இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று நீர்கொழும்பில் திங்களன்று நடைபெற்றது.
நீர்கொழும்பு நகரில் ஒன்றுகூடிய இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மீனவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களை விடுதலைசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது மீனவர்களை விடுவிப்பதற்கு இந்திய அரசாங்கம் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளையும் மேட்கொள்ளவில்லை என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
எமது மீனவர்களை விடுதலைசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருத்தியடைய முடியாதென்று கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்பு இவர்களை விடுதலைசெய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
ஆயினும் இது சம்பந்தமாக கருத்துகளை தெரிவித்துள்ள மீன்பிடி துறை துணை அமைச்சர் சரத் குமார குணரத்ன இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான தலையீடுகளை மேற்கொள்வதற்கு சட்டரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு அவகாசம் இல்லை என்று கூறினார்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொதுமன்னிப்பொன்றின் கீழ் மாத்திரமே இவர்களை விடுவிக்க முடியுமென்று கூறிய அமைச்சர் குணரத்ன, இவ்வாறான பொதுமன்னிப்பொன்றை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தேரிவிவித்தார்.
எனவே மக்கள் பொறுமைகாக்க வேண்டுமென்று கூறிய அமைச்சர் சரத் குமார குணரத்ன, ஆர்பாட்டங்களை நடத்துவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியாதென்றும் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment