Search This Blog n

12 December 2014

மின்சார ரெயில் போக்குவரத்து 7 நாட்களுக்கு மாற்றம்

ஆவடியில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்து 7 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஆவடியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (12–ந்தேதி) முதல் 19–ந்தேதி வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–
1. சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூருக்கு செல்லும் மின்சார ரெயில் (எண்.43257) இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் நிற்காது.
2. சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் (எண்.43801) இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ரெயில் நிலையங்களில் நிற்காது.
3. ஆவடியில் இருந்து அதிகாலை 2.55 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயில் (எண்.43891) இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் நிற்காது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment