Search This Blog n

15 September 2013

உயர்ந்துள்ள விமானப் பயணக் கட்டணம் கடந்த மூன்று !!


கடந்த இரண்டு வாரங்களாக விமானப் பயணக் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றன. சென்ற மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு 55 சதவிகிதம் கட்டண உயர்வுகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று மாதம் முன்னதாகப் பதிவு செய்யப்படும் பிரிவு முதல் ஒரு வாரம் முன்னதாகப் பதிவு செய்யப்படும் பிரிவு வரை இருக்கும் ஆறு பிரிவுகளிலும் அதிகரித்துள்ள கட்டணத்தொகை குறித்த கணக்கீடுகளை நேற்று இணையதளத் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

முன்பதிவு செய்பவர்களையும் இந்த கட்டண உயர்வு பாதித்துள்ளது. உதாரணத்திற்கு நவம்பர் மாதம் மேற்கொள்ளும் பயணத்திற்கு இந்த மாதம் முன்பதிவு செய்பவர்களும் 55 சதவிகித அதிகரிப்பினை செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு முன்னால் கட்டண உயர்வுகள் ஏற்பட்டபோது அவை பல வாரங்களுக்கு பரவலாக அதிகரிக்கப்பட்டன.

ஆனால், இப்போது குறுகிய காலத்திற்குள்ளாகவே இதுபோல் அதிகரித்துள்ளது முன்பதிவு செய்பவர்களுக்கும் அழுத்தத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது என்று இணையதளத்தில் முன்பதிவு செய்யும் நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியான கெயூர் ஜோஷி கூறினார்.

30 நாட்கள் முன்னதாகப் பதிவு செய்வோருக்கு இந்த உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் அதிக அளவு பயணங்கள் ரத்து செய்யப்படுவதும் தடுக்கப்பட முடியும். நீண்டகால செயல்பாட்டு

நடைமுறைகளுக்கு பரவலான உயர்வு தேவை என்றபோதிலும், விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையும் ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும் என்பதுவும் முக்கியம் என்று ஜோஷி குறிப்பிட்டார்

0 கருத்துகள்:

Post a Comment