29 June 2016
பத்திரிக்கை அலுவலகத்தில் அறிய வகை ஆந்தை தஞ்சம் புகுந்தது.!
கரூர் நகரில் காட்டு பகுதியில் இருக்கும் அறிய வகை ஆந்தை நகர் பகுதிக்கு திசைமாறி வந்தது கண்டு பொதுமக்கள் அறிய வகை ஆந்தையை ஆர்வத்தோடு பார்த்து சென்றனர்.
கரூர் நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயனைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கரூர் தீயனைப்புத்துறையினர் ஆந்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஓப்படைத்தனர்.
பத்திரிக்கை அலுவலகத்தில் ஆந்தை தஞ்சம் புகுந்ததை கண்ட பொது மக்கள் காடுகளை அழிப்பதை ஆந்தை புகார் செய்ய வந்துவிட்டதோ என வேடிக்கையாக பேசி சென்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
27 June 2016
எடையை குறைக்க முடியாமல் சிறுநீரகத்தை விற்க முனையும் தந்தை
குஜராத் மாநிலத்தில் 3 குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும்பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா . இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள். 4 வயதாகும் அனிஷா மெகாவின் எடை 56 கிலோ. யோகிதா(3வயது) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3வயது) 20 கிலோ
எடையுடன் உள்ளனர்.
கைக்குழந்தை பருவத்திலேயே 3 பேரும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு ஒரு வயதை கடப்பதற்கு உள்ளாகவே 12 கிலோ எடையை சர்வசாதாரணமாக கடந்து விட்டனர். தற்போது உலகிலேயே அதிக குண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் என்ற சாதனைக்கும் உரியவர்களாகி விட்டனர்.
ஒவ்வொரு மாதமும் இவர்களின் உணவுத் தேவைக்காக மட்டுமே 10 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமாக தேவைப்படுவதால் நந்த்வனாவின் குடும்பம் வறுமையில் தள்ளாடத் தொடங்கியது. இவர்களின் பசிப்பிணியை போக்கிட அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற தகவல் கடந்த ஆண்டு ஊடகங்களில் பரவியது. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியில் மூவருக்கும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது.
சிகிச்சை முடிந்து சில மாதங்கள் வரை இவர்களின் உடல் கட்டுக் கோப்பாக இருந்தது. கடந்த சில மாதங்களாக மூவரும் மீண்டும் குண்டாகித் தொடங்கி விட்டனர். இதனால் நந்த்வனாவின் நிலைமை மறுபடியும் படுசிக்கலாகி விட்டது. குழந்தைகளின் உடல் எடையை குறைக்க சிறப்பு அறுவைசிகிச்சை மருத்துவர்களை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு
இருக்கிறார்.
குண்டு குழந்தைகள் குறித்து அவர் கூறும்போது, ‘‘இவர்களால் ஒரு நிமிடம் கூட பசியைத் தாங்கிக் கொள்ள முடியாது. குண்டாகிவிட்டதால் இவர்களால் நகரக் கூட முடிய வில்லை. எனது மனைவிக்கு சமையல் அறையே வசிப்பறையாகிப் போய்விட்டது. இவர்கள் எடை அதிகரிக்கும்
வேகத்தைப் பார்த்தால்
பயமாக இருக்கிறது. என் கண் முன்பே இவர்கள் சாவதை விரும்பவில்லை. எனவே, எனது சிறுநீரகத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் இவர்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்’’ என்கிறார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 26 June 2016
அழுகிய நிலையில் பூட்டிய வீட்டில் 4 உடல்கள் மீட்பு!
இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில், பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சின்ராஜ் என்பவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம்
வீசியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், சின்ராஜின் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, அழுகிய நிலையில் 4 உடல்கள் கிடப்பது கண்டு, அதுகுறித்து பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து அங்கிருந்த உடல்களை மீட்டு ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் சின்னராஜின் மனைவி பாண்டியம்மாள் (38) ,பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) ஆகிய 3 மகள்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தலைமறைவாகியுள்ள சின்ராஜை தேடி
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
21 June 2016
அண்ணன் தங்கையின் இழப்பை தாங்க முடியாமல் தீயில் குதித்தார்!
விழுப்புரம் மாவட்டத்தில் தங்கை இறந்த சோகம் தாங்கிகொள்ள முடியாமல் அண்ணன் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெங்கராம்பாளையத்தை சேர்ந்த குமார்(26) மற்றும் குமாரி ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள் ஆவார். தனது தங்கை குமாரி மீது குமார் அலாதி பிரியம் கொண்டவர்
குமாரிக்கு திருமணம் ஆகி தனது கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார், இந்நிலையில் குமாரிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, இதை அறிந்த குமார், அவரை பல மருத்துவர்களிடம் அழைத்து
சென்றுள்ளார்.
இந்நிலையில் குமாரி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுபற்றி அறிந்ததும் தனது குடும்பத்தினருடன் நல்லூர் பாளையத்துக்கு வந்த குமார், தங்கையின் உடலை பார்த்து
கதறி அழுதார்.
குமாரியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. குமாரியின் உடலை வீட்டில் இருந்து சுடுகாட்டிற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். குமார் அழுதபடியே உடன் நடந்து சென்றார். சுடுகாட்டில் குமாரியின் உடலை தகனம் செய்தனர்.
அப்போது துக்கம் தாங்காமல் குமார் கதறியபடியே, தங்கை குமாரியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் எரிந்த தீயில் குதித்தார். இதனால் அவர் மீது தீப்பற்றி எரிந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த உறவினர்கள், அவரை வெளியே இழுத்தனர். மேலும் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் குமாரின் உடல் முழுவதும் தீக்காயம்
ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கை இறந்த துக்கம் தாங்க முடியாமல், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட சிதையில் குதித்து அண்ணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
20 June 2016
அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி
இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மசோதாவை நிராகரித்த அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி
அமெரிக்காவின் மாபெரும் ராணுவ கூட்டாளி என்று இந்தியாவை அங்கீகரிக்க மறுத்துவிட்ட அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி வழங்கிஉள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட இரு நாடுகளின் கூட்டறிக்கையில், இந்தியாவை அமெரிக்காவின் ‘மாபெரும் ராணுவ கூட்டாளி’ என்று அமெரிக்கா அங்கீகரித்து இருந்தது. இதன்மூலம், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு கிடைத்து வரும் பாதுகாப்பு தொடர்பான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள், இந்தியாவுக்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, இந்த அந்தஸ்தை அமெரிக்க செனட் சபை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுதொடர்பாக, செனட் சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘தேசிய பாதுகாப்பு அதிகாரம் அளித்தல்’ சட்டத்தில், இந்தியாவை அமெரிக்காவின் மாபெரும் ராணுவ கூட்டாளியாக அங்கீகரிக்கும் முக்கிய திருத்தத்தை குடியரசு கட்சி செனட் உறுப்பினர் ஜான் மெக்கைன் தாக்கல் செய்தார். ஆனால், அந்த திருத்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால், இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட அந்தஸ்தை அமெரிக்க செனட் அங்கீகரிக்காத நிலை ஏற்பட்டது. அதே சமயத்தில், இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக செனட் உறுப்பினர்கள் ஜான் சுல்லிவன் தாக்கல் செய்த திருத்தம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானுக்கு நிதிஉதவி
இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மசோதாவை நிராகரித்துவிட்ட அமெரிக்க செனட் பாகிஸ்தானுக்கு நிதிஉதவி வழங்க அனுமதி வழங்கிஉள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு விரிவாக்க அங்கீகாரம் என்று பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியாக வழங்க அமெரிக்க செனட் அனுமதி வழங்கிஉள்ளது என்று பாகிஸ்தானின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
18 June 2016
விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ சிலை திறப்பு விழா
யாழில் இந்தியா நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானி யுமான டாக்டர் அப்துல்கலாமின் திருவுருவ சிலை யாழ்.பொதுநூலகத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
17.06.2016 ,அன்று காலை 11.30 மணிக்கு அப்துல்கலாமின் திரு உருவ சிலையை இலங்கைக்கான இந்திய உயஸ்த்தானிகர் வை.கே சிங்ஹா மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் இணைத்து திறந்துவைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொள்வார் என கூறப்பட்டிருந்த நிலையில் ஐனாதிபதி பின்னர் கலந்து கொள்ளவில்லை என்பதும் இங்கே குறிப்பிட்டத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
06 June 2016
பயங்கர விபத்து கிருஷ்ணகிரியில் 15 பேர் பலி!
கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வேலுமலையில், லொறி தனியார் பஸ் மற்றும் கார்
என்பன அடுத்தடுத்து ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில்
லொறின் டயர் வெடித்ததால் லொறியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
< இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> />05 June 2016
செதுக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை நீராட்டும் அதிசய நீர்
குற்றாலத்தில் அருவிகள் நீர் இன்றி காய்ந்து கிடக்கையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஒரேயொரு அம்மன் சிலைக்கு மட்டும் நீர் வருவது மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலமாகும். இந்த காலங்களில் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவது வழக்கம். ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.
இக்காலங்கள் போக ஜனவரி இறுதி முதல் மே மாதம் வரை அருவிகளில் தண்ணீர் வறண்டு போகும். தற்போது நீர் வறண்டு குற்றாலம் மெயின் அருவிகாட்சியளிக்கிறது. அருவியின் அனைத்து பகுதிகளும் வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரின்றி காய்ந்து
கிடக்கிறது.
இந்நிலையில் அருவிகொட்டும் பாறையில் முன்னோர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மீது தண்ணீர் கொட்டி நீராடும் சுற்றுலாப் பயணிகள் மீதும் தண்ணீர் விழுவது ஐதிகமானது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அருவி வறண்டுள்ளது. ஆனால் அருவியின் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு சிலைக்கு மட்டும் அதாவது “நிகம்பசூதனி அம்மன்” சிலைக்கு மட்டும் நீர் வருகிறது.
பாறைகளில் நீர்கசிவு உருவாகி அம்மன் சிலையை குளிர்வித்து வருகிறது. பாறை ஊற்று வழியாக மிகச் சரியாக இடைவிடாது நிகம்பசூதனி அம்மனுக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும் காட்சி பக்தர்களை அதிசயத்தில் ஆழத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>
02 June 2016
நல்லசாமி சவால் கள்’ போதைப்பொருள் என நிரூபிக்கத் தயாரா?
கள் போதைப்பொருள் என்று நிரூபிப்போருக்கு 10 கோடி சன்மானம் அளிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி.
நேற்று திருப்பூரில் பேட்டியளித்த அவர், ‘ கடந்த காலத்தில் கள்ளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஜெயலலிதா தற்போதைய தேர்தலில் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ‘கள்’ போதைப்பொருள் என சிலர் பேசிவருகிறார்கள். ‘கள்’ போதைப்பொருள் என நிரூபிப்போருக்கு 10 கோடி சன்மானம் வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார்.
எல்லா கட்சிகளும் மதுவிலக்கு என்று பேசிவரும் நிலையில் ‘கள்’ பற்றி வாய்திறக்க மறுக்கின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் கள்ளை ‘தேசிய மதுபானமாக அறிவிப்போம்’ என்று கூறியுள்ளது
குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
01 June 2016
மோடி. சுவிட்சர்லாந்து செல்கிறார் கருப்புப்பணத்தை மீட்பாரா?
பிரதமர் மோடி வரும் 4ஆம் தேதி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணமாகிறார். முதலில் ஆப்கானிஸ்தான், கத்தார் நாடுகளுக்குச் செல்லும் மோடி
அங்கிருந்து
ஸ்விட்சர்லாந்து செல்கிறார். அங்கு அந்நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். பயணத்தின்போது மோடி கருப்புப்பணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியக்குடிமகனுக்கும் 15 இலட்சம் பணத்தை பகிர்ந்தளிப்போம்’ என்று தேர்தலுக்கு முன்பு அறிவித்திருந்தார் மோடி. பிறகு,
ஆட்சிக்கு வந்த
சில மாதங்களில், ‘அது தேர்தலுக்குச் சொல்லப்பட்ட தந்திரம்’ என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதேபோல, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடுவும் அது சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோடி சுவிட்சர்லாந்து பயணம் போவது பரபரப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
Subscribe to:
Posts (Atom)