17 March 2018
மலிவான நகரங்கள் பட்டியலில் உலகில் முதலிடம் இதுதான்
பொருளாதார புலனாய்வு யூனிட் என்ற சர்வதேச அமைப்பு உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் விலைவாசி குறித்து ஆய்வு செய்துள்ளது. அதில், எந்தெந்த நகரங்களில் விலைவாசி குறைவாக உள்ளது, எங்கு அதிகமாக உள்ளது என்ற பட்டியலை தயாரித்து வெளியிட்டு உள்ளது
.அதில் உலகிலேயே அதிக விலைவாசி கொண்ட நகரமாக சிங்கப்பூர் உள்ளது. அதே நேரத்தில் தெற்கு ஆசிய நாடுகளில்
உள்ள பெரும்பாலான நகரங்கள் விலைவாசி மிக குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.விலைவாசி குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில் பெங்களூர், சென்னை, டெல்லி, நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகிலேயே
மிகவும் மலிவான நகரமாக சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் உள்ளது. இந்த வரிசையில் 2-வது இடத்தை வெனிசுலா தலைநகரம் கராகஸ் பெற்றுள்ளது. 3-வது இடத்தை கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரம் பெற்றிருக்கிறது.
4-வது இடத்தை நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரமும், 5-வது இடத்தை பெங்களூரும் 6-வது இடத்தை பாகிஸ்தானில் உள்ள கராச்சியும் 7-வது இடத்தை அல்ஜீரிய தலைநகரம் அல்ஜீர்சும் 8-வது இடத்தை சென்னையும் 9-வது இடத்தை ருமேனியா தலைநகரம் பூஜ்சரஸ்ட்டும் 10-வது இடத்தை டெல்லியும் பெற்றுள்ளன.
ஏன் இந்த நகரங்களில் மட்டும் விலைவாசி குறைவாக இருக்கிறது என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இங்கு ஊழியர்களுக்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக இருப்பதும் மக்களுக்கு குறைந்த வருவாயே கிடைப்பதும் விலைவாசி குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது தெரிந்தது.
அதேபோல, கிராமங்களில் உற்பத்தி
செய்யப்படும் பல்வேறு பொருட்கள் நகரங்களை சென்றடைய குறைவான செலவே ஆவதும், பல உற்பத்தி பொருட்களுக்கு அரசே மானியம் வழங்குவதும் விலைவாசி குறைவாக இருப்பதற்கு காரணம் என்றும் தெரியவந்தது.
மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது பலவகைகளில் செலவு குறைவாக இருப்பதாலும், இந்த நகரங்களில் பல்வேறு பொருட்களின் விலைகளும் குறைவாக உள்ளதாக ஆய்வில்
தெரியவந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)