Search This Blog n

02 February 2015

கைதியும் தலை துண்டித்து கொலை தீவிரவாதிகளின்!!

 சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 2–வது பணயக் கைதியும் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
2 பணயக் கைதிகள்
ஜப்பானைச் சேர்ந்த, போர்கள் பற்றிய செய்தி சேகரிப்பாளர் கென்ஜி கோட்டூ(47), தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்து வைத்து இருந்தனர். இவர்களை விடுவிக்க, 200 மில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள்(இந்திய பண மதிப்பில் சுமார் ரூ1,225 கோடி) தரவேண்டும் என்று ஜப்பான் அரசிடம் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.

இதனை ஜப்பான் அரசாங்கம் மறுத்ததால் முதலில் ஹாருணா யுக்கவை கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.
ஜோர்டான் விமானி
இதேபோல், ஜோர்டான் நாட்டு சிறையில் இருக்கும் ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுவிக்கவேண்டும் என்ற மற்றொரு கோரிக்கையும் தீவிரவாதிகள் வைத்தனர்.
அப்போது, கோட்டூவுடன் இணைந்து பிடிபட்ட ஜோர்டான் நாட்டு விமானி முயாத் அல்–கசாஸ்பெ தங்களிடம் இருப்பதாகவும் தீவிரவாதிகள் குறிப்பிட்டனர். சஜிதாவை விடுவிக்கவில்லை என்றால் முயாத்தையும் தலை துண்டித்து கொல்வோம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

எனினும், ஜோர்டான் நாட்டு விமானி முயாத்தை அவர்கள் தங்களின் வீடியோ காட்சிகளில் காண்பிக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு அடி பணிய ஜோர்டான் மறுத்துவிட்டது.
தலையை துண்டித்தனர்
இதற்கிடையே கோட்டூவை தலை துண்டித்து கொலை செய்யப் போவதாக தீவிரவாதிகள் விடுத்திருந்த காலக் கெடு நேற்று முன்தினம் (31–ந்தேதி) முடிவடைந்தது. எனினும் தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு ஜப்பான் செவி சாய்க்கவில்லை.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோட்டூவையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையைத் துண்டித்து படுகொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை அவர்கள் வலைத் தளங்களிலும் வெளியிட்டனர்.
தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர், செய்தியாளர் கென்ஜி கோட்டூ என்பதை வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஜப்பான் பாதுகாப்பு மந்திரி நகடானி நேற்று உறுதிப்படுத்தினர்.

சபதம் ஏற்போம்
தங்களது நாட்டின் 2–வது பணயக் கைதியும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்தார்.

‘‘இந்த தீவிரவாதிகளை ஒரு போதும் நான் மன்னிக்க மாட்டேன். சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்த படுகொலைகளுக்கு காரணமானவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவோம். தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு எந்த வகையிலும் ஜப்பான் அடி பணியாது’’ என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘ஜப்பானிய செய்தியாளர் கென்ஜி கோட்டூவை தீவிரவாதிகள் கொலை செய்தது கொடூரமான செயலாகும். ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு நிர்மூலமாக்கும் வரை அவர்கள் மீதான நடவடிக்கைகளை தொடர நாம் சபதம் எடுப்போம்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இங்கிலாந்து பிரான்ஸ் நாடுகளும் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.

மீட்கச் சென்றபோது சிக்கியவர்
ஏற்கனவே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட யுக்கவா கடந்த ஆகஸ்டு மாதம் சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் தீவிரவாதிகளிடம் பிடிபட்டார். அவரை மீட்டு வருவதற்காக கோட்டூ ஜப்பானில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் வழியாக சிரியா சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் 25–ந்தேதி சிரியா நாட்டின் எல்லையை கடந்து ரக்கா நகருக்கு சென்ற தான் பாதுகாப்பாக இருப்பதாக தனது நண்பர்களிடம் கோட்டூ தெரிவித்து உள்ளார். ஆனால் அவரையும் தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்து கொலை செய்து விட்டனர்.
கருணையும், தைரியுமும்...
தீவிரவாதிகளால் தனது மகன் கொல்லப்பட்டது குறித்து கோட்டூவின் தாயார் ஜூன்கோ இஷிடோ கூறுகையில், ‘மகனின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மிகவும் துயரத்தில் இருக்கிறேன். எனது வேதனையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. எனது மகன் சக நாட்டவரை
 காப்பாற்றச் சென்றுதான் உயிரை பறிகொடுத்து இருக்கிறான். எனவே கோட்டூவின் கருணையையும், தைரியத்தையும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்’ என்றார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment