16 October 2020
இந்திய யாவில் 50 ஆயிரத்தை நோக்கி குறைந்து வரும் தினசரி பாதிப்புகள்
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 73 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 73,70,469 ஆக
உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,12,161 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64,53,780 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,04,528 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது
09 October 2020
முசோரியில் கோர விபத்தால் அந்தரத்தில் தொங்கிய பேருந்து.
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பொலிஸார் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி
அந்தரத்தில் தொங்கிய சம்பவம் உயிரை உறைய வைத்த விபத்தின் திக் திக் நிமிடங்கள் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.முசோரியில் கெம்ப்டி நீர்வீழச்சி அருகேயே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.
இந்தோ-திபெத் எல்லை அருகே பொலிஸார் பயணம் செய்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அந்தரத்தில்
தொங்கியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த 41 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.பிரேக் பிடிக்காததே
விபத்திற்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் கட்டிடத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கும் பேருந்தை பொலிஸார் மீட்கும் புகைப்படம்
வெளியாகியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)