Search This Blog n

07 February 2015

தமிழக மீனவர்கள்படகுகளை விடுவிக்க நடவடிக்கை!

இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள தங்களது படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரின் கடிதத்திற்காக தமிழக அதிகாரிகள் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 2014-ம் ஆண்டு மீன்பிடி தடைகாலத்தில் இருந்து தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் 87 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை அந்த படகுகளை விடுதலை செய்யாமல் வைத்துள்ளனர்.
இந்த 87 விசைப்படகுகளையும், விடுதலை செய்ய கோரி தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த படகுகளை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள 87 விசைப்படகுகளை விடுவிக்க
 நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பதவியேற்றுள்ள புதிய அரசு 87 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்
இதன் அடுத்தகட்டமாக 87 படகுகள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றத்தின் வாயிலாக 87 படகுகள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 87 படகுகளை விடுவிக்கும் கடிதம்
 இந்திய தூதரக அதிகாரியிடம் இதுவரை வழங்கவில்லை. இதனால் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வலியுறுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment