25 June 2015
நண்பன் வீடியோ எடுக்க, காதலி மீது வல்லுறவு..!
தமிழகத்தில் நடந்த கொடூரமான சம்பவம். நாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து கற்பழித்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் உறவினர் ஒருவர் கூறியதாவது : நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ளது பரசலூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்பகதூர்,
எம்.சி.ஏ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞன். ராஜ்பகதூரின் தங்கை பிரியாவும் அவர்களது எதிர்வீட்டில்
குடியிருந்த சரண்யாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தோழிகள். தோழியைப் பார்க்க அடிக்கடி எதிர்வீட்டுக்கு வருவார் சரண்யா. அதுதான் ராஜ்பகதூருக்கும் சரண்யாவுக்கும் காதல் பூக்கள் பூத்த தருணம். பார்வையில்
ஆரம்பித்த காதல் ஊரெல்லாம் சுற்றவைத்தது. ராஜ்பகதூர் வீட்டுக்கு விஷயம் தெரியவர, அவர்களும் எதிர்ப்பு காட்டவில்லை. ஒருநாள் ராஜ்பகதூர் வீட்டுக்குப் போனபோது அவரது செல்போனை யதேச்சையாக பார்த்திருக்கிறார் சரண்யா. அதில் பல பெண்களுடன் ராஜ்பகதூர் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இருக்க... அதிர்ந்துபோயிருக்கிறார் சரண்யா. அழுதபடியே வீட்டுக்கு ஓடிய சரண்யா, விரக்தியில் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். எப்படியோ அவரைக் காப்பாற்றிவிட்டனர். அழுதபடியே, தன் பெற்றோரிடம் ராஜ்பகதூர் பற்றி சொல்லியிருக்கிறார் சரண்யா. ‘கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சுதுன்னு சந்தோஷப்படு... இனி அவன்கூட பேசாதே’ என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள் பெற்றோர். அதில் இருந்தே ராஜ்பகதூருடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார் சரண்யா. சரண்யாவுக்கு உடனடியாக வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தார்கள். அவருக்கு ஒரு பையனுடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. சரண்யாவுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையின் வீட்டைத் தேடிப்போன ராஜ்பகதூர், ‘நீங்க நிச்சயம் பண்ணிட்டு வந்திருக்கும் சரண்யா என்னோட லவ்வர். நானும் அவளும் நிறைய சுத்தியிருக்கோம்... போட்டோவை பாருங்க’ என்று செல்போனில் வைத்திருந்த போட்டோக்களை காட்டியிருக்கிறார். நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது அந்தத் திருமண ஏற்பாடு. சரண்யாவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கடந்த 16-ம் தேதி ராஜ்பகதூரின் அப்பா ராஜாராமிடம் இருந்து சரண்யாவுக்கு போன். ‘‘என் பையன் செஞ்சது தப்புதான். எங்களை மன்னிச்சுடும்மா... நீ எங்க வீட்டுக்கு வா. உன் கண் முன்னாடியே எல்லா போட்டோவையும் அழிச்சுடுறோம்’’ என்று சொல்லியிருக்கிறார். சரண்யாவும் உடனே கிளம்பி ராஜ்பகதூர் வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கேதான் நிகழ்ந்திருக்கிறது அந்தக் கொடூரம். ‘‘ராஜ்பகதூர் வீட்டுக்கு சரண்யா போனதும், ‘என் பையனை லவ் பண்ற வரைக்கும் பண்ணிட்டு இப்போ வேணாம்னு வேற ஒருத்தனை கட்டிக்குவ... நாங்க பார்த்துட்டு சும்மா இருக்கணுமா’ என்று அந்தப் பையனோட அப்பா ராஜாராம் கோபமா பேசியிருக்காரு. சரண்யா கன்னத்துல ஓர் அறைவிட்டு, ரூமுக்குள்ள தள்ளியிருக்காரு ராஜாராம். ‘போய் விளையாடுடா... இனி இவளை எவன் கட்டிக்கிறான்னு பார்க்கலாம்’ என்று அந்த ரூமுக்குள் தன் மகனை அனுப்பி கதவை சாத்தியிருக்காரு. ரூமுக்கு வெளியில ராஜாராமும் அவரோட மனைவியும் காவலுக்கு நின்னு இருக்காங்க. அந்த ரூமுக்குள்ள ராஜ்பகதூரோட கூட்டாளியான ராமராஜன் கையில் கேமராவை வெச்சுட்டு ஒரு ஓரமா உட்கார்ந்து இருந்திருக்கான். சரண்யாவை கட்டில்ல தள்ளி வேட்டையாடி இருக்கான் அந்த மிருகம். அதை கொஞ்சமும் கூசாமல் வீடியோ எடுத்திருக்கான் ராமராஜன். எல்லாம் முடிச்சுட்டு, வெளியில வந்த ராஜ்பகதூரை, அவங்க அப்பா கைகொடுத்து பாராட்டியிருக்காரு. ‘இனி நீ எவனை வேணும்னாலும் கட்டிக்கோ... இந்த வீடியோவை அடுத்த நிமிஷமே நெட்ல போடுவோம்!
இங்கே நடந்ததை வெளியில யாருகிட்டயாவது சொன்னாலும் வீடியோ வெளியில வந்துடும். அப்புறம் உங்க குடும்பமே தூக்குல தொங்க வேண்டியதுதான்! முகத்தை கழுவிட்டு வீட்டுக்குப் போ’னு ராஜாராம் மிரட்டியிருக்காரு. வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் யாருகிட்டயும் பேசாம இருந்திருக்கா சரண்யா. அதுக்கப்புறம்தான் அவங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லி
அழுதிருக்கா’’ என்று சொன்னார் சரண்யாவின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவர். இனி அமைதியாக இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்த சரண்யா குடும்பத்தினர் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ராஜ்பகதூரையும் வீடியோ எடுத்த ராமராஜனையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். ராஜ்பகதூரின் பெற்றோர்
தலைமறைவாகிவிட்டனர். ‘‘ராஜ்பகதூர் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன்களில் சரண்யாவுடன் எடுத்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் இருந்தன. அது மட்டுமல்லாமல் வேறு சில பெண்களுடன் அவன் எடுத்துக்கொண்ட படங்களும் இருந்தன. சரண்யாவை வீட்டுக்கு
வரவழைத்து, ‘இனி நீ எவனையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படியே பண்ணிகிட்டாலும் இந்த வீடியோவை நெட்ல போடுவோம்’ என்று ராஜ்பகதூர் பேசிய
ஆடியோவும் அதில் பதிவாகி இருக்கிறது’’ என்று போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட ராஜ்பகதூர் போலீஸாரிடம் கூறியதாவது : ‘‘நான் காதலிச்சவளை எப்படி
இன்னொருத்தனுக்கு விட்டுத்தர முடியும்? ஊரெல்லாம் என்னோட சுத்துவா... போட்டோ எடுத்துக்குவா... கல்யாணம் மட்டும் வேற ஒருத்தனை பண்ணிக்குவாளா? நான் நாலு
புள்ளைங்களோட போட்டோ எடுத்தா இவளுக்கு என்ன கசக்குது? கல்யாணம் இவளைத்தானே பண்ணிக்க நினைச்சேன். எங்க அப்பாதான் தைரியமா நீ கை வைடா பார்த்துக்கலாம்னு
சொன்னாரு. அந்த தைரியத்துலதான் தப்பு செஞ்சுட்டேன். இப்போ யோசிச்சுப் பார்த்தா நான் செஞ்சது தப்புன்னு தெரியுது. அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு விட்டிருக்கணும். அப்பா பேச்சைக் கேட்டதுதான் இதுல தப்பா போயிடுச்சு’’ என்று கூறியுள்ளான்
17 June 2015
இலங்கை இந்தியா .பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அகர்தலாவில் இருந்து பங்களாதேஸின் டாக்கா, பூட்டான், இந்தியா-நேபாளம் ஆகிய இடங்களுக்கு இடையில் பேரூந்து சேவை உடன்பாடு செய்துக்கொள்ளப்பட்ட நிகழ்வில் இந்த தகவலை,
இந்திய மத்திய வீதிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான வீதி அமைப்பை பாக்கு நீரிணையின் ஊடாக பாலம் அமைப்பதன் மூலம் மேற்கொள்ள முடியும். அத்துடன் கடலுக்கடி சுரங்கம் மூலம் மேற்கொள்ளமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கையின் எல்லைக்கும் இடையில் 23 கிலோமீற்றர் தூரமே உள்ளது.
பாம்பன் நகரில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு 29 கிலோமீற்றர் தூரமே உள்ளது.
இந்தநிலையில், குறித்த பேரூந்து மற்றும் ரயில் சேவைகளுக்கான திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒப்புதலுக்காக
வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிர்மாண நிதியாக 23 ஆயிரம் கோடி ரூபா தேவையென்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்
14 June 2015
தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் கஞ்சா கருப்பு ???.
