Search This Blog n

04 February 2015

வசதி படைத்தவர்களுக்கு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு???

சமையல் எரிவாயு வினியோகத்தில் வசதி படைத்தவர்களுக்கு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை
வசதி படைத்தவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
சந்தை விலையில் எண்ணெய்
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெட்ரோல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி அதை சந்தை விலையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதே நேரம் டீசலுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் தொடர்ந்தது.
மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றபின்பு டீசல் மீது விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளையும் நீக்கி அதை சந்தை விலையில் விற்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.
மானிய சிலிண்டர்
இதைத் தொடர்ந்து சமையல் எரிவாயுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போது, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஒரு நுகர்வோர் அதிக பட்சமாக ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் ரூ.410 முதல் ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நிதி இழப்பை தவிர்க்க...
அதே நேரம் சமையல் எரிவாயுக்கு அளிக்கப்படும் மானியத்தால் மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.46,500 கோடி வரை நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே இதில் கணிசமான தொகையை தக்க வைத்துக் கொள்வதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.இதன் முதல் கட்ட நடவடிக்கையாக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமும் அதற்கு மேலும் உள்ளவர்களுக்கு ரத்து செய்ய மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது
30 சதவீத வருமான வரி
தற்போது ரூ.10 லட்ச ரூபாயும் அதற்கு மேலாகவும் வருமானம் ஈட்டுபவர்கள் அதிக பட்சமாக 30 சதவீத வருமான வரி செலுத்தி வருகின்றனர். இனி இந்த சதவீத அளவிற்கு வருமான வரி செலுத்துவோர் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை 
பெற முடியாத நிலை ஏற்படும்.
இவர்கள் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தை விலையான ரூ.880–க்குத்தான் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இதற்கான விரிவான திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment