வீசா நிடிப்பு, சுங்கத்துறை உள்பட 4 ஒப்பந்தங்கள் தொடர்பாக மீனவர் பிரச்சனையை இந்தியா - இலங்கை இடையே கையெழுத்தானது.
பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மொரீஷியஸில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி இலங்கை சென்று உள்ளார். மூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக, இன்று பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றார். காலை 5.25 மணிக்கு கொழும்பு விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வரவேற்றார்.
கடந்த 1987–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும். இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்திய–இலங்கை உறவு குறித்து பிரதமர் மோடி முக்கியமான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். வீசா நிடிப்பு, சுங்கத்துறை உள்பட 4 ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்தியா - இலங்கை இடையே கையெழுத்தானது.
இருநாட்டு தலைவர்கள் சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசுகையில், இலங்கை அதிபராக பதவியேற்ற சிறிசேனா இந்தியாவிற்கு முதல் பயணம் செய்து எங்களை பெருமைபடுத்திவிட்டார். இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும். வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்பவர்களின் வீசா காலத்தை நீடிக்க உள்ளோம். புதுடெல்லியில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா விரைவில் தொடங்கும். நாங்கள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா- இலங்கை திருவிழாவை கொண்டாட ஏற்பாடு செய்து உள்ளோம்.
சுற்றுலாவை மேம்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு அளிப்போம். இலங்கையில் ராமாயணம் தொடர்பான இடங்களிலும், இந்தியாவில் புத்த மதம் தொடர்பான இடங்களிலும் சுற்றுலாவை பெறுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். பிரச்சனை தொடர்பாக அரசு உதவியுடன் இருநாட்டு பிரநிதிகளும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் இலங்கையில் 13 வது சட்டதிருத்தத்தை முழுமையாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது சமரச தீர்வை ஏற்படுத்தும். இலங்கையில் தமிழர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் சமமான வாழ்வுரிமையை உருவாக்க இந்தியா உதவும். பெட்ரோலிய பொருட்களின் மையமாக திரிகோணமலையை மாற்ற இந்தியா உதவி செய்யும். என்று கூறினார். பிரதமர் மோடியின் பேச்சில் பிற சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருந்தது.
0 கருத்துகள்:
Post a Comment