29 February 2020
காரில் விபச்சாரத்திற்காக கடத்தப்பட்ட சிறுமி.விரட்டிப் பிடித்த சகோதரர்
வில்லிவாக்கத்தில் இருந்து பாலியல் தொழிலுக்காக காரில் கடத்தப்பட்ட சிறுமியை, காரை விரட்டிப் பிடித்து காப்பாற்றியுள்ளார் அவரது சகோதரர்.சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் குட்டி யானை வாகனம் ஓட்டி வருகிறார். 28.02.20. நள்ளிரவு வழக்கம்போல் கோயம்பேடு பகுதியில் சவாரிக்காக சென்று
கொண்டிருந்தார். அப்போது ஒரு காரில் இரண்டு நபர்களோடு 15 வயது சிறுமி அமர்ந்திருப்பதை பார்த்துள்ளார். அந்த சிறுமி தனது நெருங்கிய உறவினரின் மகள் என்பது தெரியவந்தது.
தனக்கு தங்கை முறை என்பதால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் காரின் அருகே சென்று உள்ளே எட்டிப்பார்த்தார். தங்கையை பார்த்த அவர், ‘‘நீ எதற்காக காரில் அமர்ந்துள்ளாய்’’ என கேட்டுள்ளார். அதற்குள் காரில் இருந்த நபர்கள் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த சீனிவாசன் தனது வாகனத்தில் அவர்களை வேகமாக
பின்தொடர்ந்தார்.அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே காரின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் காரில் வந்தவர்களிடம், தனது தங்கையை
அழைத்து வந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறக்கவே அங்கு ரோந்து பணியில் இருந்த சூளைமேடுபோலீசார் அங்கு வந்தனர். அப்போது காரில் இருந்த நபர்களில் ஒருவரான பாசில் என்பவர்
தப்பியோடி விட்டார்.
மற்றொரு நபரான பிரகாஷ் என்பவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவரை சூளைமேடு போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிரகாஷ் மற்றும்
தப்பியோடிய பாசில் ஆகியோர் சிறுமியை விபச்சாரத்திற்காக வில்லிவாக்கத்தில் இருந்து சிட்டிபாக்கம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது தான் சிறுமியின் சகோதரர் சீனிவாசன் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார் அவரை சகோதரர் சீனிவாசனிடம்
ஒப்படைத்தனர்.
பொலீசாரின் விசாரணையில் பிரகாஷ் முன்னாள் குற்றவாளி என்பது தெரியவந்தது. அவரது காரை திறந்து பார்த்த போது உள்ளே ஒரு அடி நீள பட்டாக்கத்தி ஒன்று இருந்தது தெரியவந்தது.
தலைமறைவான பாசிலை போலீசார் தேடி வருகின்றனர்.சிறுமி தரப்பில் புகார் அளிக்க மறுத்ததால், பிரகாஷை கத்தி வைத்திருந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். சிறுமிக்கு அறிவுரை வழங்கப்பட்டு பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டார்.
18 February 2020
ரயிலில் சிவபெருமானுக்காக மினி கோயிலை உருவாக்கிய ரயில்வே அதிகாரிகள்
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் 16.02.2020. அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கி, அதைச் சிறிய கோயிலாக மாற்றியுள்ளனர்.
பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இரு நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். இந்நிலையில் வாரணாசியில் நேற்று காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில், மத்தியப் பிரதேசம் இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது ஐஆர்சிடிசி மூலம் தனியாரால் இயக்கப்படும் 3-வது ரயிலாகும். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் புறப்படும் இந்த மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில் லக்னோ வழியாக இந்தூர் வரை 1,102 கி.மீ.க்கு 19 மணிநேரம் பயணிக்கிறது.இந்த
ரயிலில் பி-5 எனும் பெட்டியில் படுக்கை 64-ம் எண்ணைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளனர். அந்த இருக்கையில் யாரும் அமராமல் அந்த இருக்கையைச் சிறிய கோயிலாகவும்
உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் நிருபர்களிடம் கூறுகையில் ‘வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி-5 பெட்டியில் 64-ம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்’
எனவும் அவர் தெரிவித்தார்.
15 February 2020
காதலனுடன் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம் கதறித் துடித்த காதலன்
தமிழகத்தில் பிறந்தநாளை கொண்டாட காதலர் தினத்தில் காதலனுடன் சென்ற 19 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.சேலத்தை சேர்ந்தவர் ரவினாய்குமார். இவருடைய மனைவி துளசி.
இவர்களது மகள் ஆர்த்தி (19).இவர்,
நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஆர்த்தியும் அசோக் (25) என்பவரும்
காதலித்து வந்தனர்.நேற்று முன்தினம் காதலி ஆர்த்திக்கு பிறந்தநாள் என்பதால் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று அவரது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாட அசோக் முடிவு
செய்தார்.இதையடுத்து, இருவரும் பைக்கில் வேகமாக பெங்களூரு நோக்கி சென்றனர். அப்போது திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.அந்தச் சமயத்தில் பின்னால் வந்த டிப்பர் லொறியின் சக்கரத்தில் சிக்கி ஆர்த்தி துடிதுடித்து
பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் அசோக் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண் எதிரே காதலி பலியானதை கண்டு அசோக் கதறி அழுதார்.பின்னர் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்த்தி உடலை
மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.விசாரணையில் சில வருடங்களுக்கு ஆர்த்தி தந்தை உயிரிழந்த நிலையில், தாய் அரவணைப்பில் வளர்ந்த அவர் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)