Search This Blog n

20 September 2013

தேர்தலில் பா.ஜ., செல்வாக்கு; 4 மாநிலங்களில் 3 -ஐ கைப்பற்றும்

                                       
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் 3 - பா.ஜ., கைப்பற்றும் என்றும் டில்லியில் காங்., அரசுக்கும் ,பா.ஜ.வுக்கும் கடும் போட்டி இருந்தும் இரண்டு கட்டசிகளும் சம அளவில் வெற்றி பெற்று இங்கு தொங்கு சட்டசபையே அமைய வாய்ப்பு இருப்பதாகவும், ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் எடுத்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.
 
வரும் 2014 ல் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், டில்லி, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போது இங்கு பா.ஜ., ஆளும்கட்சியாக இருக்கும் சட்டீஸ்கரும், ( மாநில முதல்வர்

ராமன்சிங்) மத்திய பிரதேசமும் ( சவுகான்), மீண்டும் இந்த கட்சியே தக்க வைத்துக் கொள்ளும் என்றும், காங்கிரஸ் கையில் இருக்கும் ராஜஸ்தான் ( முதல்வர் அசோக் கெலாட் ) பா.ஜ.,வுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாவும் சர்வேயில் ஓட்டளிக்கப்பட்டுள்ளது.
   
ஷீலா தீட்ஷித் திணறல்:
    டில்லியை பொறுத்தவரை காங். முதல்வராக இருக்கும் ஷீலாதீட்ஷித் வெற்றியை பெற பெரும் சிரமப்பபட வேண்டியது இருக்கும் என்றும் , காங்., மற்றும் பா.ஜ., வுக்கு சம அளவில் வெற்றி கிட்டும் என்றும் தெரியவந்துள்ளது. இங்கு ஆம்ஆத்மி கட்சி (அரவிந்த் கெஜ்ரிவால்) பல தொகுதிகளில போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் காங் ஓட்டு பெரும் சரிவை சந்திக்கும், இது

பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்றும் தெரிகிறது. இங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. பா.ஜ.,வுக்கு 30 தொகுதிகளும், காங்கிரசுக்கு 29 தொகுதிகளும், கிடைக்கும், அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கு 7 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவரது ஆதரவுடன் மட்டுமே யாரும் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

   முதல்வரை பொறுத்தவரை ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே ( பா.ஜ.,) முதல்வராக 44 சதவீதத்ததினரும், தற்போதைய முதல்வர் அசோக்கெலாட் முதல்வராக 25 சதவீதத்தினரும், சட்டீஸ்கரில் ராமன்சிங் முதல்வராக 48 சதவீதத்தினரும், அஜீத்ஜோகி முதல்வராக 23 சதவீதத்தினரும், டில்லியில்

ஷீலா தீட்ஷித் முதல்வராக 37 சதவீதத்தினரும் மத்திய பிரதேசத்தில் சவுகான் முதல்வராக 56 சதத்தினரும், ஜோதிராத்தியாசிந்தியா முதல்வராக 23 சதவீதத்தினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்,
  
மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் ஆதரவு அதிகரிக்குமே தவிர எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் தெரிய வந்துள்ளது. மோடி பிரதமராக 59 சதவீதத்தினரும், ராகுல் பிரதமராக 16 சதவீதத்தினரும், மன்மோகன்சிங் பிரதமராக 8 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்
 

0 கருத்துகள்:

Post a Comment