ்ண மோகன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருகிறார், பலரது நிலங்களை அபகரித்து விட்டார்.
தமிழக கவர்னர் ரோசய்யாவின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகிறார் என கடந்த சில தினங்களுக்கு முன் துண்டு பிரசுரங்களை ஜெயா விந்தியால் வினியோகித்தார்.
பின் இந்த விவரங்களை பேஸ்புக்கிலும் வெளியிட்டார்.
ஜெயா விந்தியாவின் இந்தச் செயல் தன்னை மன ரீதியாக பாதித்துள்ளதாகக் கூறி, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கிருஷ்ண மோகன் பிரகாசம் மாவட்ட பொலிசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பொலிசார் ஜெயா விந்தியாலை கைது செய்தனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment