Search This Blog n

15 September 2013

ஆயுதங்கள் மீட்பு பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதல்:


 
ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம் போடியா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை அதிகாலை நடத்திய அதிரடித் தாக்குதலில் பெண் உள்பட 13 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது என்றும், மாவோயிஸ்டுகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 25-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸார் நடத்திய பேரணியில் மாவோயிஸ்டுகள் நடத்திய அதிரடித்

தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வி.சி.சுக்லா, மகேந்திர கர்மா உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலில் இந்த போடியா மாவோயிஸ்டுகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநில எல்லையையொட்டிய மல்கான்கிரி மாவட்டத்தில்

போடியா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன் மல்கான்கிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ்வர் சிங் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக் குழுவினர், மாவட்டத் தன்னார்வப் படையினர் இணைந்து சில குடா வனப்பகுதியில்

வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த தேடுதல் வேட்டையின்போது பாகாப்புப் படையினரை கண்டவுடன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர்.


பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் அக்குழுவின் தலைவர் ராகேஷ் தப்பிவிட்டார் என்று பொலிஸார்

தெரிவித்தனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் மாவோயிஸ்டுகள் அமைத்திருந்த முகாமில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள்,

கண்ணிவெடிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மல்கான்கிரியில் இருந்து போடியா 75 கிமீ தூரம் உள்ளது. போடியாவில் இருந்து 12 கிமீ தூரத்தில் இருக்கும் சிலகுடா வனப் பகுதியில்தான் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

நிலைமையை நேரில் கண்டறிய உளவுப் பிரிவு இயக்குநர் அபய், நக்சல் தடுப்புப் பிரிவு ஐஜி சமேந்திர பிரியதர்சி ஆகியோருடன் காவல் துறை தலைமை இயக்குநர் பிரகாஷ் மிஸ்ரா, மல்கான்கிரியில் முகாமிட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் அனைவரும் அந்த இயக்கத்தைச்

 சேர்ந்த காளிமேளா தளத்தின் கீழ் செயல்பட்டுவரும் போடியா படையினர் என்றும் அந்தப் படையில் சுமார் 30 மாவோயிஸ்டுகள் இருந்தனர் என்றும் மல்கான்கிரியில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்த தாக்குதல் குறித்து காவல் துறைத் தலைமை இயக்குநர் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில்,
"பக்கத்து மாநிலங்களில் இருந்து மாவோயிஸ்டுகள் ஒடிசா மாநிலத்துக்குள் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர்.

அதனால் அவர்களது நடமாட்டத்தை ஒடிசா போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து இந்த அதிரடித் தாக்குதல்

 நடைபெற்றது. உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

இது ஒடிசா போலீஸாருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. ஒடிசா மாநில எல்லைக்கு அப்பால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாக அமையும்' என்று மிஸ்ரா கூறினார்..
 

0 கருத்துகள்:

Post a Comment