Search This Blog n

15 February 2015

கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி..

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தா, கடந்த ஆகஸ்டு மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஏவுகணைகளை கையாளும் திறன் வாய்ந்த இந்த கப்பலில் இருந்து நேற்று முதன் முறையாக பிரமோஸ் ஏவுகணை செலுத்தி பார்க்கப்பட்டது.
அதன்படி 290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கக்கூடிய பிரமோஸ் ஏவுகணை நேற்றைய சோதனையில் பயன்படுத்தப்பட்டது.
 கோவா கடற்பகுதியில் நடந்த இந்த சோதனையில் குறிப்பிட்ட இலக்கை எந்த வித இடையூறும் இன்றி ஏவுகணை துல்லியமாக சென்று தாக்கியது.
இந்திய–ரஷிய கூட்டு தயாரிப்பான இந்த பிரமோஸ் ஏவுகணைகள், ராணுவம், கடற்படையில் ஏற்கனவே 
இணைக்கப்பட்டு உள்ளது.
 சோதனை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து பிரமோஸ் ஏவுகணை குழுவினரை, அதன் தலைவர் சுதிர் மிஸ்ரா பாராட்டினார்.
ஒரு போர்க்கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 8 ஏவுகணைகளை செலுத்த முடியும். எனினும் 
ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பல்,
 ஒரே நேரத்தில் 16 ஏவுகணைகளை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் இருந்து செங்குத்தாகவும் ஏவுகணைகளை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment