மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் இரண்டு வகுப்பறைகள் எரிந்து சேதமடைந்தன.
மதுரையில் இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள வேதியியல் துறைக்கான கட்டடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. இதை பார்த்த ஊழியர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 வாகனங்களில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ மளமளவென பரவியதால், அந்த கட்டடத்தில் உள்ள இரண்டு வகுப்பறைகள் மற்றும் நுலகம் ஆகியை தீயில் எரிந்து பலத்த சேதமடைந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், வகுப்பறையில் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காமராஜர் பல்கலைக்கழகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 கருத்துகள்:
Post a Comment