Search This Blog n

14 February 2015

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது

 ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
அமெரிக்கா ஆதரவு
இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார். அப்போது, மாற்றியமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அணுசக்தி நாடுகள் குழுவிலும் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம், நேற்று முன்தினம் இரவில் ஒபாமா தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த பேச்சு ½ மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.
தகுதி இல்லை
அப்போது ஒபாமாவிடம் பேசிய நவாஸ் ஷெரீப், ‘காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. நிறைவேற்றியுள்ள தீர்மானங்களுக்கு இந்தியா உடன்படவில்லை. மேலும் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை இந்தியா
 உறுதி செய்யவில்லை. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது. அந்த தகுதி இந்தியாவுக்கு இல்லை’ என்று கூறினார்.
அணுசக்தி நாடுகள் குழுவில் உறுப்பினராக இணைய பாகிஸ்தான் விரும்புவதாக கூறிய நவாஸ் ஷெரீப், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
சந்திக்க முடிவு
இந்த உரையாடலின் போது தனது இந்திய பயணம் குறித்து ஒபாமா, நவாஸ் ஷெரீப்பிடம் விளக்கினார். மேலும் இரு நாட்டு உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இரு தலைவர்களும் தகுந்த நேரத்தில் சந்திக்கவும் முடிவு செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment