31 March 2015
ஏழுமலையான் கோவிலில் கவர்னர் ரோசய்யா சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தார். அவர், திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அவருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர்.
முன்னதாக திருமலைக்கு வந்த தமிழக கவர்னரை திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணா, வரவேற்பு அதிகாரிகள் கோதண்டராமாராவ், தாமோதரம், அதிகாரி செல்வம் மற்றும் பலர்
வரவேற்றனர்.
30 March 2015
குலுங்கிச் சிரித்த குஷ்பு ஈவிகேஎஸ் பேச!!!
சென்னையில் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாட்ஷா பதவியேற்பு விழாவில் நடிகை குஷ்புவை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்துள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
சென்னை, தமிழக காங்கிரசின் சிறுபான்மை பிரிவு தலைவராக அஸ்லாம் பாட்ஷா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நடிகை குஷ்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது நடிகை குஷ்பு வந்ததும் அரங்கத்தில் இருந்த தொண்டர்கள் பலர் உற்சாகத்தில் விசில் அடித்தனர்.
பின்னர் இளங்கோவன் பேசும் போது
அதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டு, நமது செய்தி தொடர்பாளர் குஷ்பு ரசிக்கத் தெரிந்தவர். அவரும் நன்றாக விசில் அடிக்க தெரிந்தவர்தான் என்று குறிப்பிட்டார்.
அவர் இவ்வாறு சொன்னதும் கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. அதைப் பார்த்து குஷ்பு குலுங்கி குலுங்கி சிரித்தார்
மாணவி பலாத்காரம்: கைதான பல்கலை பேராசிரியருக்கு ஆண்மை சோதனை!!!
புதுச்சேரி: புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச சிடி காட்டி பலாத்காரம் செய்த பல்கலைக்கழக பேராசியருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக இருந்து வருபவர் மதியழகன் (வயது 58). இவரது வீடு லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ளது.
பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமி 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு மதியழகன் டியூசன் சொல்லி கொடுத்தார். அத்துடன் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். இதுபற்றிய புகாரின் பேரில் சில தினங்களுக்கு முன்னர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதியழகன் வீட்டில் உள்ள கம்ப்யூட்டர், மற்றும் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் ஆகியவற்றில் சோதனை செய்யப்பட்டதில் அவர் ஏராளமான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்திருப்பது தெரியவந்தது. அதற்கான விபரங்களை போலீசார் கைப்பற்றினார்கள். பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அறை சீல் வைக்கப்பட்டது.
சுத்தம் செய்ய அழைத்துச் சென்று
பேராசிரியர் அந்த மாணவியை தனது அலுவலகத்துக்கு அழைத்து செல்லும்போது அந்த மாணவியின் பெற்றோரிடம் என் அலுவலகத்தில் கோப்புகளெல்லாம் சுத்தம் செய்யாமல் தூசியாக இருக்கிறது. அதை சுத்தம் செய்ய வேண்டும் எனவே அதற்கு உதவி செய்வதற்காக உங்கள் மகளை அழைத்து செல்கிறேன் என கூறியிருக்கிறார்.
ஆபாச சிடிக்கள்
ஒவ்வொருமுறை அழைத்து செல்லும்போதும் இதே தகவலைத்தான் பெற்றோரிடம் சொல்லியுள்ளார். அலுவலகத்தில் சிறுமியிடம் உனக்கு கம்ப்யூட்டர் கற்று தருகிறேன் என கூறி கற்று தருவதுபோல நாடகமாடி உள்ளார். அப்போது ஆபாச படங்களை ஓடவிட்டு அதை மாணவியை பார்க்க வைத்துள்ளார். அத்துடன் பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.
4 பிரிவுகளில் வழக்கு
இந்த தகவல் அனைத்தும் போலீஸ் எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை பலாத்காரம் செய்திருப்பது உறுதியாகியிருப்பதால் அவர் மீது பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்மை பரிசோதனை
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி மதியழகனுக்கும் ஆண்மை பரிசோதனை நடத்துவதற்காக லாஸ்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
வெடித்த போராட்டம்
பேராசிரியர் மதியழகனுக்கு எதிராக நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. இன்றும் அதுபோல் போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிஞ்சி நகரில் உள்ள அவரது வீடு மீது தாக்குதல் நடைபெறலாம் என கருதி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 மாணவிகள் புகார்
நேற்று போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பேராசிரியர் மதியழகன் தன்னிடம் படிக்கும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அது சம்மந்தமாக அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். எனவே பல்கலைக்கழக மாணவிகளிடம் பாலியல் தொல்லை நடைபெற்றுள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மது விற்ற வாலிபருக்கு சராமரி அடி உதை!!!
திருட்டுத்தனமாக மதுபாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞர் தாக்கப் பட்டது தொடர்பாக நாகர்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி பகுதியில் திருட்டித்தனமாக மது பாட்டில்கள் மற்றும் போதை பொருள்கள் விற்கப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,
அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உரிமம் இல்லாமல் மது விற்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து ராமச்சந்திரனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தன்னை போலீசில் சிக்க வைத்தது அதே பகுதியை சேர்ந்த அருள், ஜோசப், சுரேஷ், அண்ணாத்துரை ஆகியோர் என கருதினார். எனவே, அவர்களுடன் ராமச்சந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்த நான்கு பேரும் சேர்ந்து ராமச்சந்திரனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் 4 இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருட்டு தனமாக மது விற்பனை செய்த ராமசந்திரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்
இண்டர்நெட் வசதி; விரைவில் இந்திய விமானங்களில்
இந்தியாவி்ல் விமானங்களில் பறக்கும் போது வை-ஃபை இண்டர்நெட் பயன்படுத்தும் வசதியை தற்போது எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களே வழங்கி வருகின்றன. பெரும்பாலான விமான பயணிகள் நீண்டகாலமாக இந்த இன்பிளைட் வை-ஃபை வசதியை எல்லா விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விரைவில் இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, விமானத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக டெலிகாம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. எனவே, விரைவில் முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பிராண்ட்பேண்ட் வசதிகளை வழங்கி வரும் ஆபரேட்டர்களுக்கு இதற்கான அனுமதி வழங்குவது குறித்தும் டெலிகாம் துறை யோசித்து வருகிறது.
விமானங்களில் பறந்து கொண்டிருக்கும் போது மொபைல் போன்களை பிளைட் மோடில் பயன்படுத்துவதற்கும் கூட விதிமுறைகள் இருக்கிறது. ஆகவே, வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொடுக்க விதிமுறைப்படி அனுமதி பெற வேண்டும். பொதுவாக, கிரவுண்ட் ஸ்டேஷனில் உள்ள பிராண்ட்பேண்ட் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும் சர்வரிலிருந்து சாட்டிலைட் வழியாக வானில் விமானத்திற்கு
இண்டர்நெட் வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பல முன்னணி விமான நிறுவனங்கள் இந்த வை-ஃபை வசதியை வியாபார யுக்தியாக செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ஏர்-கிரவுண்ட் தொழில்நுட்பம் மூலம் 3.1 Mbps வேகத்தில் வழங்கும் இண்டர்நெட்டை காஸ்ட்லியாகவும், 256 Kbps குறைவான வேகத்தில் இயங்கும் இண்டர்நெட்டை குறைந்த கட்டணத்திலும் வெளிநாட்டு விமானங்கள் வழங்குகிறது.
ஏற்கனவே, மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள 30 முக்கிய ஏர்போர்ட்டுகளில் இலவச வை-ஃபை இண்டர்நெட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. முதல் 30 நிமிடங்களுக்கு இலவசமாகவும் அதன்பின், பயன்படுத்த குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது
கணவரை வெறுப்பதற்கு சமம் தாலியை அறுப்பது!!!
திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ''புகழுக்கு களங்கம் விளைவிக்கிற செயலாகத்தான் இதை நான் பார்க்கிறேன். மக்களால் மறந்துபோன திராவிட கொள்கைகளை மீண்டும் நினைவுபடுத்த வீரமணி இப்படி ஒரு காரியத்தை கையில் எடுத்துள்ளார். தாலி என்பது பா.ஜனதா அல்லது இந்து இயக்கங்களின் பிரச்சினை அல்ல.
ஒவ்வொரு சகோதரியின் உணர்வு பிரச்சினை. எல்லா மதத்தவரும் தாலியை புனிதமாக சுமக்கிறார்கள். ஆபரேசன் தியேட்டரில் கூட தாலியை கழட்டி வைக்க தயங்கும் சகோதரிகளின் உணர்வோடு இவர்கள் விளையாடுகிறார்கள். உணர்வுப்பூர்வமான விசயத்தை கூட கொச்சைப்படுத்தும் செயலாகத்தான் இது கருதப்படும். வீரமணி போன்றவர்கள் ஆழ்ந்து சிந்திக்க கூடியவர்கள். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இதற்கு என்ன அவசியம் வந்தது? மக்களையும், அவர்களின்
உணர்வுகளையும் உதாசீனப்படுத்தும் மனநிலையில்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கான எதிர் கருத்துக்களையும், எதிர் விளைவுகளையும் வீரமணி நிச்சயம் சந்திப்பார். நாங்கள் போராட வேண்டியதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு பெண்களும் கணவனின் அடையாளமாக தனது உயிரினும் மேலாக மதித்து சுமக்கும் தாலியை
அறுப்பதும், வெறுப்பதும் கணவனை வெறுப்பதற்கு சமமாகத்தான் கருதுவார்கள். எனவே இதற்கெல்லாம் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை விட தமிழகத்தில் உள்ள எல்லா பெண் சகோதரிகளும் வெகுண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்''எனத் தெரிவித்துள்ளார். கீழ்த்தரமான செயல்: இது தொடர்பாக பா.ஜனதா துணைத் தலைவர் வக்கீல் வானதி சீனிவாசன்
கூறியதாவது:- திராவிடர் கழகம்
பெரியாரின் கொள்கை வழி நடப்பது. அவர் நிறைய விசயங்கள் சொல்லி இருக்கிறார். ஆனால் அடுத்தவர் உணர்வுகளை புண்படுத்த சொல்லவில்லை. சாதி மறுப்பு அவரது கொள்கைகளில் முக்கியமானது. திராவிடர் கழகமும் சரி, திராவிடர்கழகத்தை தாய்க்கழகமாக கொண்டு உருவான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளானாலும் சரி, சாதி பாகுபாட்டை களைய முழு மனதுடன் முன்வரவில்லை. அதற்கான திராணியும் இல்லை. பெண்களின் உணர்வு பூர்வமான
விசயமான தாலியை கொச்சைப்படுத்தி அறுக்க சொல்வது மிக கீழ்த்தரமான, கேவலமான செயல். தமிழர் பண்பாடு, தேசியம், கலாச்சாரம் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள். இந்த பண்பாட்டில் திருமணத்தின் அடையாளமாக தாலி விளங்குகிறது. அது குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மதம் மாறி சென்றவர்களும் தங்கள் மத சின்னங்களுடன் தாலியை
அணிந்து புனிதமாக கருதுகிறார்கள்.
பகுத்தறிவு என்று சொல்லி பெண்களின் உணர்வு சம்பந்தப்பட்ட செயல்களோடு விளையாடுவது தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. எதிர்விளைவுகளை உருவாக்கும். திராவிடர் இயக்க கொள்கைகள் சிறிது சிறிதாக மங்கிவரும் நிலையில் ஒட்டு மொத்தமாக மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படுவதற்கான அடுத்த முயற்சியாகத்தான் இது அமையும்' என்றார்.
29 March 2015
கர்நாடகம் அணை கட்ட அனைத்து கட்சிகள் எதிர்ப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் 55 தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு; ஒரே குழுவாக சென்று, சட்டசபை தீர்மானத்தை வழங்கினார்கள்
கர்நாடக அரசு காவியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்ட தீர்மானித்து இருக்கிறது.
அணை கட்ட கர்நாடகம் முடிவு
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரின் பங்கை ஏற்கனவே கர்நாடகம் முறைப்படி வழங்க மறுத்து வரும் நிலையில் மேலும் 2 அணைகளை கட்டினால், தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும். இதனால் கர்நாடகம் புதிதாக 2 அணைகள் கட்டுவதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. விவசாயிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
தமிழக சட்டசபையில் தீர்மானம்
அத்துடன், கர்நாடகம் அணைகள் கட்ட அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த தீர்மானத்தை அவரிடம் வழங்குவார்கள் என்று அப்போது முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் நேற்று முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்றது.
55 எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு
இந்த நிலையில், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தபடி, பாராளுமன்ற இரு சபைகளையும் சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் 54 பேர் நேற்று டெல்லியில் பாராளுமன்ற சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான மு.தம்பிதுரை தலைமையில் குழுவாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்கள். இவர்களில் 48 பேர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 4 பேர் தி.மு.க.வையும், ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியையும் (டி.கே.ரங்கராஜன்), மற்றொருவர் பாட்டாளி மக்கள் கட்சியையும் (டாக்டர் அன்புமணி ராமதாஸ்) சேர்ந்தவர்கள்.
புதுச்சேரியைச் ராதாகிருஷ்ணன் எம்.பி.யும் (என்.ஆர்.காங்கிரஸ்) இந்த குழுவினருடன் சென்று இருந்தனர்.
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 55 எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யான அம்பேத் ராஜனும் தமிழக எம்.பி.க்கள் குழுவினருடன் சென்று இருந்தார். இவர் தமிழர் ஆவர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறவில்லை.
தடுத்து நிறுத்த கோரிக்கை
எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியுடன் 25 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் தமிழக சட்டசபையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை
அமைக்க வேண்டியும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மேற்கொண்டு வரும் நடவடிக்கையை தடுப்பது குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்கி கூறினார்கள். அந்த தீர்மானத்தையும் அவரிடம் வழங்கினார்கள்.
அப்போது ஒவ்வொரு கட்சியின் சார்பில் ஒருவரை பேசுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அதன்படி மு.தம்பிதுரை (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.) உள்ளிட்டோர் பேசினார்கள்.
மோடி உறுதி
கர்நாடகம் அணைகள் கட்டும் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில முதல்–மந்திரிகளையும் அழைத்து பேசுமாறு அப்போது பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக எம்.பி.க்கள் கூறியதை ஆர்வத்துடன்
கேட்டு அறிந்த பிரதமர் மோடி, சம்பந்தப்பட்ட துறையிடம் தற்போதைய நிலை குறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்க ஏற்கனவே அறிவுறுத்தி இருப்பதாகவும் மற்றும் இதுகுறித்து மேலும் பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்தார்.
தி.மு.க. சார்பில் மனு
இந்த சந்திப்பின் போது தி.மு.க.வின் சார்பில் பிரதமரிடம் தனியாக ஒரு மனுவும் கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை போர்க்கால அடிப்படையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், மேகதாது பகுதியில் கர்நாடகம் புதிதாக இரு அணைகளை கட்ட முயற்சிப்பது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும், இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தையும் மீறும் செயல் என்பதால் அந்த முயற்சியை உடனடியாக நிறுத்தும்படி அந்த மாநிலத்துக்கு அறிவுறுத்துமாறும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சந்திப்பு முடிந்த பின் எம்.பி.க்கள் வெளியே வந்தனர்.
மு.தம்பிதுரை
அப்போது துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான மு.தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:–
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி வழங்குவது இல்லை என்றும், கோர்ட்டு தீர்ப்பை மதித்து நடப்பது இல்லை என்றும் பிரதமரிடம் கூறினோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு கர்நாடகம் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.
நாங்கள் கூறிய விவரங்களை கேட்டு அறிந்த பிரதமர் மோடி, விரைவில் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு மு.தம்பிதுரை கூறினார்.
நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு???'
ஐதராபாத் கோர்ட்டு உத்தரவின்படி, நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருதிஹாசன் மீது வழக்கு
ஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நாகார்ஜுன்–கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்க நடிகை சுருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். படப்பிடிப்புக்கு தேதிகளை ஒதுக்கி தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது தொடர்பாக சுருதிஹாசனுக்கு எதிராக ஐதராபாத் 25–வது கூடுதல் தலைமை சிட்டி சிவில் கோர்ட்டில் பட நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.
மோசடி வழக்கு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடுத்துள்ள நிறுவன படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு (ஏப்ரல் 8–ந் தேதிவரை) நடிகை சுருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி, பஞ்சாராஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணை நடத்தப்படுமா?
பின்னர் இந்த வழக்கு ஜூபிளி ஹில்ஸ் போலீஸ் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என்று கூறி, அந்த போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த தகவலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘‘இந்த வழக்கு
விசாரணையின் ஒரு அங்கமாக, வழக்குதாரரின் வாக்குமூலத்தை நாங்கள்பதிவு செய்துள்ளோம். நடிகை சுருதிஹாசனிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பாக வழக்குதாரர் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களையும் நாங்கள் பரிசீலனை செய்வோம்’’ என கூறினார்
28 March 2015
ஒடுற ரயிலை மறிங்க: நிக்கிற ரயில் வேணாம் கைதானோர் விடுதலை???
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதூவில் அணைகட்டுவதை எதிர்த்து சென்னை எழும்புரில், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கர்நாடக அரசு காவிரி அணையின்
குறுக்கே இரண்டு அணைகளை கட்டும் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் இன்று விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தி.மு.க., காங்கிரஸ், த.மாகா., ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் விவசாய அமைப்பினர் எழும்பூர் ரயில் நிலைய பிரதான வாயில் முன்பு திரண்டனர். போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
9.30 மணியளவில் போராட்டம் தொடங்கியது
. அப்போது தி.மு.க. துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு, த.மா.கா. சார்பில் சைதை ரவி முனைவர் பாட்சா, ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, விடுதலை கட்சி சார்பில் உச்சேஸ்வரன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் பேசினார்கள்.
நிற்கும் ரயில் முன்பு
பின்னர் அனைவரும் ரயில் மறியல் செய்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் சென்றனர். 7-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு மறியல் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர்.
மன்னார்குடி ரயில்
ஆனால் அது மாலையில் புறப்படும் ரயில் என்பதை அறிந்ததும் 6-வது பிளாட்பாரத்தில் மன்னார்குடி செல்வதற்கு தயாராக இருந்த ரயிலை நோக்கி ஓடினார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால் போலீசாரால் எதுவும் செய்யமுடியவில்லை.
விலகு விலகு….
ரயில் என்ஜின் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டனர். கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த ரயில் 10.40 மணிக்கு மன்னார்குடிக்கு புறப்பட வேண்டும். 10.50 மணியில் இருந்து என்ஜின் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்தார். ஆனால் மறியல் செய்தவர்கள் யாரும் விலகவில்லை.
குண்டு கட்டாக தூக்கி
போலீசார் ஒரு புறத்தில் வலுக்கட்டாயமாக தொண்டர்களை தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினார்கள். ஆனால் இன்னொரு புறத்தில் ஏறி குதித்து மறியல் செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சுமார் அரைமணிநேரம் நடைபெற்ற போராட்டம் காரணமாக 11.20 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டு சென்றது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
இதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்
மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து
உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் சியோக்கி ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென ரெயிலின் சரக்கு பெட்டியில் தீ பிடித்தது. தொடர்ந்து தீ அருகே இருந்த மற்றொரு பெட்டியிலும் வேகமாக பரவியது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஏராளமான பயணிகளின்
உடமைகள் எரிந்து நாசமாயின.
பின்னர் தீயில் எரிந்து நாசமான 2 பெட்டிகள் கழட்டிவிடப்பட்டு மீதமுள்ள பெட்டிகளுடன் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. இச்சம்பவத்தால் மும்பை வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
எனக்கு பணம் வெளிநாடுகளில் இருந்து வரவில்லை அன்னா ஹசாரே
சமூக போராட்டங்கள் நடத்துவதற்கு ஆதரவாக எனக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் பணம் வரவில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்து உள்ளார்.
அன்னா ஹசாரே மீது குற்றச்சாட்டு
ஊழலுக்கு எதிராக போராடி வருபவரும், காந்தியவாதியுமான 77 வயது அன்னா ஹசாரே, போராட்டங்கள் நடத்துவதற்கு பக்கபலமாக அவருக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்தும் பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து அன்னா ஹசாரே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்தும் எனக்கு பணம் வருகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். எங்களது இயக்கம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறது என்பதை யாராவது நிரூபித்தால், நான் பொதுவாழ்வில் இருந்து விலகி விடுகிறேன்.
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு
நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம் அங்கு ஒரு பையை வைப்பேன். அதில் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை, உங்களால் முடிந்த பணத்தை போடுமாறு பொதுமக்களிடம் கேட்பேன். இவ்வாறாக சேர்த்த ஒவ்வொரு ரூபாய்க்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது.
27 March 2015
ஸ்பெக்ட்ரம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனது !!!
ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடிக்கு விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் மறு ஏலத்துக்காக அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்திக்கொள்ளலாம் என்றும், ஆனால் அதன் முடிவை சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர வேண்டும் என்றும் கடந்த மாதம் 26–ந்தேதி நிபந்தனை விதித்தது.
அனுமதி தேவை
இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடிக்கு ஏலம் முடிவடைந்தது. இவற்றை ஏலம் எடுத்த 7 நிறுவனங்கள் மார்ச் 31–ந்தேதிக்குள் முன்பணமாக சுமார் ரூ.28 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும். இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி தேவை’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பி.கே.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார்.
தொடர அனுமதி
அவர் தனது வாதத்தில், ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டு அனுமதிப்பதுடன், முன்பணமாக ரூ.28 ஆயிரம் கோடியை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முடிவை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து, இந்த ஏலம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடரலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
தோல்வியை தழுவியதால் எனக்கு மகிழ்ச்சி???
உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், பிரபல பாலிவுட் டைரக்டர் ராம் கோபால் வர்மா இந்திய அணி தோல்வியடைந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை கொந்தளிக்க
செய்துள்ளது.
ராம் கோபால் வர்மா டுவிட்டரில் பதிவு செய்தவை பின்வருமாறு:-
இந்தியா தோல்வியை தழுவியதால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால், எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. அப்படி ஒருவேளை எனக்கு கிரி்க்கெட் மீது ஏதாவது ஆர்வம் இருக்குமானால், கிரிக்கெட்டை விட அந்த விளையாட்டை நேசிக்கும் ரசிகர்களையே அதிகம் வெறுப்பேன். நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால், இந்தியாவை
நான் நேசிக்கிறேன். இந்தியர்களை கிரிக்கெட் விளையாட்டுதான் சோம்பேறிகளாக்குகிறது. இந்த கிரிக்கெட் இருப்பதால்தான் ரசிகர்கள் வேலையை விட்டுவிட்டு டிவியை பார்க்க ஆரம்பிக்கிறார்கள். கிரிக்கெட் என்ற இந்த கொடிய வியாதியிலிருந்து என் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் எல்லா கடவுளையும் வேண்டிக் கொள்கிறேன். அதேநேரத்தில், மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகளிடமும்
நான் ஒன்றை
கேட்டுக்கொள்கிறேன். இந்திய அணியை நீங்கள் மீண்டும் மீண்டும் தோற்கடிக்க வேண்டும். கிரிக்கெட்டை விட்டு இந்திய அணி விலகும் வரை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். இந்தியர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை நீங்கள் தோற்கடிக்க வேணடும். மது, சிகரெட்டுகளை விட மிகக்கொடியது கிரிக்கெட். மது, சிகரெட்டுகளுக்கு அடிமையானால் அது தனிநபர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், கிரிக்கெட்டோ தேசத்தையே அடிமையாக்குகிறது. கிரி்க்கெட் ஒரு தேசிய நோய்.
26 March 2015
பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் நடத்த தயார்: அன்னா ஹசாரே
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் போதுமான பலம் இல்லாததால், மேல்-சபையில் நிறைவேற்றப்படாமல் காத்திருக்கிறது.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறுகையில், மசோதா குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. எதிர்ப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு விவரம் தெரிவித்தால், மசோதாவை திருத்தம் செய்ய தயார் என்றும் அறிவித்தார்.
இதற்கு அன்னா ஹசாரே பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து பிரதமர் நரேந்திரமோடியுடன் கேமரா முன்பு நேரடி விவாதம் நடத்த தயார் என்றும் மக்கள் இதை பார்த்து உண்மையை தெரிந்து
பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படை விமானம், கடலில் விழுந்து விபத்து
கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படை விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பெண் அதிகாரி உள்ளிட்ட 2 பேர் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
கடற்படை விமானம்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம், ‘டார்னியர்’. இந்த விமானம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு, போவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்று, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அந்த விமானத்தில் விமானி, கமாண்டர், ஒரு பெண் அதிகாரி என 3 பேர் இருந்தனர். திடீரென இரவு 10.02 மணிக்கு கோவாவில் உள்ள கடற்படை விமான நிலையம், இந்த விமானத்துடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும் என்ற யூகம் எழுந்தது.
கடலில் விழுந்தது
அதன்படியே, அந்த விமானம், கோவாவில் தென்மேற்கே 25 கடல் மைல் தொலைவில், இரவு 10.08 மணிக்கு கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும், ஐ.என்.எஸ். சத்புரா, பெட்வா, ஐ.என்.எஸ். சுபத்ரா நீர்மூழ்கிக்கப்பல், இந்திய கடலோர காவல் படை கப்பல் கொருவா, கொண்டல், மகர், மாதங்கா உள்ளிட்ட 12 கப்பல்கள் மற்றும் விமானங்கள், காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2 பேர் கதி என்ன?
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கமாண்டர் நிகில் ஜோஷி என்ற அதிகாரி காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை மீனவர்கள் மீட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை, ஸ்திரமாக உள்ளதாக கடற்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் டி.கே.சர்மா, டெல்லியில் நிருபர்களிடம் கூறினார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, பெண் அதிகாரி என இருவரின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த பெண் அதிகாரியின் கணவரும் கடற்படையில் பணிபுரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண் அதிகாரி ஒருவர் பயணம் செய்த கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது இதுவே முதல் முறை.
விசாரணைக்கு உத்தரவு
நிலைமையை நேரில் ஆராய்வதற்காக கடற்படை தளபதி ஆர்.கே.தொவான், கோவா விரைந்தார். இதற்கிடையே விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம்தான், கடற்படைக்கு சொந்தமான டார்பெடோ மீட்பு கப்பல் விசாகப்பட்டினத்தில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
இதே போன்று கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மும்பை துறைமுகத்தில் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள், விமானங்கள் விபத்துக்குள்ளாவது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திஉள்ளது.
24 March 2015
இன்று மீனவர்கள் அனைவரும் விடுதலை..
அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் குறித்த 21 பேரும் கைது செய்யப்பட்டு 22 ஆம் திகதி யாழ். மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்தனர்.
அன்றைய தினமே ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும் இந்திய , இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என்ற நல்லெண்ண நோக்கத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய இன்றைய தினம் குறித்த 21 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லெனின்குமார் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பிலும் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டு அனைவரும் நாளை நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
23 March 2015
அரசு அறிமுகப்படுத்துகிறது விளையாட்டுத்துறையில்பட்டப்படிப்பு
வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டுத்துறையில் இளநிலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துகிறது டெல்லி மாநில அரசு. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் கேரியரை ஸ்போர்ட்ஸிலேயே கொண்டு செல்ல இது மிக உதவியாக இருக்கும் என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் பேட்மிண்டன் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கும் பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கல்ந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், 'டெல்லி அரசு பள்ளி பாடத்திட்டத்தில் ஸ்போர்ட்ஸை சேர்க்க திட்டமிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் விளையாட்டுக்கு அதிக முன்னுரிமை தரவும், பள்ளிகளில் ஸ்போர்ட்ஸை பாடமாக கொண்டுவரவும் தெளிவான விரிவான திட்டம் ஒன்று விரைவில் வெளியிடப்படும். அதேபோல், டெல்லியிலுள்ள அரசுக் கல்லூரிகளின் கேம்பஸில் விளையாட்டு வசதிகள் என்னென்ன இருக்கிறது என்ற விபரங்களும் விரைவில் சேகரிக்கப்படும்.' எனறார்.
வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டுத்துறையில் இளநிலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்துகிறது டெல்லி மாநில அரசு. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் கேரியரை ஸ்போர்ட்ஸிலேயே கொண்டு செல்ல இது மிக உதவியாக இருக்கும் என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் பேட்மிண்டன் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கும் பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கல்ந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், 'டெல்லி அரசு பள்ளி பாடத்திட்டத்தில் ஸ்போர்ட்ஸை சேர்க்க திட்டமிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் விளையாட்டுக்கு அதிக முன்னுரிமை தரவும், பள்ளிகளில் ஸ்போர்ட்ஸை பாடமாக கொண்டுவரவும் தெளிவான விரிவான திட்டம் ஒன்று விரைவில் வெளியிடப்படும். அதேபோல், டெல்லியிலுள்ள அரசுக் கல்லூரிகளின் கேம்பஸில் விளையாட்டு வசதிகள் என்னென்ன இருக்கிறது என்ற விபரங்களும் விரைவில் சேகரிக்கப்படும்.' எனறார்.
நில நடுக்கம் மேகாலயாவில் ஏற்பட்டது.!!!
மேகாலயா மாநிலத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவின் ஜெயின்டியா மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 புள்ளிகளாக பதிவானது.
இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 44 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
எங்கேஉண்மையான வரலாறு ???
ஆரம்பம் முதல் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரலாறு என்று ஒரு பாடம் உண்டு.
இதில் இந்திய வரலாறு பற்றி கூறப்பட்டு இருப்பது ஒரே மாதிரியான பல்லவியாக இருக்கும்.
ஆதி காலத்தில், எந்தெந்த ஆண்டுகளில் இந்தியா மீது யார், யார் படையெடுத்து வந்தார்கள்? அந்த அன்னிய நாட்டு மன்னர்களின் விவரங்கள், பின்னர் இந்தியாவின் பல பகுதிகளையும் ஆண்ட மன்னர்கள் ஒருவருக்கொருவர் எந்த இடத்தில் எதற்காக மோதிக்கொண்டார்கள்? அசோகர் சாலைகளில் மரம் நட்டார் என்பது போன்ற தகவல்கள் ஆண்டு வாரியாக சிரத்தையுடன் தயாரித்து கொடுக்கப்பட்டு இருக்கும்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா மீது நடந்த முகலாயர்களின் படையெடுப்பு, தொடர்ந்து பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பு, ஆங்கில ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தது, சுதந்திர போராட்டம், பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றது,
தற்போது ஆட்சியில் இருப்பது யார் என்ற ரீதியில் தான் இந்தியாவின் வரலாறு பள்ளிகளில் போதிக்கப்படுகிறது.
தென் இந்திய வரலாற்றைப் பொறுத்த அளவில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டது மற்றும் ஆங்காங்கே இருந்த குறுநில மன்னர்களின் ஆட்சி விவரங்கள் தான் அதிகம் இடம்பெற்று இருக்கும்.
இளவயதில் திணிக்கப்படும் இந்த வரலாற்று விவரங்கள் பல முக்கிய நிகழ்வுகளை திரைபோட்டு மறைத்து விடுகிறது.
ஒரு நாட்டின் வரலாறு என்பது போர்க்களங்களுடன் நின்றுவிடுவது இல்லை.
ஆதி காலத்தில் இந்தியாவில் இருந்த
மக்கள் எப்படிப்பட்ட நாகரிகம் கொண்டு இருந்தார்கள்? அதன் பரிணாம வளர்ச்சி என்ன? கல்வி கற்கும் முறையை கையாண்டது எவ்வாறு? வெளிநாட்டினரும் வியந்து போற்றும்படியான அந்த கால இந்தியர்களின் விஞ்ஞான அறிவு எப்படி இருந்தது? அப்போது வாழ்ந்த அறிஞர்கள் யார், யார்? காலத்தை விஞ்சி நிற்கும் கல்லணை, தஞ்சை பெரியகோவில் போன்ற பிரமாண்ட படைப்புகளின் நுணுக்கம் என்ன?
தேர்தல் என்ற அமைப்புக்கு உலகிலேயே முதன் முறையாக வித்திட்ட தமிழக மன்னர் யார், இன்றளவும் போற்றி வியக்கத்தக்க காவியங்களை பழங்கால அறிஞர்கள் இயற்றியது எவ்வாறு? அச்சில் இல்லாத அவை பல ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி இன்னும் புதுக் கருக்கு குலையாமல் அப்படியே வழக்கத்தில் இருக்கும் அதிசயம் என்ன?
என்பது போன்ற உண்மையான தகவல்கள் எல்லாம் நமது பொதுவான சரித்திர புத்தகத்தில் இருக்காது.
பள்ளிப்படிப்பை முடித்த பின் தொடரும் சிறப்பு கல்வியின் போது மட்டும் அந்தந்த தலைப்புக்கு ஏற்ற புத்தகங்களில் இவற்றை தேடிப்பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
400 ஆண்டுகளாக அன்னியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்ததாலோ என்னவோ, அவர்கள் வகுத்து தந்த போர்க்காட்சிகள் கொண்ட பாடங்கள் தான் பள்ளிக்கூட சரித்திர பாட புத்தக பக்கங்களை நிரப்பிக்கொண்டு இருக்கின்றன.
உயர்நிலைப்பள்ளி படிப்பை முடித்து,
வாழ்வின் அடுத்த முக்கிய கட்டத்திற்கு தயாராக இருக்கும் இளைஞர் சமுதாயத்திடம், இந்திய வரலாறு பற்றி கேட்டால், கடந்த காலத்தில் இந்தியா மீது படையெடுத்தவர்களின் பட்டியலைத்தான் 'கட, கட' என்று வாசிப்பார்களே தவிர, உண்மையான முழு வரலாறு தெரியாமல்தான் இருப்பார்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,
இலக்கணம் வகுத்துத்தந்த தொல்காப்பியர் பற்றியோ, வாழ்வின் அத்தனை தத்துவங்களையும் இரண்டிரண்டு வரிகளில் அபாரமாக கொடுத்த வள்ளுவரின் வாழ்க்கை பற்றிய முழுவிவரமோ, உலக தத்துவங்களை எல்லாம் 3 ஆயிரம் திருமந்திரம் பாடல்களில் உள்ளடக்கிய தத்துவஞானி திருமூலர் பற்றியோ, பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சான்றாக திகழ்ந்த அவ்வையார் மற்றும் அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றவர்கள் இயற்றிய கருத்தாழமிக்க பாடல்கள் பற்றியோ, வால்மீகி ராமாயணத்திற்கு
புது வடிவம் கொடுத்த கம்பர் திறமை பற்றியோ, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்கள் உருவானது பற்றியோ இன்னும் இது போல, வியக்கத்தகும் சாதனைகளைப் படைத்தவர்களின் விவரங்கள் பற்றியோ தமிழக வரலாற்று நூல்களில் முழுமையாக இடம் பெற்று இருப்பது இல்லை.
