Showing posts with label ஏனைய செய்தி. Show all posts
Showing posts with label ஏனைய செய்தி. Show all posts
26 June 2022
பாலின உறவு: இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண்
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு வந்து, இங்குள்ள தனது நண்பியுடன் சேர்ந்து வாழப் போவதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளா
இந்திய தமிழ் பெண் (24 வயது) ஒருவருக்கும், இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண் (19) ஒருவருக்கும் இடையில் தொலைபேசி வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண், தனது நண்பியைச் சந்திப்பதற்காக கடந்த 20ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். பின்னர் அவர் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்றிலுள்ள இலங்கை நண்பியின் வீட்டுக்குச் சென்று, அவரை இந்தியா அழைத்துச் செல்லப் போவதாகவும் அவருடனேயே வாழப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கு இலங்கை நண்பியும் இணங்கியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை பெண் – ஒன்றரை வயது பெண் குழந்தையொன்றின் தாய் என்பது
குறிப்பிடத்தக்கது.
தனது கணவருடன் இவர் வாழ்ந்து வந்த நிலையிலேயே, இந்த முடிவை எடுத்துள்ளார் என அவரின் குடும்பத்தார்
கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த மேற்படி பெண், இலங்கை நண்பியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டதாகவும், அவ்வாறு செய்யாது விட்டால், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும், இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து அக்கரைப்பற்று காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்ததாக இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெண்ணின் தோழியொருவர் இந்தியாவில் வசித்து வருகின்றார். அவர் மூலமாகவே, குன்னத்தூரைச் சேர்ந்த பெண்ணின் தொடர்பு – இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் சில காலம் தொலைபேசி, வாட்ஸ்ஆப் மூலமாகப் பேசி, நட்பு வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இந்திய பெண் – தன்னுடைய இலங்கை தோழியின் வீடு தேடி வந்து, தனது விருப்பத்தை
வெளிப்படுத்தியுள்ளார்.
தனது கணவரின் வீட்டிலிருந்து கிளம்பி வந்து, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றிலுள்ள தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் இலங்கைப் பெண் தங்கியிருக்கிறார்.
காவல் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த பெண்கள் இருவரையும் கடந்த புதன்கிழமை (22ஆம் திகதி) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இதன்போது சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரின் விளக்கங்களையும் கேட்ட நீதவான் ,அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்தமையினால், இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் காண்பித்து, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த அறிக்கையினை ஜூன் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து குறித்த இருவரும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம்
அறிய முடிகிறது.
இதன் பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
30 April 2022
காங்கேசன்துறை கடற்படையினரால் இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் கைது
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின்
ஊடாக 29-04-2022.அன்றயதினம் இரவு இந்தியா நோக்கி படகொன்றில்
பயணித்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர் , கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்காக பலாலி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில், இன்று மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
27 December 2020
புரட்டியெடுக்குமா இந்தியா 195 ஓட்டங்களுடன் சுருண்டது அவுஸ்;
சுற்றுலா இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி 26-12-20-அன்று மெல்பேர்னில் ஆரம்பமாகியது.
போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 72.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 195 ஓட்டங்களை
மட்டும் பெற்றது. துடுப்பாட்டத்தில் மர்னஸ் லபுஸ்சன் (48), ட்ரவிஸ் ஹெட் (38) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (56/4), ரவிச்சந்திரன் அஸ்வின் (35/3)
விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இந்திய அணி, இன்றைய ஆட்ட நாள் நிறைவில் 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது
15 December 2020
இலங்கையில் மீன்வளத்தை அள்ளவந்த இந்திய மீனவர்கள் 19 பேர் கைது
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி இலங்கை தமிழ் மீனவர்களின் மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது
செய்துள்ளனர்.
நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும் அத்துமீறி கரைக்கு மிக நெருக்கமாக வந்து மீன்வளத்தை வாரி அள்ளிச் சென்ற இந்திய மீனவர்களின்
மோசமான நடவடிக்கையால் இனி வரும் நாட்களில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வடமராட்சி மீனவர்கள் எச்சரிக்கை தீர்மானம் எடுத்திருந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடிப் படகுகளை சுற்றிவளைத்த கடற்படையினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அதில் இருந்த 19 மீனவர்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக அத்துமீறும் மீனவர்கள் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
23 July 2020
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுனர் முடிவெடுக்காமைக்கு உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
இந்தியாவில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைதண்டனை
அனுபவித்து வருகின்றனர்.
7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக
ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.இது தொடர்பாக
கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், 7 பேர் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.7பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் எனவும், நீதிமகன்றம் அதிரடியாகக் கேள்வியெழுப்பியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>21 July 2020
இலங்கைக்குள் இந்தியாவிலிருந்து நுழைந்த பூனையினால் பேராபத்து
இந்திய உயரஸ்தானிகர் குழுவுடன் ஸ்ரீலங்கா வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற
அச்சம் எழுந்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிய வருகையில், இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர் கடந்த 18 -07-20.ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.இவர்களுடன் வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.அதனை
ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வர பேராதனை விலங்கு
உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தது.தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய இந்த பூனையின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா
என்பது குறித்த பரிசோதனை நடத்தப்படவில்லை எனத் தெரியவருகிறது.விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால், இது ஆபத்தான நிலைமை என விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
03 January 2019
மன்னார் மீனவர்கள் இந்தியக் கடலில் மாயம் கரையொதுங்கிய ப் படகு …
தமிழகம், இராமேஸ்வரம் – சேரான்கோட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய படகு இலங்கை, மன்னார் – வங்காலை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும்
தெரிவிக்கும் போது;
இந்த படகில் நேற்று மாலை மீனவர்கள் இருவர் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை படகு சேரான்கோட்டை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.எனினும்,
இதில் பயணித்த இரு மீனவர்களும் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில்
குறித்த இருவர் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். மேலும், முடிந்தவரை இந்திய தமிழக மற்றும் மீனவர் தரப்பு, இவர்களை கண்டு உரிய குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கோரியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
21 November 2018
பெருங்கடலுடன் பல வருடங்களின் பின்னர் சங்கமித்த நந்திக்கடல்
முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதி இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்திக்கடல் ஏரி, மழை
காலங்களில் நீர்மட்டம் உயர்வடைந்ததும் இயற்கையாகவே பெருங்கடல் நோக்கிச் செல்வது முன்னர் வழக்கமாக இருந்தது.இந்
த நிலையில், பல வருடங்களின் பின் இயற்கையாகவே 21.11.2018. அதிகாலை உடைப்பெடுத்துள்ளதாக மீனவர்கள்
தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக முல்லைத்தீவில் தொடர்ந்த அடைமழையால் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன், இன்று நந்திக்கடல் வெட்டுவாய்க்கால் பகுதியில் உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>03 July 2018
ரோல்ஸ் ராய்ஸ் கார் மணமக்கள் பயணிக்கும் வகையில்
: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹமீத் கான் என்பவர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை திருமண ஊர்வலத்தின்போது மணமக்கள் ஒய்யாரமாக
அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு ராயல்ஸ் வெட்டிங் கார் என பெயர் சூட்டிய அவர், அதிக லாபத்திற்காக இந்த ஏற்பாட்டை செய்யவில்லை, நடுத்தர மக்களும் செல்வந்தர்கள் போல் உணர வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
06 June 2018
இளைஞர்களின் நடவடிக்கையினால் யாழில் ரஜினிக்கு ஏற்பட்ட அசிங்கம்
தென்னிந்திய பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் காலா படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நா
டாகாவில் இப்படத்தை திரையிட மாட்டோம் என அங்கு
பல எதிர்ப்புகள் அதிகரித்து
வருகின்றன. படகுழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விட்டன.இந்தச் சமயத்தில் யாழ்பாணத்தில் இளைஞர்கள் காலா படத்தின் போஸ்டர் முன்
செருப்பை காண்பித்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வீரமண்ணில் கோழையின் படத்தை திரையிட விடமாட்டோம் எனகு; கூறி வருகின்றனர். இந்த செருப்படி காலாவிற்கு மட்டமல்ல அதை ஆதரிக்கும் அனைவருக்கும் தான் என எச்சரித்ததுடன் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
02 May 2018
கோடீஸ்வரரான ஜாக்கிசானின் மகள் வீதியில் வசிக்கும் பரிதாபம்
பிரபல நடிகர் ஜாக்கிசானின் இளையமகள் எட்டா நங், தான் தங்குவதற்கு வீடு இன்றி பாலத்தின் அடியில் வசித்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது
குறிப்பிடத்தக்கது.
, இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், நானும் எனது தோழி ஆண்டி ஆன்ட்டும் வசிப்பதற்கு வீடு இன்றி பாலத்தில் வசித்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது
புனிதமான அன்பு.
எங்களுக்கு உதவி செய்யுமாறு எனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் உதவி கேட்டோம். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனது தந்தை 395 மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரர். அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.
நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், எங்களை பிரித்துவிடுவார்களே என பயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பை புரிந்துகொண்டு உதவி செய்ய முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.
ஹாங்காங்கின் முன்னாள் அழகி எலா நங்க்கும்- ஜாக்கி சானுக்கும் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவர் தான் எட்டா நங். ஜாக்கி சானுக்கு 1982 ஆம் ஆண்டு ஜோன் லிம் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
தனது மகளின் நிலை குறித்து ஜாக்கிசான் பெரிதாக கருத்து கூற முன்வரவில்லை. ஒரு தந்தையாக எனது மகள் விடயத்தில் நான் தோல்வியடைந்துவிட்டேன், இதனை எப்படி அணுகுவது என்பது எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
18 April 2018
யாழில் கேரளா கஞ்சாவுடன் வசமாக மாட்டிய மூவர்;
யாழ்ப்பாணம் சங்குபிட்டியில் வைத்து 35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் 11 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அதிகாரி ரொஷான் பெர்ணாண்டோ தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து பட்டா ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட மூவரும் புத்தளத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
31 January 2018
இந்திய நடிகையுடன் திருமணம் யாழ் இளைஞனுக்கு அடித்தது அதிஷ்டம்
இலங்கைத் தமிழர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியாவின் பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா துரடி தொடர்பில் சில செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பிரபல தனியார் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகத்தில் நடிப்பவரே சரண்யா.
சென்னையை சேர்ந்த இவர் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் MA Broadcasting Communication படித்து, ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னர், பாபி சிம்ஹா நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
இவர் தெலுங்கு மற்றும் 2 தமிழ் படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இவர் இலங்கைத் தமிழரை காதலித்து மணமுடித்த நிலையில் இவர்களின் காதல் கதை தொடர்பில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் வசிக்கும் அமுதன் என்பருடன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் மயிலாப்பூர் – கபாலீஸ்வரர் கோவிலுக்கு அமுதனின் குடும்பத்தினர் வந்தபோது அமுதனை சரண்யா சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் மலர்ந்த நட்பு காதலாகி கல்யாணம் வரை சென்றுள்ளது.
லண்டனில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு மனவளம் குறித்து ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் என் கணவர் இருக்கிறார் என சரண்யா தெரிவித்திருக்கின்றார்.
மேலும், என்னுடைய கணவர் ஒரு சிறந்த மிருதங்க இசைக் கலைஞர். யோகா மற்றும் தியானக் கலையிலும் அவர் நிபுணர் எனவும் தனது காதல் கணவரைப்பற்றி கூறியுள்ளார்.
திருமணத்திற்குப் பின் இந்தியாவில் இருந்து செய்தி வாசிக்காவிட்டாலும் லண்டனில் இருந்து தனது பணியை தொடர்வேன் என்று அறிவித்திருந்த நிலையில், சென்னையில் தங்கி நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது
10 July 2017
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கூட்டம்: எதற்காக கூடியது தெரியுமா?
GST வரியை திரும்பப் பெறக் கோரி நேற்று மாலை நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
ஜவுளிக்கு பெயர் போன ஊர் சூரத், ஜவுளி துறையில் 5 முதல் 18.5 சதவிகிதம் வரை GST வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி துறை பெரிய அளவில் பாதிக்கும் எனக் கூறி GST வரியை திரும்பப் பெறக் கோரி நேற்று சூரத் ல் கண்டன பேரணி நடைபெற்றது.
இதில் எதிர் பார்க்காத வண்ணம் ஜவுளி துறையை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக கோஷம் எழுப்பி கலந்து கொண்டதால் கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை மனித தலைகளாக காட்சி அளிக்கும் வண்ணம் நாடே திரும்பி பார்க்கும் வகையில் பிரம்மாண்ட கண்டன பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் மாறியது.
GST வரி நாட்டு மக்களிடம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையே இந்த பிரம்மாண்ட கூட்டம் காட்டுவதாக பொருளாதார வல்லூணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
12 December 2016
பேரிரைச்சல்.. கொட்டும் மழை.. வர்தா புயலின் ருத்ர தாண்டவம்
ஓ..வென்ற இரைச்சலுடன் பயங்கர காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
காலை 11.30 மணியளவில் . கடுமையான காற்றுடன், மழையும் பெய்வதை காற்றின் வேகமானது ஓ... என்ற பேரிரைச்சலாக வெளிப்படுவதை உங்களால் கேட்கவும் முடியும். இந்த இரைச்சல், தென்னை மரம் சாயும் அளவுக்கான பலம் கொண்ட காற்று, மழை என பல முனை தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளது சென்னை.
பொதுமக்கள் அனைவருமே வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வர்தா புயல் தற்போது சென்னை அருகே கரையை கடந்து வருகிறது. இந்த புயல் மழையால் சென்னை மாநகரம் இருளில்
மூழ்கியுள்ளது.
இதுவரை, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 4000 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 163 மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடலோர பகுதி மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த புயல் கரையை கடக்க சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
04 December 2016
போடப்பட்ட தையலை பிரிக்க சென்றார்.தாய்க்கு நேர்ந்த அவலம்!
தமிழகத்தில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மனைவி கமலா (39) பல வருடங்களாக குழந்தையில்லாமல் இந்த தம்பதியினர் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கமலா கர்ப்பமடைந்தார்.
பின்னர் பிரசவத்திற்காக கடந்த 23ஆம் திகதி திருவாரூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கமலா சேர்க்கப்பட்டார். பின்னர் 25ஆம் திகதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஒரு வாரம் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த கமலா குழந்தையுடன் தன் வீட்டிற்கு திரும்பினார்.
அதன் பின்னர் தன் உடலில் அறுவை சிகிச்சை செய்த போது போடப்பட்ட தையலை பிரிக்க மீண்டும் அதே மருத்துவமனைக்கு கமலா ஒரு வாரம் கழித்து சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் அளவில் அவர் தளர்ந்திருப்பதாக கூறி ரத்தம் செலுத்தினார்கள், அதன் பின்னர் கமலா கண்விழிக்கவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் திடீரென கோமா நிலைக்கு சென்று விட்டதாக
கூறியுள்ளார்கள்.
இதை கேட்டு அதிர்ச்சையடைந்த கமலாவின் கணவர் நாகராஜனும் அவர் உறவினர்களும் மருத்துவர்கள் ரத்த வகையை கமலாவுக்கு மாற்றி ஏற்றியதால் தான் அவர் கோமாவுக்கு சென்று விட்டார் என கூறி மருத்துவமனைக்குள் உள்ளிருப்பு போராட்டம்
நடத்தினார்கள்.
பின்னர் அங்கு வந்த பொலிசார் அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
24 November 2016
இடி மின்னல் தாக்கி ஆறு பேர் மருத்துவமனையில்!
ஹட்டன் - நோர்வுட் - கோதி தோட்டத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த அனர்த்தம் நேற்று (23.11.2016) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்கள் தற்போது மஸ்கெலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
மிகவும் குட்டியான செயற்கைகோள் விண்மீன் கண்டுபிடிப்பு
ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள்.
உலகிலேயே இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்களில் மிகவும் சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் விண்மீனுக்கு விர்கோ என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போது, பால் அண்டத்தில் இருக்கும் 50 விண்மீன் செயற்கைக்கோள்களில் 40 விண்மீன்கள் மங்கலாகவும், மிகவும் சிறிய அளவிலும், அவைகளின் ஒளிப்பிறக்க அளவு மைனஸ்(-) 8 ஆக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடுத்துள்ளார்கள்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விர்கோ விண்மீன் சூரியனில் இருந்து 280,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதுடன், இந்த விண்மீன்கள் இடம் மாறக்கூடியது என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.
23 November 2016
கறுப்பு பணத்தை சுவிஸ் பாங்குகளில் மீட்காமல் மக்களின் சுருக்கு பையில் பணம் பறித்த மோடி!
சுவிஸ் பாங்குகளில் கறுப்பு பணத்தை மீட்காமல் சாதாரண ஏழை மக்களின் சுருக்கு பையின் பணத்தை மட்டுமே பிரதமர் மோடி பறித்துள்ளார் என்று தமிழக காங்., கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆவேசமாக பேசினார்.
தமிழ்நாடு காங்., கமிட்டி நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்ட அளவிலான மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பாளை நுாற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில் தமிழக காங்., கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:
மத்திய அரசு 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது பிரமதர் மோடியின் துக்ளக் சர்வாதிகார போக்கை காட்டுகிறது. அவசர கோலத்தில் மக்களை பற்றி சிந்திக்காமல் இந்த அறிவிப்பை மோடி வௌியிட்டுள்ளார்.
இதில் மக்களின் பிரச்னைகளை அகில இந்திய காங்., கமிட்டி துணைத் தலைவர் ராகுல் பாங்க் வாசலில் கேட்டார். ஆனால் அரசியலுக்காக ராகுல் இவ்வாறு செய்வதாக எதிர்க் கட்சியினர் பிரசாரம் செய்தனர். ஆனால் அதற்குள் மோடியின் தாயார் பாங்கிற்கு சென்று பழைய நோட்டுகளை மாற்றியது அரசியல் விளம்பரத்திற்காக செய்தாரா என்பதை விளக்க வேண்டும். பெற்ற தாயை கவனிக்காத பிள்ளை நாட்டின் பிரதமராக இருப்பது துரதிருஷ்டம். தாய்க்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்காமல் பாங்கிற்கு அனுப்பிய பிள்ளை இந்திய நாட்டின் தாய்மார்களை காப்பாற்ற போவதாக கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.
இந்தியாவில் தற்போது 2100 கோடி எண்ணிக்கையில் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் 300 கோடி கரன்சி அச்சடித்தால் கூட இதற்கு 7 மாதங்கள் ஆகும் என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுவரை 500ரூபாய் புதிய நோட்டுகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே 1௦௦, 5௦ மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விட்டு புதியதாக 2 ஆயிரம் நோட்டுகளை அச்சடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக முதலில் ௨ ஆயிரம் நோட்டுகளை அச்சடித்து பிற நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது ௨ ஆயிரம் நோட்டுகள் கிடைத்தாலும் இதற்கு சில்லறை யாரும் கொடுப்பதில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து தெரியாத அரசாங்கத்தை மோடி நடத்தி வருகிறார்.
இதில் குறிப்பாக, 2ஆயிரம் நோட்டுகளை அச்சடிக்க பிரதமர் மோடிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி ரிசர்வ் பாங்க் அனுமதி பெற்று இதனை அச்சடிக்க வேண்டும். ஆனால் இதற்கான விதிமுறைகளை கடைபிடிக்காமல் சர்வாதிகாரி ஹிட்லர் போல் மோடி செயல்படுகிறார். இதுசம்பந்தமாக கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறித்த மோடி எதற்கு புதியதாக ௨ ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தார். 2 ஆயிரம் நோட்டுதான் வேண்டும் என்று மக்கள் யாரும் கேட்கவில்லை. புதிய ௨ ஆயிரம் நோட்டுகளால் கறுப்பு பணம் அதிகரிக்குமே தவிர குறையாது.
பிரதமராக மோடி பதவியேற்றதும் சுவிஸ் பாங்குகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் கணக்குகளிலும் ௧௫ லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தற்போது சாதாரண ஏழை மக்களின் சுருக்கு பையில் இருந்த பணத்தை பறித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஆனால் அதற்காக மக்கள் படும் துன்பங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முடங்கி கிடப்பதால் 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் விவசாயிகளுக்கு வழங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தமிழகம் இந்த பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த நித்திரையில் காணப்படுகிறது. நல்லாட்சி, கெட்டாட்சி என்பதற்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா, படுத்துள்ளதா, அல்லது துாங்குகிறதா என்பது தெரியவில்லை.
தமிழக முதல்வர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பி மக்கள் சேவைகளை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோாம். முதல்வர் ஜெயலலிதாவை முதலில் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தவர் ராகுல். இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நேரில் வந்து நலம் விசாரித்தவர் இந்திரா காந்தி. அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கான சிகிச்சைகளுக்கு இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பெரிதும் உதவி செய்ததை அதிமுகவினர் மறக்க கூடாது.
தற்போது கூட்டணி எதுவும் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை, ராகுல் காந்தி பார்த்து சென்றார். தற்போது திமுகவுடன்தான் கூட்டணியில் தொடருகிறோம். பாண்டிச்சேரியில் காங்., வேட்பாளர் முதல்வர் நாராயண சுவாமி வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் 3 சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக ஏற்றுக் கொள்கிறோம்.
முதல்வர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் ஆஸ்பத்திரியில் இருக்காமல் கோட்டைக்கு சென்று மக்கள் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
காங்., கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். நல்ல இளைஞர்களை அந்தந்த வட்டார சீனியர் தலைவர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பதவி அளிக்க பரிந்துரை செய்ய வேண்டும். வட்டார நிர்வாகிகள், மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகளுக்கு வர வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கட்சி சின்னத்தில் போட்டியிடும் சுமார் 20 ஆயிரம்
பதவிகளுக்கு திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கட்சி சார்பற்ற சுமார் 1.50லட்சம் பதவிகளில் அனைத்து வார்டுகளிலும் காங்., கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
கட்சியின் அடிமட்ட அளவில் பலப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில் 22 சதவீத ஓட்டு வங்கியை மீண்டும் பெற வேண்டும். வரும் காலங்களில் காங்., கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையிலோ அல்லது கூட்டணி ஆட்சி அமையும் வகையிலோ காங்., கட்சியினர் முழு வீச்சில் பாடுபட வேண்டும்.
நான் காங்., கட்சியின் மாநில தலைவர் போல் செயல்படாமல் கட்சியின் முதல் தொண்டன் போல் செயல்படுகிறேன். எப்போது வேண்டும் என்றாலும் என்னை அணுகி கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம். வாரம் ஒரு நாளாவது கட்சிக்காக முழுமையாக பணி செய்ய வேண்டும்.
தமிழக காங்., கமிட்டி தலைவராக என்னை நியமித்த ராகுல் நம்பிக்கையை காப்பாற்ற, அவரை பிரதமர் பதவியில் அமர்த்த எனது உடல், பொருள், ஆவி என்று எதையும் பாராமல் எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறேன். இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மாநில தலைவர் பேசினார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
21 November 2016
ரகசிய அறையில்பெண்ணுடன் இருந்த மதன் அதிரடி கைது!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன்.
அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், 'காசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக' கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மதன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கிடையில் மாயமான இவரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த இவரை திருப்பூரில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறுகையில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன் மதன் தொடர்பில் இருந்தார், அவரை சந்திப்பதற்காக இன்று திருப்பூர் வந்திருந்தார்.
இத்தகவலறிந்த பொலிசார் விரைந்து சென்று ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை கைது செய்தனர்.
இவரை சென்னை கொண்டு வருவதற்காக பணிகள் நடந்து வருகிறது.
சென்னை வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தகர்கண்டில் மதன் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும், இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.இன்று மதனுக்கு 44வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Subscribe to:
Posts (Atom)





























































