அவர் இன்று புதன்கிழமை முதல் கடலுக்குச் செல்வதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதியன்று ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்திலிருந்து 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் கச்சதீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரக ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர்.
அப்போது ராமேஸ்வரத்தை சார்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது விசைப்படகு மீது மோதி விசைப்படகை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். பின்னர் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 25 மீனவர்களையும் சிறைப்பிடித்து அவர்களின் 6 விசைப்படகை கைப்பற்றி சென்றனர்.
இலங்கை காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 ஆம் திகதியன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெப்ரவரி 3 வரை நீதிமன்ற யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை ஜனவரி 27 அன்று நடைபெறுவதற்கு முன்னதாகவே ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி, மீனவர்களை சிறையில் அடைத்ததைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்த போராட்டத்தில் குதித்தனர்.இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதி தேவதாஸ் கூறும்போது, கடந்த 27 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழக – இலங்கை இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு மீனவர்களும் எவ்வித நிபந்தனைமின்றி விடுவிப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை நான்காவது நாளோடு ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று புதன்கிழமையில் இருந்து கடலுக்கு செல்கிறோம் என்றார்.