14 October 2017
ஆசிரியர்களால் நியமிக்கப்பட்ட போலி ஆசிரியை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வேலம்பட்டி மலைக்கிராமத்தில் அரசுப்பள்ளியில் போலி ஆசிரியர் பணிபுரிந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலம்பட்டி அரசு ஆரம்ப பள்ளிக்கு நியமிக்கப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் பணிக்கு வருவதில்லை. இருவரும் தமக்கு பதிலாக கர்நாடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை ரூ.5,000 சம்பளத்துக்கு
நியமித்துள்ளனர்.
இரு ஆசியர்களால் நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக பெண்ணும் பல நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நாட்கள் பள்ளி பூட்டப்பட்டு கிடப்பதால் மலைக்கிராம குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தால் பின்தங்கியுள்ள வேலம்பட்டியில் போதிய போக்குவரத்து வசதிகளும் இல்லை. உரிய வசதிகள் இல்லாததால் வேலமடபட்டி குழந்தைகள் கல்வி கற்க வேறெங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
01 October 2017
மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த விவசாயிகள் கைது
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் இரண்டாவது கட்டமாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் 76 நாட்களை
தாண்டி நீடிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாள்தோறும் விதவிதமான போராட்டங்களை தமிழக விவசாயிகள்
நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 76-வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
Subscribe to:
Posts (Atom)