Search This Blog n

17 May 2013

ஒன்றுக்கும் மேற்பட்ட காஸ் இணைப்பு:


ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு ஜூன் 1ம் திகதியில் இருந்து சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளவர்களில் உண்மையான வாடிக்கையாளர்களை கண்டறிய, "உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்” என்ற கே.ஒய்.சி நடைமுறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின.
இதன்படி காஸ் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் காஸ் இணைப்பு தொடர்பாக அனைத்து விபரங்களையும் அளிக்கும்படி கோரப்பட்டு இருந்தது.
இதற்காக காஸ் விநியோகிப்பாளர்கள் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தராதவர்களின் காஸ் இணைப்புகளை வரும் ஜூன் 1ம் திகதியில் இருந்து துண்டிக்கப்படுகிறது.
இவர்களுக்கு காஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட மாட்டாது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் கே.ஓய்.சி விண்ணப்பம் கொடுக்காத 63 லட்சம் இணைப்புகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரே இடத்தில் பல்வேறு இணைப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
இவர்கள் உடனடியாக தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணம், குடியிருக்கும் முகவரிக்கான சான்று ஆகியவற்றை கே.ஓய்.சி விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை வழங்காதவர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யப்படுவது நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

Post a Comment