20 January 2017
வரலாறு படைக்கும் நம் தமிழக இளைஞர்கள் கண் கொள்ளா காட்சி மெரினா – காணொளி
மெரினாவில் தற்போது லட்சக்கணக்கான மாணவர்கள், செல்போன் ஒளியை ஏந்தி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது போன்ற ஒரு அற்புதமான காட்சியை இதுவரை எந்த வரலாறு கண்டிருக்க வாய்ப்பில்லை. நம் தமிழக இளைஞர்கள் புது வரலாறு படைத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. கண்கொள்ளா காட்சி!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
02 January 2017
கஞ்சப்பள்ளியில் ஆஞ்சநேயரின் அபிஷேகம் கண்டு களித்த மயில்!!
கோவையில் கஞ்சப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தபோது, அங்கு பறந்து வந்த மயில் அபிஷேகத்தை முழுவதும் பார்த்துக் கொண்டு இருந்தது பக்தர்களிடையே பரவசத்தை
ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த வீர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார்.கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது.
வீர ஆஞ்சநேயர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். முன்னதாக வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பறந்து வந்த மயில் ஒன்று ஒவ்வொரு திரவியங்களால்
வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது அங்கு கூடியிருந்த பக்தர்களை பரவசமடையச் செய்தது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர
முருகனுக்கு மயில் வாகனம் என்றபோதும், இங்கு அமில் ஆஞ்சநேயருக்கு நடந்த அபிஷேக பூஜைகளைப் பார்த்தது ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்?
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பிரபல இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதல்வர் பதவியையும் அவரே ஏற்க வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பகிரங்கமாகே விருப்பம் தெரிவித்தார். அவரது கருத்துக்கு அதிமுகவினர் பலரும் ஆதரவு கூறினர்.
இந்நிலையில், இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து அவர் விரைவிலேயே பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று பேசப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலை சசிகலாவிடம் அளித்ததாக பிரபல இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு,
“திமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்கும் வகையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மாலை தனது ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம்
வழங்கினார்.அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி இறந்ததையடுத்து 3-வது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பொறுப்பேற்றார். அதையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் என அனைவரும் அவரை நேரில் சந்தித்து தீர்மானம் நிறைவேற்றி
ஆதரவு தெரிவித்தனர்.
அதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தீர்மானம் நிறைவேற்றி அவரிடம் நேரில் சென்று ஓ. பன்னீர் செல்வம் கொடுத்தார். அதன் பின்னர் சசிகலா அதிமுக தலைமை கழகத்திற்கு சென்று அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை இன்று காலை அறிக்கை விடுத்தார்.
இன்று திடீரென மாலை சசிகலா அழைப்பின் பேரில் போயஸ் தோட்டத்திற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் நேரில் சென்றனர். அப்போது, போயஸ் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ஜெயலலிதா திருஉருவப் படத்தை சசிகலா திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர், சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்கும் வகையில் முதல்வர் பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் நேரில் வழங்கினார்.
இதற்கிடையில், இன்று, மதியம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் பன்னீர் செல்வத்தை திடீரென நேரில் சந்தித்து பேசுகையில், அரசு நலத்திட்டங்களை குறித்து பேசியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால், அவர், பன்னீர் செல்வத்திடம் முதல்வர்
பதவியை ராஜினாமா செய்யாதீர்கள் என்று பேசியதாக சசிகலாவிற்கு தகவல் சென்றதையடுத்து ராஜினாமா கடிதத்தை வாங்கியதாக
தெரியவருகிறது.”
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Subscribe to:
Posts (Atom)