This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 December 2014

நெல் மூட்டைகள் மழையால் சேதம்: விவசாயிகள் மறியல்


 வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூட திறந்தவெளிக் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையில் நனைந்து சேதமடைந்தன. இதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.

வந்தவாசியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து வருவர்.

இதற்கென ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 கிடங்குகள் உள்ளன. மேலும், திறந்தவெளியிலுள்ள களத்திலும் மூட்டைகள் இறக்கி வைக்கப்படும்.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நெல் மூட்டை வரத்து அதிகமாக இருந்தது.

இதனால் 4 கிடங்குகளில் மொத்தம் சுமார் 8 ஆயிரம் மூட்டைகளும், திறந்தவெளிக் களத்தில் சுமார் 4 ஆயிரம் மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தன.

ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரி ஒருவர் இறந்துவிட்டதால் மூட்டைகளை எடை போடும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையால் திறந்தவெளிக் களத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில் சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன.

இதனால் கோபமடைந்த விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல் எடை போடும் பணியை துரிதமாக நடத்த வேண்டும், திறந்தவெளிக் களம் மீது மேற்கூரை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.வி.ஜெயந்தன், டிஎஸ்பி மகேந்திரன், ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் வேலன் உள்ளிட்டோர் சமரசம் செய்த பின், மறியல் கைவிடப்பட்டது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

30 December 2014

கடும் பனிப்பொழிவு: ரயில் விமான போக்குவரத்து பாதிப்பு


டெல்லியில் வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் டெல்லியில் தட்பவெட்பம் 2.6 டிகிரி செல்சியசாக குறைந்தது. அன்று, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் பனிப்பொழிவு இருந்தது.

டெல்லியில் இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மக்கள் அதை தாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.பனிப்பொழிவு காரணமாக டெல்லி மாநகரம் பனி மூட்டத்தில் மூழ்கியது. 50 மீட்டர் தூரத்தில் வருபவர்களை கூட பார்க்க முடியாதபடி பனி மூட்டம் இருந்தது. இதனால் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக 100 ரெயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. 30 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

வடமாநில மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பனிப்பொழிவும், குளிர்காற்றும் இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

எல்லையில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் பதேபூர் அருகே உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் வேலியை தாண்டி யாரோ மர்மநபர் ஒருவர் ஒரு பையை தூக்கி வீசினார். இந்திய எல்லைக்குள் விழுந்த அந்த பையை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர்.

அப்போது, அதில் 3 பாக்கெட்டுகளில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதை அவர்கள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

29 December 2014

குண்டு வெடிப்பு: நிச்சயமாக தீவிரவாத தாக்குதல்தான் உள்துறை

பெங்களூரில் நேற்று இரவு உணவகம் அருகே குண்டு வெடித்ததில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். இரண்டு பேர் காயமடைந்தனர். 
இந்த சம்பவத்தையடுத்து, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்த தாக்குதல் கண்டிப்பாக தீவிரவாத தாக்குதல்தான் என்று கர்நாடக உள்துறை மந்திரி கே.ஜே ஜார்ஜ் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதனிடையே, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினரும் தடவியல் நிபுணர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தேசிய புலானாய்வு குழு மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு  இன்று தெரிவித்துள்ளார். 
பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்,  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

குண்டுவெடிப்பு:3 பேர் காயம்.பொலிசார் தீவிர விசாரணை (காணொளி இணைப்பு)



பெங்களூரில் குண்டு வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெங்களூர் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் சென்னையை சேர்ந்த பவானி, மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரிய வந்துள்ளது.
தலையில் படுகாயத்துடன் பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.
அந்தப் பகுதியை பொலிசார் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை மத்திய அமைச்சர் சதனாந்த கவுடா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இருவரை பெங்களூர் பொலிசார் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

28 December 2014

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான!!!

புதிய ஆதாரம் அம்பலம் எதிரொலி கராச்சி நகரில் வசிக்கும் தாவூத் இப்ராகிமை ‘இந்தியாவிடம் ஒப்படையுங்கள்’ மத்திய அரசு வற்புறுத்தல்
மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதற்கான புதிய ஆதாரம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி

1993–ம் ஆண்டு மார்ச் மாதம் 12–ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

தாவூத் இப்ராகிம்
இந்த குண்டுவெடிப்புகளில் 350 பேர் பலியானார்கள். 1,200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்திய அரசு பலமுறை பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது. அதற்கான ஆதாரங்களையும் வழங்கியது.

ஆனால் பாகிஸ்தான் அதை பொருட்படுத்தவில்லை. தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இன்டர்போல் என்னும் சர்வதேச போலீசும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாவூத் இப்ராகிமை தேடி வருகிறது.

கராச்சியில் சொகுசு வாழ்க்கை
இந்த நிலையில், 60 வயதான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிப்பதாகவும், அங்கு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் ‘நியூஸ்மொபைல்.இன்’ என்ற வலைத்தளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

தாவூத் இப்ராகிம் தனது கூட்டாளியான யாசிர் என்பவருடன் பேசியதை ரகசியமாக பதிவு செய்ததாக கூறி அந்த இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ரியல் எஸ்டேட் தொழில்
அதன்படி, தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசித்துக் கொண்டே பாகிஸ்தானிலும், வளைகுடா நாடுகளிலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது தெரிய வந்துள்ளது.

தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான யாசிர் பாகிஸ்தானில் செல்வாக்கு மிகுந்த ஒருவரின் மகன் ஆவார். அவர் தாவூத் இப்ராகிமின் நிதி ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இவர்தான் ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதில் கிடைக்கும் வருமானம் தாவூத் இப்ராகிம் மூலம் சர்வதேச அளவில் தீவிரவாத குழுக்களுக்கு வழங்கப்படுவதாகவும் அந்த இணையதளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

இது குறித்து அந்த வலைத்தளத்தின் தலைமை ஆசிரியர் சவுரப் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிப்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக இது இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. எனவே இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து சட்டத்தின் முன்பாக தாவூத் இப்ராகிமை கொண்டு வந்து நீதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

ராஜ்நாத் சிங்
தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து, நேற்று லக்னோ நகரில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘தாவூத் இப்ராகிம் இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதி, அவரை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டு உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.

பின்னர் அங்கு அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தாவூத் இப்ராகிம் பற்றிய அனைத்து விவரங்களும் மத்திய அரசிடம் இருப்பதாகவும், அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.

ஒப்படைக்க வேண்டும்
உள்துறை ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில், தாவூத் இப்ராகிம் கராச்சியில்தான் வசிக்கிறார் என்பதில் இந்தியா ஏற்கனவே உறுதியாக இருப்பதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை கொடுத்து இருப்பதால், அவரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காட்டுவது உண்மையானால், இந்த விஷயத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

27 December 2014

மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு

 ஒரு ரூபாய் நோட்டுகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவில் அச்சடிக்கப்பட்டு வெளியாக உள்ளன. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நோட்டின் மதிப்பை விட, அதனை அச்சடிக்க அதிகம் செலவாவதால், ஒரு ரூபாய் மற்றும் இரண்டு, 5 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது 20 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது.
1994ஆம் ஆண்டில் ஒரு ரூபாய் அச்சடிக்கும் பணியை நிறுத்திய மத்திய அரசு, 1995ஆம் ஆண்டில் இரண்டு மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டது.
ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டதை அடுத்து நாணயங்கள் அதிக அளவில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு, புதிய வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் இந்த ரூபாய் நோட்டு இருக்கும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சண்டை போட்டு மாண்ட வெள்ளைப் புலி

இந்தூர் உயிரியல் பூங்காவில் சனிக்கிழமை காலை பாம்புடன் சண்டை போட்ட வெள்ளைப் புலி இறுதியாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி அடைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் ஒரு பாம்பு புகுந்தது. அதனைப் பார்த்த வெள்ளைப் புலி ஆக்ரோஷமாக பாம்புடன் சண்டையிட்டது. பாம்பும் வெள்ளைப் புலியை விடாமல் தாக்கியது.
இந்த தாக்குதலில் வெள்ளைப் புலி உயிரிழந்தது. பாம்பும் பலத்த காயமடைந்துள்ளதாக உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறினர்.
இரண்டும் சண்டையிட்டதைப் பார்த்தும், அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

26 December 2014

மாணவி துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம்!!!

ரேபரேலி : உத்திரப்பிரதேசத்தில் 11ம் வகுப்பு மாணவியை துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியைப் போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட கோட்வாலி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியே காரில் வந்த 4 இளைஞர்கள், துப்பாக்கி முனையில் மாணவியைக் கடத்தி உள்ளனர்.

காரில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அம்மாணவியை நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மீண்டும் மாணவியை அவரது வீட்டின் அருகேயே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சுபேஷ் வர்மா, பால்போசிங் மற்றும் சூர்யகாந்த் என்ற 3 இளைஞர்களைக் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள 4வது குற்றவாளியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

25 December 2014

ஆலை அதிபரையும் மகளையும் குத்திக் கொன்ற தொழிலாளர்கள்

சூலூர்: கோயம்பத்தூர் மாவட்டம் குமாரபாளையத்தில் அட்வான்ஸ் கேட்டு கொடுக்காததால் ஆலை அதிபரையும், அவரது மகளையும் குத்திக் கொன்ற 3 தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூலூரை அடுத்த குமாரபாளையத்தில் பவர்லூம் வைத்து நடத்தி வந்தவர் ராக்கியப்பன். இவரிடம் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் மூவர், நேற்று இரவு வந்து அட்வான்ஸ் கேட்டனர்.

ராக்கியப்பன் மறுக்கவே அவரை கத்தியால் குத்தினர். தடுக்க வந்த மனைவி சரோஜினி, மகள்கள் வினோதினி, யசோதா ஆகியோரையும் குத்தினர். இதில், ராக்கியப்பனும், அவரது மகள் வினோதினியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மற்ற இருவரும் ஆபத்தான நிலையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவான மூன்று தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பல்கலைக்கழகத்தில் திடீர் தீ விபத்து: 2 வகுப்பறைகள் சேதம்

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் இரண்டு வகுப்பறைகள் எரிந்து சேதமடைந்தன.

மதுரையில் இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள வேதியியல் துறைக்கான கட்டடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. இதை பார்த்த ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து 2 வாகனங்களில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ மளமளவென பரவியதால், அந்த கட்டடத்தில் உள்ள இரண்டு வகுப்பறைகள் மற்றும் நுலகம் ஆகியை தீயில் எரிந்து பலத்த சேதமடைந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், வகுப்பறையில் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காமராஜர் பல்கலைக்கழகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

24 December 2014

ரெயில் தாமதமானால் பயணிகளுக்கு இலவச உணவு..

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பல ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், ரெயில் புறப்படும் நேரம் மற்றும் வரும் நேரம் தாமதம் ஆகிறது. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு ஆளாகின்றனர்.

இந்தநிலையில் இந்திய ரெயில்வே துறையின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பனிமூட்டத்தின் காரணமாக 2 மணி நேரத்திற்கு மேல் ரெயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஓரிரு இடங்களில் நாளை மழைபெய்யும்: வானிலை தகவல்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைபெய்தது. இந்த நிலையில் இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது அங்கிருந்து நகர்ந்து, இந்தியப்பெருங்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைக்கொண்டிருக்கிறது. 

இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைபெய்யும். சென்னையை பொறுத்தவரையில், ஒரு சில பகுதிகளில் மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது. காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவின்படி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 6 செ.மீ., பரமக்குடி, பாம்பன் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் இழுத்து சென்று பாலியல் கொடுமை

ஓசூர் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் ராஜஸ்தான் பெண்களை பிடித்துச்சென்று பாலியல் கொடுமை செய்ததாக போலீஸ்காரருக்கு எதிரான குற்றச்சாட்டை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவி உ.வாசுகி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

பாலியல் கொடுமை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் 8–ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பெண்கள் 2 சிறுமிகளுடன் காத்திருந்தனர். அப்போது, ஓசூர் போலீஸ் நிலைய ஏட்டு வடிவேலு, அந்த பெண்களில் சிலரை புறநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று பணத்தை பறித்து, அவர்களை பாலியல் கொடுமையும் செய்துள்ளார். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதும், ஏட்டு வடிவேலுவை போலீசார் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.
பெண்கள் எங்கே?

இந்த சம்பவம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானதும், எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தியபோது, பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், பாலியல் கொடுமை செய்த போலீஸ்காரர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் தெரியவந்தது.
தற்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் எங்கு உள்ளனர் என்றே தெரியவில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யவும், அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.
இழப்பீடு

இந்த வழக்கு விசாரணையை தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாக்கப்பு ஆணையம் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட இளம் பெண் உட்பட 5 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த 8–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் உ.நிர்மலாராணி ஆஜராகி வாதிட்டார்.
சப்–கலெக்டர் விசாரணை

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, போலீஸ்காரர் மீதான குற்றச்சாட்டு என்பதால், இதுகுறித்து போலீசார் விசாரிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து சப்–கலெக்டர் விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி சப்–கலெக்டரும் விசாரணை நடத்தி முடித்து, அறிக்கையை கலெக்டரிடம் தாக்கல் செய்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்க்கா மாவட்டத்தில் உள்ளனர். அவர்களது செல்போன் நம்பர்கள் போலீசாரிடம் உள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கை

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

போலீஸ்காரர் வடிவேலுவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சப்–கலெக்டர் நடத்திய விசாரணையின் அறிக்கை எங்கள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த போலீஸ்காரர் மீதான வேறு சில குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கட்டாய ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தகுந்த நடவடிக்கை
மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ்காரரை கைது செய்யவில்லை என்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சப்–கலெக்டர் விசாரணை நடத்துவதால், வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் அவ்வாறு செய்தால், அது ஒரு குற்றச்சாட்டுக்கு இரண்டு விதமான விசாரணை நடத்துவதாகி விடும் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது சப்–கலெக்டர் விசாரணை முடிந்து விட்டதால், இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். மேலும், போலீஸ்காரருக்கு எதிராக குற்றச்சாட்டு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.
கைது செய்யலாம்

இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத அதிகாரியை விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டிஜிபி நியமிக்க வேண்டும். புலன் விசாரணையின்போது, தேவைப்பட்டால் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ்கார் வடிவேலுவை விசாரணை அதிகாரி கைது செய்து, விசாரித்து அதன் அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த சப்–கலெக்டரின் அறிக்கையை, அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் வழங்கவேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த சூழ்நிலையில் எவ்வளவு இழப்பீடு வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்பது குறித்து விபரத்தை அரசு பிளீடர் கேட்டு இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.
பதில் இல்லை
இந்த வழக்கில் 2 சிறுமிகள், 2 பெண்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் ஏன் அழைத்து செல்லப்பட்டனர் என்ற எங்களுடைய (நீதிபதிகளுடைய) கேள்விக்கு அரசு தரப்பில் இதுவரை சரியான பதிலை தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கை வருகிற ஜனவரி 6–ந்தேதிக்கு தள்ளிவைக்கின்றோம். அன்று, இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

23 December 2014

இந்தியா இலங்கை மீனவர்களை விடுவித்தது

கடந்த செப்டம்பர் 30ஆம் திகதியன்று இந்திய கரையோரப் படையினரால் கைது செய்யப்பட்ட 12 இலங்கையர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
தமிழக அரசாங்கம் விடுத்த பணிப்புரைக்கு இணங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இந்த விடுதலைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று சிரேஸ்ட நீதிவான் நீதிமன்றம் இந்த 12பேரையும் விடுவித்தது.
இவர்கள், கன்னியாகுமரி கடல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ரங்கா புத்தா மற்றும் சதீவ் புத்தா ஆகிய படகுகளில் சென்ற மீனவர்களே கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிறுமியிடம் பாலியல் தொல்லை பள்ளியின் 50 வயது தோட்டக்காரர் கைது

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  பள்ளியின் தோட்டக்காரர் கைது செய்யபட்டார்.

புதுடெல்லியில் உள்ள ராம்ஜெஸ் தனியார் பள்ளி ஒன்றில்  தோட்டக்காரராக கடந்த 28 வருடங்களாக பணியாற்றி வந்தவர் சங்கர் லால் (வயது 50). கடந்த  ஒரு மாதமாக பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி ஒருவரை தனியாக அழைத்து போய் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதை யாரிடமாவது கூறினால் புல்வெட்டும் கத்திரியை காட்டி உன் முதுகில் குத்தி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி பள்ளிக்கூடம் போக மாட்டேன் என அடம் பிடித்து உள்ளார். இது குறித்து பெற்றோர் விசாரித்த போது  கடந்த ஒருமாத காலமாக தோட்டகாரர் தவறான முறையில் நடந்து உள்ளது தெரிய வந்து உள்ளது. உடனடியாக இது குறித்து பள்ளியின் மேலாளர் திவேஷ் குப்தாவிடம் தெரிவித்து உள்ளனர்.
 உடனடியாக் அவர் போலீசில் புகார் செய்தார் போலீசார் சங்கர் லாலை கைது செய்தனர்.
இது குறித்து பள்ளியின் மேலாளர் திவேஷ் குபதா கூறும் போது:-
 கடந்த வெள்ளிகிழமை பெற்றோர்கள் இது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கபட்டு 
சங்கர் லால் கைது செய்யபட்டார்.  இது தான் முதல் முறை  இது வரை பள்ளி மாணவிகளோ, பெற்றொர்களோ எந்த புகாரும் கூறியது இல்லை. இந்த பலள்ளியின் பாதுகாப்புக்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விபரங்களை 259 சாட்சி??

ரூ 66 கோடி சொத்துக்கள் ரூ 2847 கோடியாக உயர்வு! மலைக்க வைத்த பவானிசிங்
பெங்களூர்: 18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கின் கிளைமாக்ஸ் நாளை தெரிந்து விடும். உச்சக்கட்ட பரபரப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கின்றனர். தீர்ப்பினை தெரிந்து கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஆர்வமாக உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, எத்தனை இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விபரங்களை 259 சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து 14 நாட்கள் வாதிட்ட அரசு வழக்கறிஞர் பவானிசிங், தனது வாதத்தை மொத்தமாக தொகுத்து அளித்தார்.

306 சொத்துக்களின் பட்டியலை வாசிக்க வாசிக்க அதை கேட்பவர்களுக்கு அது மலைப்பை ஏற்படுத்தியது. இந்த பட்டியல்படி, 1991-96- இந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 லட்சம் ரூபாய்; சந்தை மதிப்போ 5,107 கோடி ரூயாய்.

இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். அதாவது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட 310 மடங்கு அதிகச் சொத்துகளை ஐந்தாண்டுகளில் குவித்திருக்கிறார் என்று முடித்தார் பவானிசிங்.

ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாட்டில் 800 ஏக்கர் நிலமும், ஊத்துக்கோட்டையில் 200 ஏக்கர் நிலமும், 25 ஏக்கர் பங்களா நிலமும், உள்ளதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் அவர் படித்துக்காண்பித்தார்.

1991 ம் ஆண்டு ஜூலைத்திங்கள் முதல் 1996 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரையிலான அந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள், சேர்த்த சொத்துக்களின் அன்றைய மதிப்பு பல லட்சங்கள். இன்று அதன் பதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி உள்ளது” என்றும் பவானிசிங் தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோருக்கு எதிராக 1997 அக்டோபர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில், 39 சாட்சிகளைத்தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கு 1.7.1991க்கு முன் இருந்த சொத்துக்கள் 1.7.1991 முதல் 30.4.1996 வரையிலான சேர்த்த சொத்துக்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. வழக்கு காலத்திற்கு முன் 2 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததும், வழக்கு காலத்திற்கு பின் சொத்து மதிப்பு 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கில், குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த சம்பந்தமான உறவினர்கள் ஆவார்கள். முதல் குற்றவாளியும் இரண்டாவது குற்றவாளியும் ஒரே வீட்டில் குடியிருந்தார்கல் என்பதற்கான 9 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  மேலும், 1 முதல் 4 வரையிலான குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கான பல கம்பெனிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச்சதி செய்து, முதல் குற்றவாளி முதல்வராக இருந்தபோது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும், அவரைச்சார்ந்த மற்ற 3 குற்றவாளிகளூக்காகவும் சேர்த்து தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் நோக்கமாகும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன என்றார்.

அதனைத்தொடர்ந்து பவானிசிங், உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி, பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட சாட்சிகளின் விபரங்களை நீதிபதி முன்பு படித்துக் காண்பித்தார்சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு பங்களா. நீலாங்கரையில் 2 ஏக்கர், கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள்.

காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர், ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்.

ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டம். 30 வண்ணங்களில் பலவித கார்கள் மற்றும் டிரக்கர்கள், வாலாஜாபாத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியிருப்பது 100 ஏக்கர் நிலம். இந்த 100 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 40 கோடி ரூபாய் – சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.

சிறுதாவூரில் வாங்கியிருப்பது 25.4 ஏக்கர். இந்த நிலத்தின் அரசு மதிப்பு 42.5 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய். நீலாங்கரையில் இருக்கும் ஜெயலலிதா தரப் பினரின் 2 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 70 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி

காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 200 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 60 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய். கன்னியாகுமரியில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 1,190 ஏக்கரின் அரசு மதிப்பு 175 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 292 கோடி ரூபாய்.

பையனூரில் வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 10 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய். கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 3 கோடி ரூபாய்; சந்தை மதிப்போ 5 கோடி ரூபாய். அங்கே ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 898 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 2,450 கோடி ரூபாய், சந்தை மதிப்போ 4,500 கோடி ரூபாய் என ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளால் வாங்கப்பட்ட பல சொத்துக்கள் தொடர்பான விவரங்களையும், அது தொடர்பான சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் படித்துக்காண்பித்தார் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்.

இந்தப் பட்டியல்படி, 1991-96 – இந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 இலட்சம் ரூபாய்; சந்தை மதிப்போ 5,107 கோடி ரூயாய். இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். அதாவது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட 310 மடங்கு அதிகச் சொத்துகளை ஐந்தாண்டுகளில் குவித்திருக்கிறார் என்று கூறி மலைக்கவைத்தார் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சென்னை டெல்லி ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்...

சென்னை: டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர் பனிமூட்டம் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. வண்டி எண்.12615 சென்னை சென்ட்ரல் - டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (22.12.2014) இரவு 07.15 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (23.12.2014)அதிகாலை 02.00 மணிக்கு புறப்படும் இணை ரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண்.12621 சென்னை சென்ட்ரல் - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (22.12.2014) இரவு 10.00 மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (23.12.2014) அதிகாலை 01.00 மணிக்கு புறப்படும் இணை ரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நிலவிவரும் வரலாறு காணாத கடுங்குளிரால் 50 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

22 December 2014

இந்தியர்களுக்கு போதனை பேரழிவுக்கு தயாராகுங்கள்:??

 ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள கர்நாடக மாநிலம் கல்யாணைச் சேர்ந்த ஆரீப் மஜீதுக்கு எதிரான ஆதாரங்களை தேசிய புலனாய்வு மையம் திரட்டி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் உதவியது தெரிய வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான வஹாபி அறிஞர்கள் இந்தியா வந்துள்ளனர். சுமார் 25 ஆயிரம் அறிஞர்கள் இந்தியா வந்துள்ளதாக புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இந்தியா வந்து போதனை செய்ததுடன் இஸ்லாமிக் கைடன்ஸ் சொசைட்டி உள்ளிட்ட பல என்.ஜி.ஓ.க்கள் வாலிபர்கள் வெளிநாடு சென்று ஷரியா சட்டம் அமல்படுத்தப்பட போராட உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்பு
இணையதளத்தில் பார்த்த பல வகை செய்திகள் தான் ஆரீப் மஜீதை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர தூண்டியுள்ளது. ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் போர்க்களத்தை எப்படி அணுகுவது என்று மஜீத் ஆன்லைனில் ஒருவரிடம் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஒரு மாதம் வரை பதில் வரவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து அவரை தானேவில் உள்ள நபர் ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு பதில் வந்துள்ளது.

இதற்கிடையே மஜீத் ஃபயாஸ் கான் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அந்த கான் தான் மஜீதை இஸ்லாமிக் கைடன்ஸ் சொசைட்டி உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த என்.ஜி.ஓ. மஜீத் ஈராக் செல்ல பணம் அளித்ததுடன், அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
மஜீதை மும்பையில் இருக்கும் ஷஹீன் டிராவல்ஸுக்கு சென்று டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். மஜீத் உள்ளிட்ட சிலர் கர்பலாவுக்கு புனித யாத்திரை செல்வது போன்று சென்று அங்கிருந்து மொசுல் நகருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று ஒன்இந்தியா ஏற்கனவே செய்தி வெளியிட்டது. மஜீத் ஈராக்கில் அபு பாத்திமா என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
இஸ்லாமிக் கைடன்ஸ் சொசைட்டி:
இஸ்லாமிக் கைடன்ஸ் சொசைட்டி என்கிற என்.ஜி.ஓ. புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. அந்த என்.ஜி.ஓ.வில் சுமார் 30 பேர் உள்ளனர். அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வஹாபி அறிஞர்கள் இந்தியா வந்து இளைஞர்களுக்கு போதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
உலகில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவதே வஹாபி அறிஞர்களின் முக்கிய குறிக்கோள். இந்த குறிக்கோளை போரிடுவதன் மூலமே அடைய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தானேவில் உள்ள மும்ப்ரா, பிவாண்டி மற்றும் கல்யாணில் அந்த என்.ஜி.ஓ. இது குறித்த பல கூட்டங்களை நடத்தியுள்ளது. அங்கு வரும் இஸ்லாமிய இளைஞர்களிடம் விரைவில் பேரழிவை சந்திக்கத் தயாராக இருங்கள். அந்தப் பேரழிவை நாம் தான் உருவாக்கப் போகிறோம். இந்தியா மீது போர் தொடுப்பதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது என்று போதனை செய்துள்ளனர்.
என்.ஜி.ஓ.க்கள்
சில என்.ஜி.ஓ.க்கள் வழிதவறிய வாலிபர்களுக்கு உதவி செய்வதாக தேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. தீவிரவாத அமைப்பில் சேர்பவர்களை விட அவர்கள் சேர உதவி செய்யும் ஆட்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

பட்டா கத்தி முனையில் கொள்ளையடிக்கும் காணொளி, காட்சியால் பரபரப்பு!!

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வாகனத்தில் சென்ற பெண் ஒருவரிடம்  பட்டப் பகலில்  பட்டா கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலம் செந்தில்.. எம்.சி.என் நகரில் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் தனது பணியை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபரால் வழிமறிக்கப்பட்டார்.

அப்போது பதற்றமடைந்து கீழே விழுந்த வேலம் மீது பெரிய அளவிலான கத்தியை நீட்டி அவரிடம் உள்ள நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார். அந்த சமயத்தில் மற்றொரு நபர் அருகே இருந்த சந்துப் பகுதியிலிருந்து வந்து மிரட்டலில் இணைந்துள்ளார்.

இதனை அடுத்து பயத்தில் தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி வேலம் தந்துள்ளார். சென்னை நகரில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரால் ஜன்னல் வழியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து எம்.சி.என் நகரைச் சேர்ந்தவர்களால் இந்த கொள்ளை குறித்து துரைப்பாக்கம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வீடியோவை ஆதாரமாக கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆசிரியையிடமும் கொள்ளையர்களின் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

21 December 2014

தேவயானிக்கு பணியில் இருந்து விலகியிருக்கும்படி உத்தரவு!

விசாரணை ஆரம்பம்! அமெரிக்க முன்னாள் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை, வெளியுறவுத் துறைப் பணியில் இருந்து விலகியிருக்கும்படி மத்திய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர், "கட்டாயக் காத்திருப்போர்' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் தனியார் ஊடகத்துக்கு அவர் மேலதிகாரியின் அனுமதியின்றி அளித்த பேட்டி, அமெரிக்காவில் இந்திய தூதரகப் பணியில் இருந்தபோது தனது குழந்தைகளுக்கு இரட்டை பாஸ்போர்ட் வைத்திருந்த தகவலை மீண்டும் தாயகம் திரும்பியதும் மறைத்தது உள்ளிட்ட செயல்களுக்காக அவர் மீது நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையின் அடிப்படையில் வெளியுறவுத் துறை இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. வெளியுறவுத் துறையில், இயக்குநர் நிலையில் உயரதிகாரியாகப் பதவி வகித்து வந்த தேவயானி கோப்ரகடே, தில்லியில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் அளித்த சர்ச்சைக்குரிய பேட்டியில் கூறியிருந்ததாவது: "எனது குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தவர்கள். அதனால் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைத்துள்ளது. அதே சமயம், வம்சாவளி இந்தியர் என்ற முறையில் அவர்கள் இந்திய பாஸ்போர்ட்டையும் வைத்துள்ளனர். நான் தில்லிக்கு திரும்பி வந்துவிட்டாலும், எதிர்காலத்தில் எனது குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் என்ற முறையில் அமெரிக்க பாஸ்போர்ட்டை அவர்கள் வைத்திருப்பதில் தவறில்லை எனக் கருதுகிறேன். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஆசிரமத்தை கண்டித்து இன்று முழு கடையடைப்பு

3 பெண்கள் கடலில் குதித்து தற்கொலை அரவிந்தர் ஆசிரமத்தை கண்டித்து 20.12.14 முழு கடையடைப்பு பஸ்கள் மீது கல்வீச்சு
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வாழைக் குளம் பகுதியில் உள்ளது. இங்கு பீகாரை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ(வயது 54), அருணா(52), ராஜஸ்ரீ(49), நிவேதிதா(48), ஹேமலதா(39) ஆகியோர் தங்கி ஆசிரமத்திற்கு சேவை செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 5 பேரும் ஆசிரம நிர்வாகத்தினர் சிலர் தங்களை பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீசில் புகார் செய்து இருந்தனர்.
இதையடுத்து ஆசிரம விதிமுறைகளை மீறியதாக 5 சகோதரிகளையும் அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் குடியிருப்பில் இருந்து அவர்கள் வெளியேற மறுத்தனர். மேலும் இதுதொடர்பாக ஆசிரமம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆசிரமத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து 5 சகோதரிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 மாத கால அவகாசம் அளித்து குடியிருப்புகளை காலி செய்யும்படி உத்தரவிட்டது. இதை தொஅடர்ந்து ஆசிரமம் அவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டது  இதனால் விரக்தியடைந்த அவர்கள் 5 பேரும் தாய், தந்தை ஆகியோரும் தற்கொலை செய்வதற்காக கடலில் குதித்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் மீட்டகப்பட்டனர்.
இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. ஆசிரம நிர்வாகத்தை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. ஆசிரமம் மற்றும் ஆசிரமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தது.
மேலும் ஆசிரமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரமத்தை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி இன்று முழு அடைப்பு நடத்தப்போவதாக சமூக அமைப்புகள் அறிவித்தன. இதற்கு காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புதிய நீதிகட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.
இன்று காலை முழுஅடைப்பு தொடங்கியது. புதுவையில் உள்ள பெரிய மார்க்கெட், சின்னக்கடை மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் ஆகியவை இயங்கவில்லை. கடைகள் அமைந்துள்ள முக்கிய வீதிகளான நேருவீதி, காந்திவீதி, அண்ணாசாலை, காமராஜர்சாலை, மறைமலை அடிகள் சாலை ஆகியவற்றில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. புதுவை அரசு பஸ்களும், தமிழக அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. ஆட்டோ, டெம்மோ ஓடவில்லை. அரசு பஸ் மீதும் தணிர் பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. னியார், அரசு பளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படது.  பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கபட்டு உள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

20 December 2014

ஏதாவது செய்யவேண்டும்! அதனால் அரசியலில் குதித்தேன்:

தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன் என்று நடிகையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான குஷ்பூ கூறியுள்ளார். விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய குஷ்பு, ‘1987இல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன். நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன் சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இருக்கிறது. பாஜக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறார். தமிழகத்தில் இருந்து சென்றவர் கூட்டத்தில், அவரது கட்சித் தலைவர் புகைப்படத்தை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு அமர்ந்துள்ளார், இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது’ என்று கூறியுள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது: - நீதிமன்றம் தீர்ப்பு!

திருமணம் என்னும் தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது என உத்தரப் பிரதேச மாநில அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த 5 தம்பதியர்களில், கணவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மனைவி ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். திருமணத்துக்காக கணவரின் மதமான இஸ்லாமுக்கு 5 பெண்களும் மதம் மாறியிருந்தனர் அந்த 5 தம்பதியினரும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தனர். இந்த மனுக்கள், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதி கூறுகையில், "கடந்த 2000 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கை என்ற அடிப்படையில்லாமல், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்துக்காக மட்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இந்த மனுக்கள் மீதும் தீர்ப்பளிக்கிறேன்" என்றார். மேலும் நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வானி கூறுகையில், இந்த திருமணங்கள் அனைத்தும், புனித குரானின் சூரா 2 அயாத் 221ஆவது பிரிவுக்கு எதிரானதாகும். அந்தப் பிரிவில், இஸ்லாம் மீது நம்பிக்கையில்லாத பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது. அதேபோல் இஸ்லாமியர்கள் தங்களது மகள்களை, இஸ்லாத்தின் மீது நம்பிக்கை வைக்காதோருக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்துள்ள பெண்கள் அனைவரும், தங்களுக்கு இஸ்லாம் குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளனர். திருமணத்துக்காகவே, இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களின் மதம் மாறுதலை அங்கீகரிக்க இயலாது என்றார் அவர். மேலும், 5 தம்பதியினர் தாக்கல் செய்திருந்த மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19 December 2014

பெண்கள் பாதுகாப்புக்காக மிளகு ஸ்ப்ரே! வழங்க பொலீசார் முடிவு!

வடக்கு டெல்லியில் கடந்த 5-ந் தேதியன்று உபேர் கால் டாக்சி டிரைவரால் 27 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் டெல்லியில் 4 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுவதாகவும்
 கூறப்படுகிறது. இது தவிர கடத்தல்காரர்களால் இளம்பெண்கள் கடத்தப்படுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக நாளொன்றுக்கு சுமார் 40 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் அதில் 4 வழக்குகள் கற்ப்ழிப்பு வழக்குகள் என்று அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
அதுவும் டெல்லி புறநகர், வடகிழக்கு மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய பகுதிகளில் அதிக கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடத்தில் கடந்த நவம்பர் 15 வரை 1,686 பேர் பாலியல் பலாத்காரத்திற்கும், 3,589 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் 
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை குற்ற விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 11,479 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக 13,230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2 வருடங்களாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. இதை தொடர்ந்து டெல்லி போலீசார் பெண்கள் பாதுகாப்புக்காக மிளகு ஸ்ப்ரே கேன் வழங்க நடவடிக்கை எடுத்து வருன்றனர்.
 முதலில் 1000 மிளகு ஸ்பிரே கேன்கள் பெண் பதிதிரிகையாளர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இளம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது
. பெண்கள் தங்களுக்கு மிளகு ஸ்பிரே கேன்கள் வேண்டும் என்றால் 2 பாஸ்போர்ட் போட்டாவுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அதிக பட்ட மிளகு ஸ்பிரே கேன்கலை வாங்க முடிவு செய்து உள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி இருந்த 3 பெண்கள் கடலில் குதித்து தற்கொலை!

துவையில் மகான் அரவிந்தரால் உருவாக்கப்பட்ட அரவிந்தர் ஆசிரமம் உள்ளது. மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட், உத்திர பிரதேசம், உத்ரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த அரவிந்தர் பக்தர்கள் தங்கள் சொத்துகளையும், உடமைகளையும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு அளித்துவிட்டு ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வருகின்றனர். இத்தகைய அரவிந்தர் பக்தர்கள் தங்குவதற்கான ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் புதுவை நகரில் ‘ஒயிட் டவுன்’ என அழைக்கப்படும் பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சேவை செய்து வருகின்றனர்.ஆசிரம குடியிருப்பில் தங்கி சேவை செய்யும் பக்தர்களுக்கு என்று ஆசிரம நிர்வாகத்தால் பல விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதேபோன்று புதுவை குருசுகுப்பத்தில் உள்ள ஆசிரம குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அருணாஸ்ரீ (வயது 52), ராஜஸ்ரீ (49), நிவேதிதா (42), ஜெயஸ்ரீ (54), ஹேமலதா (39) ஆகிய 5 சகோதரிகள் தங்கியிருந்து சேவை செய்து வந்தனர்.

இவர்களுடைய பெற்றோர் பிரசாத் (86), சாந்திதேவி (78) ஆகியோர் வேறொரு இடத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். ஆசிரமத்தில் தங்கியிருந்த சகோதரிகள் 5 பேரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரம நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக போலீசில் புகார் செய்தனர்.

மேலும், பத்திரிகைகளுக்கு நேரடியாக புகார் அளித்தனர். அதோடு ஆசிரம நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். ஆசிரம சகோரிகளின் புகாரை புதுவை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. அதனால் கோர்ட்டு மூலம் புகாரை பதிவு செய்ய உத்தரவு பெற்றனர். இதனால் ஆசிரம விதி முறைகளை மீறி போலீசில் புகார் அளித்ததால் 5 சகோதரிகளையும் ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், குடியிருப்பில் இருந்து வெளியேற சகோதரிகள் மறுத்து விட்டனர்.

அதோடு ஆசிரம நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஆசிரம நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆசிரம குடியிருப்பில் இருந்து சகோதரிகள் வெளியேறவும் உத்தரவிட்டது. இதனையடுத்து சகோதரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 மாத கால அவகாசம் அளித்து குடியிருப்பில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. இதனால், சகோதரிகள் ஆசிரம நிர்வாகத்தை எதிர்த்த போதிலும் குடியிருப்பிலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் 6 மாத கால அவகாசம் முடிவடைந்தது. இருப்பினும் சகோதரிகள் குடியிருப்பை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அங்கேயே தங்கி இருந்தனர். இதனையடுத்து நேற்று ஆசிரம நிர்வாகம் கோர்ட்டு உத்தரவை காட்டி போலீசார் மூலம் சகோதரிகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது.

இதனை அறிந்த சகோதரிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை வெளியேற்றினால் கூட்டாக தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர். 5 பேரில் இளைய சகோதரியான ஹேமலதா குடியிருப்பின் 4–வது மாடியான மொட்டை மாடிக்கு சென்று தங்களை வெளியேற்றினால் குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தனர். ஹேமலதாவின் மற்ற சகோதரிகள் 4 பேரும் கீழ்தளத்தில் நின்றபடி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து குடியிருப்பில் இருந்து வெளியேற மறுத்தனர்.

தகவல் அறிந்த புதுவை பெரியகடை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தற்கொலை முடிவை கைவிட்டு ஹேமலதாவை கீழே இறங்கி வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ஹேமலதா கீழே வர மறுத்துவிட்டார். இதற்கிடையே ஹேமலதாவிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் மொட்டை மாடிக்கு சென்றனர். அவர்களில் ஒருவராக சாதாரண உடையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சஜீத்தும் சென்றார். அவர் ஹேமலதாவை கீழே குதிக்க விடாமல் பிடித்து கொண்டார். பின்னர் அவரை பெண் போலீசார் மீட்டு கொண்டு வந்தனர்.

சகோதரிகள் 5 பேரையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர். அவர்கள் தங்கள் பெற்றோர் தங்கியிருக்கும் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் 5 சகோதரிகளும் தாய், தந்தை ஆகியோரும் காலாப்பட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு 7 பேரும் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கினார்கள். அப்போது அங்கிருந்த மீனவர்கள் இதை பார்த்துவிட்டனர். உடனே ஓடி சென்று அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் 7 பேரும் தண்ணீருக்குள் அதிக தூரத்துக்கு சென்றுவிட்டனர். அவர்களை அலை இழுத்து சென்றது.
மீனவர்கள் நீந்தி சென்று 4 பேரை மீட்டனர். 3 பேரை அலை இழுத்து சென்று விட்டது. அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுடைய உடல் கரையில் ஒதுங்கியது. கடலில் மூழ்கி இறந்தவர்கள் தாயார் சாந்திதேவி, சகோதரிகள் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ என்று தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மீட்கப்பட்ட தந்தை பிரசாத், நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>!

18 December 2014

ஏப்ரல் மாதம் வரை ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். அதே போல் பெங்களூரு சிறப்பு
 நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை
 விரைந்து விசாரித்து முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூர் உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிபதிகளை நியமித்து மூன்று மாதத்துக்குள் இவ்வழக்கை விசாரித்து முடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. முன்னதாக ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மேற்முறையீட்டுக்கான கோப்புகளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனேவ சமர்ப்பித்துவிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது. 
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

17 December 2014

கற்பழித்து கொலை செய்யப்பட்ட 2-ம் ஆண்டு நினைவு தினம்

டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ துணை மாணவி கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று டெல்லியில் கடைப்பிடிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோரால் நடத்தப்படும் நிர்பயா அறக்கட்டளை சார்பில் டெல்லியில் நேற்று நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுனம் கடைபிடித்தனர்.

அஞ்சலி நிகழ்ச்சியில் உரையாற்றிய மாணவியின் தாயார் உணர்ச்சிமிகு தனது உரையில், “கொல்லப்பட்ட நாளில் 2 அல்லது 3 மணி நேரத்தில் திரும்பி வருவேன் என்று கூறி சென்ற என் மகள் திரும்பி வரவே இல்லை. கனநேரத்தில் ஏற்பட்ட அவளது மரணம் எங்களை மிகவும் வாட்டியது. ஆனால் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் சட்டப்படியான தண்டனை இதுவரை கிடைக்கவில்லை” என்றார்.

அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி, முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

16 December 2014

இந்திய ரயில்வே துறையால் நடத்தப்பட்ட தேர்வில் ஜெயலலிதா

தொடர்புடைய கேள்வி இடம்பெற்றது குறித்தான விசாரணை நடத்திடக் கோரியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி திங்களன்று மாநிலங்களைவில் தெரிவித்தார்.
ரயில்வே வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வில், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்தான கேள்வி எழுப்பப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது.
இது உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ளதாக அஇஅதிமுகவின் உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் இது தொடர்பான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள்.
இது தொடர்பில் பதிலளித்த அருண் ஜெட்லி, இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தேர்வு வாரியத்தால்

 கடந்த 14 ஆம் தேதி ஞாயிறன்று நடத்தப்பட்ட வேலை வாய்ப்புக்கான தேர்வில் இந்த விவகாரம் தொடர்புடைய கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கான வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 43ஆவது கேள்வியில், இந்திய மாநிலங்களில், மாநில முதல்வராக பொறுப்பு வகித்த எவர், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்தார் என்று கேட்கப்பட்டிருந்தது.
அதற்கான விடைத்தேர்வுகளாக லாலு பிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா, ஜெயலலிதா மற்றும் பி.எஸ்.எட்டியூரப்பா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
இது தொர்டர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், சமுக ஊடகங்களில் வேகமாக பரவியதால், இது பரபரப்பான விடயமாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்திலும் சர்ச்சையாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா முதல்முறையாக முதல்வர் பதவி வகித்த 1991-1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகால சிறை தண்டனையையும், 100 கோடி அபராதத் தொகையையும் தண்டனையாக விதித்தது.
இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியையிழந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜாமீனை நீட்டிக்கக் கோரும் இத்தாலி வீரரின் கோரிக்கை நிராகரிப்பு!!

: டெல்லி: கேரளா மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இத்தாலி வீரர் லட்டோர் தமக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனு காலத்தை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்திய மீனவர்கள் 2 பேர் கொலை வழக்கில், இத்தாலி கடற்படை வீரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், இதய அறுவை சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று இத்தாலி சென்றுள்ள கடற்படை வீரர் மஸ்ஸிமிலானோ லாட்டோர், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து இத்தாலியிலேயே இருக்கக் கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தார்.

மேலும், சல்வடோர் கிரோன், தான் இத்தாலி சென்று கிறிஸ்துமஸ் பண்டிகையை அங்கு தனது குடும்பத்துடன் கொண்டாட அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவின் சட்ட விதிகளை இருவரும் மதிக்க வேண்டும் என்றும், உடல் நலத்தைக் காரணம் காட்டி வீரர் இத்தாலி சென்றுள்ளார். தற்போதைய நிலையில் இருவரும் தனித்தனியே இதுபோன்ற மனுக்களை அளிப்பது சரியில்லை. இதுபோன்ற சலுகைகள் உலகின் எந்த நாட்டிலும் கிடைக்காது என்று கூறி நிராகரித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இலங்கை மீனவர்களை இந்தியா விடுவிக்கக் கோரி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று நீர்கொழும்பில் திங்களன்று நடைபெற்றது.
நீர்கொழும்பு நகரில் ஒன்றுகூடிய இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மீனவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுதலைசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசாங்கம் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளையும் மேட்கொள்ளவில்லை என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
எமது மீனவர்களை விடுதலைசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருத்தியடைய முடியாதென்று கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்பு இவர்களை விடுதலைசெய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
ஆயினும் இது சம்பந்தமாக கருத்துகளை தெரிவித்துள்ள மீன்பிடி துறை துணை அமைச்சர் சரத் குமார குணரத்ன இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான தலையீடுகளை மேற்கொள்வதற்கு சட்டரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு அவகாசம் இல்லை என்று கூறினார்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுமன்னிப்பொன்றின் கீழ் மாத்திரமே இவர்களை விடுவிக்க முடியுமென்று கூறிய அமைச்சர் குணரத்ன, இவ்வாறான பொதுமன்னிப்பொன்றை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தேரிவிவித்தார்.
எனவே மக்கள் பொறுமைகாக்க வேண்டுமென்று கூறிய அமைச்சர் சரத் குமார குணரத்ன, ஆர்பாட்டங்களை நடத்துவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாதென்றும் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

15 December 2014

போர் விமானங்களில் விரைவில் பெண் பைலட்டுகள்:

 
எதிர்காலத்தில் இந்திய போர் விமானங்களில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்படுவார்கள் என விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.  இதுபற்றி அவர் கூறுகையில், ‘பெண்கள் விமானப்படையின் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். எதிர்காலத்தில் போர் விமானங்களில் பைலட்டுகளாகவும் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறேன். ஆயுதங்களை நவீனமாக்க இது உதவும். இது ஒரு சரியான முடிவு.என்றார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், உடல்ரீதியாக பெண்கள் போர் விமானங்களை ஓட்டுவதற்கு ஏற்றவர்கள் அல்ல. குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும் போது அவர்கள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று விமானப்படை தளபதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி மீனவர்கள் விரட்டியடிப்பு

இராமேசுவரம் பகுதியை சேர்ந்த 500 மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

நேற்று இரவு அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல்கள், இராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தன. அப்போது இலங்கை கடற்படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி, மீனவர்கள் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். 

சில இலங்கை இராணுவத்தினர் தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசினார்கள். படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் தாக்கி சேதப்படுத்தினார்கள் என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது. 

இதனால் பயந்து போன இராமேசுவரம் மீனவர்கள், வலைகளை அப்படியே விட்டுவிட்டு, கரையை நோக்கி திரும்பினார்கள். இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கண்ணீர்மல்க கூறினர். 

இந்த தொடர் சம்பவத்தால் இராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

13 December 2014

சாமர்த்தியமாக பஸ்ஸினை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய டிரைவர்!!

 விபத்தில் கை, கால்களை இழந்த இராணுவ வீரர்பெங்களூரு: பெங்களூரு அரசு சொகுசு பஸ்சின் பின்புற டயர் பேலூர் அருகே கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று சிக்மகளூரு நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர். அந்த அகரே கிராமத்தில் சென்றபோது பஸ்சின் பின்பக்க டயர் ஒன்று கழன்று தனியாக ஓடியது.

இதை பஸ்சின் முன்பக்க ஓரக் கண்ணாடி மூலம் டிரைவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதை அறிந்த பஸ் பயணிகளும் என்ன நடக்குமோ என்ற அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர்.

இருப்பினும் பஸ்சின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சின் வேகத்தை படிப்படியாக குறைத்து, பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதனால், பஸ்சில் இருந்த 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதிர்ச்சியில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் சாமர்த்தியமாக செயல்பட்டு விபத்தில் இருந்து காப்பாற்றிய டிரைவரை பயணிகள் பாராட்டினார்கள்.

இதுகுறித்து, பஸ் டிரைவர், கண்டக்டர் சிக்கமகளூரு அரசு பஸ் டெப்போவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு பஸ் டெப்போ ஊழியர்கள் பஸ்சில் கழன்று ஓடிய டயரை பொருத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த அரசு சொகுசு பஸ் சிக்கமகளூரு நோக்கி சென்றது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>