Search This Blog n

01 September 2013

நிச்சயிக்கப்படும் திருமணம் கழிவறையில்!!!


மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்ற சட்டமானது கொண்டுவரப்பட்டுள்ளது.
மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான தகுதி இல்லை என்று அறிவிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது.
செஹோர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த புதிய சட்டமாம்

0 கருத்துகள்:

Post a Comment