கஞ்சா கருப்பு …இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்…
கஞ்சா கருப்பு …
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்…
பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென
தனி இடத்தை பிடித்தவர் ….இன்று அவர் வேல்முருகன்
போர்வெல்ஸ் என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்….. சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் பின் தான் வாங்கிய அந்த போர்வெல் லாரியை பயன்படுத்தி தென் மாவட்ட பகுதியில் மக்களுக்காக எந்தவித பைசாவும் வாங்காமல் இதுவரை 55 போர்வெல் குழாய் அமைத்து தந்து இருக்கிறார்… இன்னமும் தந்து கொண்டு இருக்கிறார்
ஒரு போர்வெல் போட குறைந்தது 20,000 முதல் 30,000 வரை ஆகுமாம். அந்த பகுதியில் எந்த மக்கள் (ஏழை ) வந்து கேட்டாலும் அவர்களுக்கு தம் சொந்த செலவில் போர்வெல் போட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார் அது போக தன் பிறந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் திறந்து இலவச கல்வி தந்து கொண்டு இருக்கிறார் அந்த படிக்காத மேதை
அவரின் பள்ளியை கவனித்து வருவது அவர் மனைவி சங்கீதா. இவர் ஒரு physiotherapist உண்மையில் இந்த செய்தி கேள்விப்பட்டு நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார் என்றால் அவரின் மனிதம் எவ்வுளவு உயர்ந்தது
12 June 2015
காதலர்கள் மரத்தில் தூக்கிட்டு சாவு
உடும்பி மாவட்டம் பிரம்மாவர் காவல் சரகத்தில் காதலர்கள் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் சாயகட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள் திவாகர் (27), சைத்ரா (18). காதலர்களான இவர்கள் இருவரின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார்கள்.
இது குறித்து வழக்குப் பதிந்த பிரம்மாவர் போலீஸôர், இருவரையும் தேடி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிரம்மாவர் காஜரஹள்ளி பகுடியில் உள்ள மரத்தில் திவாகர், சைத்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்த போலீஸôர், இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். இது குறித்து பிரம்மாவர் போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர்.
மருத்துவ சேவைகள்: முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் ரூ. 94.72 கோடி மதிப்பிலான சேவைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம்:
நீலகிரி மாட்டம் உதகமண்டலம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் சேவை தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவமனைகளில் ரூ. 3 கோடியே 90 லட்சம் செலவில் சி.டி.ஸ்கேன் கருவிகள், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1 கோடி 44 லட்சம் செலவில் நவீன மைக்ரோஸ்கோப் கருவி ஆகியவற்றின் சேவையும் தொடங்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையம்:
திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேனி, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர் ஈரோடு, அரியலூர், வேலூர், கோவை, தருபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திண்டுக்கல், விருதுநகர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 6. 48 கோடி மதிப்பில் கட்டடங்கள், 44 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 7 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் செவிலியர் குடியிருப்புகள், 17 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.14 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டடங்கள், 28 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 6 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் மகப்பேறு சிகிச்சைக்கான கட்டடங்கள், 5 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டடங்கள், பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்துக்கு ரூ. 1 கோடி மதிப்பில் மகளிர், குழந்தைகள் நல திறன் மேம்பாட்டுக் கூடம், தேனி மாவட்டம் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 2 கோடியே 30 லட்சம் மதிப்பில் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியில் ரூ.11 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தேர்வுக்கூடம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 5 கோடியே 45 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான விடுதிக் கட்டடம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 55 லட்சம் செலவில் நுண்கிருமியியல் ஆய்வுக்கூடம், பலதுறை ஆராய்ச்சி நிலையக் கட்டடம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
இதுதவிர, செய்யார், விருதாச்சலம், கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனை, மன்னார்குடி, மயிலாடுதுறை, தாராபுரம், பல்லடம், பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆகிய அரசு மருத்துவமனைகளில் ரூ.17 கோடியே 74 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்டப் பிரிவுகள், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இயல்கூடக் கட்டடடம் என மொத்தம் ரூ. 80 கோடியே 92 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார்.
ஆம்புலன்ஸ்
இதுதவிர ரூ. 3 கோடியே 46 லட்சம் செலவில் 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார். இதில் 13 பச்சிளங்குழந்தைகள் ஆம்புலன்ஸ், 4 மலைப்பகுதி, கடற்கரை பகுதிகளில் பயணிக்கும் ஆம்புலன்ஸ், 8 சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடங்கும்.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் ஞானதேசிகள், அரசு ஆலோசகர் டி.பி.பூனாட்சி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
04 June 2015
மீண்டும் சிறை செல்லப் போகும் ஜெயலலிதா?
ஜெயலலிதாவின் வழக்குத் தீர்ப்பானது ஒரு கணக்குக் கூட்டல் தவறைக் கொண்டுள்ளது. மோசடி மூலம் சேர்க்கப்பட்டதான சொத்து, முழுச் சொத்திலும் 10 வீதத்திற்கு குறைவாக இருந்ததாக கூறியே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சமர்ப்பித்த வங்கிக்கடன் 10.67 கோடியாக இருக்க, நீதிபதி தனது கணக்குப் பார்த்தலில் வங்கிக் கடனை 24.17 கோடி எனக் குறிப்பிட்டு தீர்ப்புக் கூறியிருக்கின்றார்.
இந்த மேன்முறையீடு இந்திய நீதித்துறைக்கும் அரசியலிற்குமிடையேயான போட்டியாக அமையப் போகின்றது
Subscribe to:
Posts (Atom)