கணிதம் மற்றும் வானவியல் சாஸ்திரத்திற்கு அடிப்படை காரணமானவர்கள் என்ற ஆர்யபட்டா, பாஸ்கராச்சாரியார், இலக்கியத்தில் இமாலய சாதனை படைத்த வியாசர், மருத்துவத் துறையில் முன்னோடியான சரகர் போன்ற எண்ணற்ற அறிஞர்களின் வாழ்க்கை, அவர்களது கண்டுபிடிப்புகள், அவற்றின் தாக்கம் குறித்தும், இந்திய சரித்திர புத்தகங்கள் மூலம் பள்ளிக்கூட மாணவர்களுக்கு போதிக்கப்படுவது இல்லை.
இதனால் என்ன ஆகிறது?
இந்தியா மீது அலெக்சாண்டர், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் படையெடுப்பு சம்பவங்களை நம்பும் அளவுக்கு, பாஸ்கராச்சாரியார், ஆர்யபட்டா, சரகர், திருமூலர் போன்றவர்களின் சாதனைகளைப் பற்றிக் கூறினால், அவற்றை நம்புவதற்கு பலர் தயாராக இல்லை.
காரணம், அவைதான் பாட புத்தகத்தில் இல்லையே!
பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா மீது படையெடுத்த கஜினி முகமது பற்றி எப்படிப்பட்ட வர்ணனை வார்த்தைகளில் கூறினாலும், அவற்றை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொண்டு நெட்டுருப் போடும் இளைஞர் சமுதாயத்தினரிடம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் நிகழ்த்திய அற்புதமான அறிவியல் சாதனைகளை எடுத்துக்கூறினால், இவற்றுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கும் அவல நிலைமைதான் உள்ளது.
இது மாற வேண்டும் என்றால், பழங்கால இந்திய அறிஞர்கள், ஒவ்வொரு துறையிலும் ஆற்றிய சாதனைகள், பள்ளிக்கூட மாணவர்களுக்கான இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டியது மிக அவசியம்.
வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் அளவுக்கு நமது மூதாதையர்கள் அளப்பரிய சாதனைகளை எப்படி நிகழ்த்திக் காட்டினார்கள் என்ற தகவலை தொடர்ந்து இங்கே காணலாம்.
அதற்கு முன்னதாக, நமது முன்னோர்களின் சாதனைகளுக்கு மூல காரணமாக இருந்த அந்தக்கால கல்வி முறை பற்றி சிறிதளவுக்கு இங்கே பார்ப்போம்.
இப்போது கல்வி என்பது, எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலையைத் தாண்டி, வாழ்க்கையின் வளமான வாழ்வுக்கு இது உதவுமா என்று தேர்ந்து எடுத்து அவற்றை மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மற்றவை புறந்தள்ளப்படுகின்றன.
கணினி மற்றும் இணையதளம் காரணமாக, நாம் விரும்பும் எந்த பாடத்தையும் விரல் அசைவில் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், அறிவு வளர்ச்சிக்காக அதிக சிரமம் எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை என்ற எண்ணம் இப்போது உருவாகி இருக்கிறது.
பள்ளிப்படிப்பின்போது அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, குறிப்பிட்ட பாடத்தின் சில பகுதிகளை மட்டும் வேண்டா வெறுப்பாக மனப்பாடம் செய்யும் மாணவர்களைத்தான் இந்தக் காலத்தில் பார்க்க முடிகிறது.
ஆனால், பழங்காலத்தில் எந்தப் பாடம் என்றாலும், அதனை ஆர்வமாக அறிந்துகொண்டு, மனப்பாடம் செய்து மனதில் ஏற்றிக்கொள்வது என்ற வகையில் கல்வி கற்றுக்கொடுக்கும் மரபு இருந்தது.
அப்போது எழுதுவதற்கு ஏட்டுச் சுவடிகள் இருந்தாலும், பெரும்பாலான பாடங்கள், மனப்பாடமாகவே கற்றுக்கொடுக்கப்பட்டன.
சமீபத்தில், அதாவது 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்வரை, கணக்கு பாடத்தில் வாய்ப்பாடு என்ற முறை இருந்தது.
சப்தம்போட்டுப் படித்து மனதில் அப்படியே ஏற்றிக்கொள்வதால் தான் அதற்கு 'வாய்ப்பாடு' என்ற பெயரே ஏற்பட்டது.
ஆனால், இப்போது யாரும் அக்கறையுடன் வாய்ப்பாடு கற்றுக்கொள்வதாக இல்லை.
கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்றவைக்கு கையடக்க கருவி இருப்பதால், யாரும், வாய்ப்பாடு பற்றி கவலை கொள்வது இல்லை.
பத்தும், பதினாறும் எவ்வளவு என்று கேட்டால், இரு எண்களையும் மனதில் கூட்டிப்பார்ப்பதற்குப் பதிலாக உடனே கால்குலேட்டரை தேடிப்பார்த்து, அதன் மூலம் விடையை சொல்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
இதுபோன்ற காரணங்களால், எதையும் ஆழமாக கற்றுக்கொள்ளும் போக்கு குறைந்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
நமது மூதாதையர்கள், இந்தக் கல்வி முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தார்கள்.
ராமாயணமாக இருந்தாலும், மகாபாரதமாக இருந்தாலும், மருத்துவ நூல்கள் என்றாலும், இன்னும் எந்தப் பாடம் என்றாலும் அவை செய்யுள் வடிவிலேயே உருவாக்கப்பட்டன.
மிக நுணுக்கமான கணக்குப் பாடத்தைக்கூட அவர்கள் செய்யுளாக ஆக்கி, அதை அப்படியே மனப்பாடம் செய்து மனதில் பதிய வைத்துக்கொண்டார்கள்.
கணிதத் துறையில் உலகுக்கே முன்னோடியாக விளங்கிய நமது முன்னோர்கள், அனைத்து கணிதப் பாடங்களையும் கூட செய்யுள் வடிவில் உருவாக்கி, அதன் மூலம் செய்த சாதனைகள் என்ன என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் நிகழ்த்திய அற்புதமான அறிவியல் சாதனைகளை எடுத்துக் கூறினால், இவற்றுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கும் அவல நிலைமைதான் உள்ளது. இது மாற வேண்டும் என்றால், பழங்கால இந்திய அறிஞர்கள், ஒவ்வொரு துறையிலும் ஆற்றிய சாதனைகள், பள்ளிக்கூட மாணவர்களுக்கான இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டியது மிக அவசியம்.
(ஆராய்ச்சி தொடரும்)
22 March 2015
மீனவர்கள் 54 பேர் கைது: இலங்கை கப்பற்படை நடவடிக்கை
மீனவர்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இலங்கையை சேர்ந்த குழு ஒன்று இந்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில், இந்திய மீனவர்கள் 54 பேரை இலங்கை கப்பற்படை கைது செய்துள்ளது. இது குறித்து இலங்கை கப்பற்படையின் செய்தி தொடர்பாளர் இண்டிகா சில்வா கூறும்போது, காங்கேசன்துறை பகுதியில் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் மற்றும் 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமன்னார் பகுதியில் 5 படகுகளில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மீன்வள ஆய்வு அலுவலகத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணத்தின்போது, நல்லெண்ண அடிப்படையில் 86 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச எல்லை மற்றும் ஒருவரது எல்லைக்குட்பட்ட கடல் நீரில் மற்றொருவர் அத்துமீறி செல்லுதல் உள்ளிட்ட மீனவர்கள் விவகாரம் குறித்து இந்த வாரம் விவாதிப்பதற்காக இலங்கை குழு ஒன்று இந்தியா வர உள்ளது. இரு நாடுகளின் மீனவ அமைப்புகளுக்கு இடையே சென்னையில் வருகிற மார்ச் 24 மற்றும் மார்ச் 25ந்தேதி
பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது. சமீபத்தில், எல்லை தாண்டி ஊடுருபவர்களை சுட்டு தள்ளும் அதிகாரம் இலங்கையிடம் உள்ளது என அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியிருந்தது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை:!!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொடூர கொலைகளுக்கு மாநில முதல்
மந்திரி ரகுபர் தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டு உள்ள குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், இது குறித்து போலீஸ் அதிகாரிகளுடனும் தாஸ் பேசினார்.
21 March 2015
புறப்பட்ட ரெயிலில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்த பலி
தாவணகெரே டவுன் பகுதியை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 63). சின்னத்திரை நடிகர். இவர் கன்னட தொலைகாட்சியில் பல தொடர்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். சீத்தராமன் பெங்களூருவுக்கு செல்வதற்காக காலை ஹரிஹர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது பெங்களூருவுக்கு செல்லும் ரெயில்
மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனால் ஹரிஹர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது சீத்தாராமன் கால் தவறி நடைமேடையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த
அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஹரிஹர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
10 மீனவர்கள் மீனவர் பேச்சுவார்த்தைக்கு பயணம்???
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 10 மீனவ பிரதிநிதிகள் எதிர்வரும் திங்கட் கிழமை தமிழ்நாட்டுக்கு பயணிக்கின்றனர்.
அவர்களுடன் 5 மீன்பிடித்துறை அதிகாரிகளும் எதிர்வரும் திங்கட் கிழமை இந்த பேச்சுவார்த்தைக்காக சென்னை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தின்கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு தினங்களாக இந்தபேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையாகும்.
இந்த பேச்சுவார்த்தை கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த போதும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் புதிய திகதி
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் வாயில் சிறுநீர் கழித்து கொடுமை சிபிசிஐடி விசாரணைக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்கச் சாதிக் கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு, அடிதாங்க முடியாமல் குடிக்கத் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் உள்ளூர் காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான இதை விசாரிக்க வேண்டிய ஊத்தங்கரை டிஎஸ்பி, பாதிக்கப்பட்ட இளைஞரைச் சந்திக்கக்கூட இல்லை. அதுமட்டுமின்றி, ‘சிறுநீர் கழித்ததாகச் சொல்லப்படுவது உண்மை இல்லை’ என அவர் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். இதிலிருந்தே அவர் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது.
தற்போது ஊடகங்களின்மூலம் இந்தக் கொடூர சம்பவம் வெளிஉலகுக்குத் தெரியவந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் மீதே பொய் வழக்கு ஒன்றை போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இந்தச் சூழலில் இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகக் காவல்துறை சாதிவெறியர்கள்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இது. வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலமுறை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனாலும் தமிழக அரசு இதில் மெத்தனமாகவே இருக்கிறது.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த மனிதத் தன்மையற்ற சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள ஓவ்வொருவரும் வெட்கித் தலைகுனியவேண்டும். இதனால் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தமிழக அரசு உணரவேண்டும். இனியும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்படாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்
20 March 2015
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகிறது????
இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையிலான இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லை பாதுகாப்பு மாநாடு இந்தியாவில் ஆரம்பமாகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனை ஆரம்பித்து வைக்கிறார்.
சிறிலங்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஸ், மாலைத்தீவு உள்ளிட்ட 20க்கும் அதிகமான நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.
இந்தியாவும், இந்து சமுத்திரமும் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
குடிநீர் கட்டணம் 10 சதவீதம் உடனடியாக உயர்வு...
. டெல்லியில், குடிநீர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை முதல்–மந்திரி மணீஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்ற டெல்லி குடிநீர் வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது, உடனடியாக அமலுக்கு வந்தது.
மாதத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக பயன்படுத்துவோருக்கு இந்த கட்டண உயர்வால் பாதிப்பு இல்லை.
டெல்லி மக்களுக்கு இலவச குடிநீர் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்பிறகு ஒரு மாதம் கடந்த நிலையில், குடிநீர் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது, மக்களுக்கு செய்யும் துரோகம் என்று பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)