This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

18 February 2013

Lamborghini அறிமுகப்டுத்தும் அதிநவீன கார்,,

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடியதும் அழகிய வடிவமைப்பும் கொண்ட கார்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Lamborghini ஆனது தற்போது Sesto Elemento எனும் புதிய மொடல் காரை அறிமுகப்படுத்துகின்றது. இந்நிறுவனத்தின் 50வது வருட முடிவில் அறிமுகப்படுத்துப்படும் இக்காரானது 570 குதிரைவலுவினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, ஓய்விலிருந்து மணிக்கு 100 கிலோமீற்றர்கள் எனும் வேகத்தை பெறுவதற்கு 2 செக்கன் நேரத்தினை மட்டுமே எடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது,[காணொளி]

10 January 2013

இந்தியாவில் பாம்பு இறைச்சி விற்பனைக்கு!



மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியா இருப்பதில்லை. சில நாடுகளில் நாய் பூனை விரும்பி உண்ணப்படுகிறது. பல நாடுகளில் இதுவே மனிதர்களின் செல்லப்பிராணி இப்படித்தான் நாடுகளுக்கு ஏற்ப மனிதர்களும் அவர்களில் உணவுப்பழக்கங்களும் வித்தியாசப்படுகின்றன:

நாமெல்லாம் பாம்பென்றால் நடுங்குவோம். இந்துக்கள் சிலவகை பாம்பை தெய்வமாக வழிபடுகிறார்கள். சிலர் பாம்பை வைத்து தொழில் நடத்துகிறார்கள். ஆனால் சில நாடுகளில் பாம்பே பிரதான உணவாக உட்கொள்கிறார்கள்.
சரி விசயத்துக்கு வருவோம். இன்று நீங்கள் பார்க்கப்போகும் வீடியோ வீதியில் பாம்பு இறைச்சி விற்பனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது. இது வேறு எங்கும் அல்ல இந்தியாவின் கராச்சி மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவம்தான். பாம்பு இறைச்சியை விற்ற விளக்கமெல்லாம் பலமாக கொடுக்கிறார் அங்குகூவி கூவி விற்பவர்.{காணொளி, }

07 January 2013

9 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை மீன்!



ஜப்பானில் உள்ள சுகிஜி மீன் மார்கெட்டில் தினந்தோறும் பல மில்லியன் டொலருக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. புகழ் பெற்ற இந்த மார்க்கெட்டில் இந்த ஆண்டிற்கான முதலாவது மீன் ஏலம் இன்று விடப்பட்டது.


அப்போது 222 கிலோ எடையுள்ள ஒரு புளுபின் ட்யூனா வகை மீன் ஏலத்திற்கு வந்தது. இந்த ஆண்டின் முதலாவது ஏலம் என்பதால் அதை எடுப்பதற்கு கடும் போட்டி நிலவியது.

இதில் அந்த மீன் 155 மில்லியன் யென்னுக்கு (இந்திய மதிப்பபு சுமார் 9 கோடியே 20 லட்சம் ரூபாய்) ஏலம் போனது. ஜப்பானில் இந்த புளுபின் ட்யூனா வகை மீன்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

ஒரு கிலோ எடையுள்ள இந்த மீனின் விலை சுமார் 7600 டொலருக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு முதலாவது ஏலம் எடுத்த தொகையான 55 மில்லியன் யென்னை காட்டிலும், இது இருமடங்கு அதிகம் என்று ஏலம் எடுத்தவர் கூறினார்.{காணொளி, புகைபடங்கள்,}

30 December 2012

புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு,,

நம்மாலும் முடியும் 60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெற்ற மாபெரும் இசைப் போட்டி நிகழ்வுகளின் மிக பிரமட்டமான இசை நிகழ்சியின் காணொளி கள் இதோ உங்களுக்காக  ,,,,,

நெருப்பு மனிதன் புதிய உலக சாதனை!


சாதிக்க துடிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு பொருட்டல்ல. அதை நிரூபிக்கின்றார் இந்த மனிதன். அமெரிக்காவை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளரான Ted A Batchelor ஒட்சிசன் இல்லாமல் தனது உடல் முழுவதும் நெருப்பினால் எரிய விட்டு எல்லோர் இரத்தத்தையும் உறைய வைக்கின்றார். சுமார் 2 நிமிடம் 57 செக்கன்கள் இந்த சாகசம் தொடர்ந்தது.

இது கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் தலைநகரா ரோம்மில் இச் சாதனை இடம்பெற்றுள்ளது.

எரியும் மனிதனை காண…[காணொளி, ]

29 December 2012

ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார்

 (
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:06.37 AM GMT +05:30 ]
டெல்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் சிகிச்ச‌ை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கடந்த 16ஆம் திகதியன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயங்களுடன் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26ஆம் திகதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணியளவில்(சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு) உயிரிழந்தார்[காணொளி, இணைப்பு]

28 December 2012

எனது மகளுக்கு ஆண் நண்பர்களின் தொல்லை அதிகம்:

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மகள் மலியாவுக்கு, ஆண் நண்பர்களிடம் இருந்து அழைப்புகள் அதிகமாக வருகிறதாம். இதுகுறித்து ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமாவும், மிஷெல் ஒபாமாவும் அளித்துள்ள பேட்டியில், இப்போது மலியாவுக்கு கைபேசி கொடுத்து விட்டோம். ஆனால் அவர் யாருடன் பேசுகிறார் என்பதையெல்லாம் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை.
இருந்தாலும் நீண்ட கயிறு கொண்டு அவரை பிணைத்திருக்கிறோம். அதேசமயம், ஜனாதிபதி மாளிகையில் வசிப்பதால் அழைப்புகள் நிச்சயம் கண்காணிக்கப்படும் என்றார் மிஷல்.
அப்போது குறுக்கிட்ட ஒபாமா, எனது மகள்கள் பெரிய பொய் சொல்லிகள் என்று கூற முடியாது.
பெரும்பாலும் உண்மயைத்தான் பேசுவார்கள். எனது மகளுக்கு இப்போது அவரது ஆண் நண்பர்களிடமிருந்து நிறைய போன் அழைப்புகள் வருகின்றன என்றார்.
இந்த பேட்டியின் போது தங்களது 20 ஆண்டு கால திருமண வாழ்க்கை குறித்தும் ஒபாமாவும், மிஷலும் பேசினர்[காணொளி ]

25 December 2012

அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

வாசகர்கள் அன்பர்கள் நண்பர்கள்உறவு ஒன்றியங்கள் அனைவர்க்கும்எமது நத்தார் பண்டிகை நல் வாழ்த்துக்கள் ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை எமது உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி சாந்தியும் சமாதானமும் மிக்க தேசமொன்றில் வளமும் நிறைவும் கொண்ட நல்வாழ்விற்காய் இறையாசி வேண்டி பிரார்த்திக்கின்றது
உறவு இணையங்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள்  நன்றி.565656

06 December 2012

விதையானவர்களை வைத்து ?


அரசியல் பிழைப்பு நடத்துவோருக்கு செருப்படி .இன்று 27குறும்படம் இந்த குறும்படத்தை பார்ப்பவர்கள் ஒரு கணம் சிந்தியுங்கள் எங்கள் மாவீர்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் களத்தில் களமாடி வீழ்ந்தவர்கள் அவர்கள் வீரம் அவர்கள் ஒற்றுமை அவர்கள் தியாகம் …புலம்பெயர் சமுகத்தில் அரசியல் ஆக்கப் பட்டு தங்கள் வருமானத்தையும் தங்கள் செல்வாக்கை பெருக்கவும் பயன் படுகின்றதே தவிர எமது தேசியத்தை நிலை நிறுத்த இல்லை என்பதை தெட்ட தெளிவாக விளக்கப் பட்டுள்ளது உணர்வுபூரமாக இந்த குறும்படத்தில் …மக்களே ஒரு கணம் சிந்தியுங்கள் யாராக இருந்தாலும் எம் வீரர்கள் மாவீரத்தை வைத்து அரசியல் என்னும் சாக்கடையாக்காமல் அவர்கள் கனவு என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள் அதற்க்காக மக்களை ஒன்றாக்க வேண்டியவர்கள் இன்று பல குழுக்களாக பல பிரிவாக ஒவ்வொரு பிரிவும் ஒவொரு அரசியல் இது யாருக்காக மக்களுக்காகவா அல்லது மண்ணுக்காகவா ???அதை சிந்தித்து இனியேனும் தேசியம் என்ற பாதையில் ஒன்றாகி ஒரு பாதையில் பயணியுங்கள் என்பதே இந்த படம் மக்கள் சொல்லும் பாடம்…!!!!! இந்த குறும் படத்தை தயாரித்த அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்{காணொளி}

03 December 2012

எங்களுக்கென்று தனி நாடு உள்ளது: பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ்

எங்களுக்கென்று தற்போது நாடொன்று உள்ளது என பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் நடந்த வாக்கெடுப்பில், பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத கண்காணிப்பாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்தஸ்தை பெற்ற பின்னர், பாலஸ்தீனம் திரும்பிய ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பேசுகையில், நாம் வெற்றி பெற்று‌ வி்ட்டோம், இனி பாலஸ்தீனம் தனிநாடு தான். இது பாலஸ்தீனியர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இதனை நாம் தற்போது கொண்டாடும் தருணம் வந்துவிட்டது. நம்மிடம் இருந்த பிரிவினைக்கு ‌முற்றுப்புள்ளி வைத்துவிட்டது ஐ.நா. இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ‌என்றார். இதற்கு முன்னதாக பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் நினைவிடம் சென்று அப்பாஸ் அஞ்சலி செலுத்தினார் {காணொளி, புகைபடங்கள்,}

28 November 2012

இன்று மாவீரர் நாள் 27 /11 /2012

தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி பூசிக்கும் நாள்தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள்.அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள்.காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின் நாள்.
தங்கள் ஆசைகள் கனவுகள் எல்லாம் சுதந்திர தமிழ் ஈழமே என்ற உன்னதமான கனவுகளுடன் உறங்கிப்போன எமது தேசப்புதல்வர்களின் நாள்.இந்த உன்னத மான புனிதமான நாளிலே அந்த மாவீரர்களை எமக்குள் நிறுத்தி தமிழ் இனத்தின் விடுதலையை அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க மீண்டும் ஒருமுறை உறுதி எடுத்து கொள்வோம்.{காணொளி,}


15 October 2012

நிலாவரைக் கிணறு-பாரம்பரிய{காணொளி}

15.10.2012.By.Rajah,ஊர்ப்புதினம்-{.புகைபடங்கள்,காணொளி,}
கதைகளும் அறிவியல் விளக்கமும்நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர் நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது
கதைகளும் அறிவியல் விளக்கமும்நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர் நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது

01 October 2012

மனைவியை கொன்று சமைத்து பார்த்த சமையல் காரர்

01.10.2012.By.Rajah.மனைவியை கொன்று உடலை வேக வைத்து தடயங்களை மறைத்த தலைமை சமையல்காரருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் டேவிட் வீன்ஸ் (49). சமையல்காரர். இவரது மனைவி டான் (39). நகரில் தனியாக ரெஸ்டாரன்ட் நடத்தி வந்தார் டேவிட். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ரெஸ்டாரன்டில் கணிசமான பணம் காணாமல் போனது.

மனைவி மீது சந்தேகப்பட்ட டேவிட் தகராறு செய்தார். அன்று இரவு வீட்டில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்து மனைவியை கட்டிப்போட்டார். வாயில் டேப் சுற்றி தரையில் கிடத்திவிட்டு உறங்கி விட்டார். மறுநாள் எழுந்து பார்த்த போது மனைவி இறந்து கிடப்பதை பார்த்து டேவிட் அதிர்ச்சி அடைந்தார். பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், மனைவியின் உடலை பெரிய டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றினார். உடல் மூழ்குவதற்கு அதன் மீது எடை வைத்தார். பின்னர் தண்ணீரை கொதிக்க விட்டார். தொடர்ந்து 4 நாட்கள் சிறிது சிறிதாக மனைவியின் உடலை வேக வைத்து அப்புறப்படுத்தினார். ஆனால், மண்டை ஓடு மட்டும் அப்படியே இருந்தது.

இதற்கிடையில் மனைவி காணாமல் போனதாக போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்குப் பதிவு செய்து டானை தீவிரமாக தேடி வந்தனர். எந்த தகவலும் கிடைக்காததால் டேவிட் மீது சந்தேகம் வந்தது. வீட்டில் சோதனை நடத்திய போது, டான் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக டேவிட்டை தேடினர்.

போலீசுக்கு உண்மை தெரிந்து விட்டதை அறிந்த அவர், கலிபோர்னியாவுக்கு தப்பி சென்றார். போலீசுக்கு பயந்து மலையில் இருந்து குதித்து விட்டார். படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டான் கொலை வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் நடந்தது. அப்போது உண்மையை ஒப்புக் கொண்டார் டேவிட். இதையடுத்து அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சுண்டெலிகளை அரைத்து குடிக்கும் வினோத மனிதன்! (வீடியோ)

01.10.2012.By.Rajah.நீங்கள் எத்தனையோ விதமான பாணங்கள் அருந்தியிருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் இதில் ஒரு மனிதன் அருந்தும் பாணம் நீங்கள் எப்போதுமே அருந்தியிருக்க மாட்டீர்கள். ஆம்...நீங்கள் காணொளியில் காண விருக்கும் இந்த வினோத மனிதனுக்கு வேலையே இதுதான். உயிர் யந்துக்களை அப்படியோ உயிருடன் உண்ணுவது இவன் வேலை.... இன்று இவன் செய்யும் வேலை 10 இளம் சுட்டெலிகளை ஒவ்வொன்றாக மிக்சரில் போட்டு அரைக்கிறான். பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்ந்து நன்றாக அரைத்து பாணமாக குடிக்கிறான். என்ன அருவருப்பாக இருக்கிறதல்லவா? எனவே தயவு செய்து இளகிய மனம் கொண்டோர் பார்ப்பதை தவிர்க

22 September 2012

முஸ்லிம்களை இழிவுபடுத்தும் திரைப்படம்: சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா

22.09.2012By.Rajah..முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது.
பிரச்சினைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட யூடியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு தொலைக்காட்சி, எப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கும், இந்த திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இந்த பிரசார விளம்பரம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தோன்றி அந்த படத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த பிரசார படத்தில் விளக்கி கூறுகிறார்கள்.
சுமார் 30 வினாடிகள் தொலைக்காட்சியில் வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு 70 ஆயிரம் டொலர் பணம் வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறியுள்ளார்.
பிரசார விளம்பர படத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா மதத்தையும் மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள் என்றார்.
அமெரிக்காவின் இந்த பிரசார விளம்பரம் உருது மொழியில் வெளியானது. மேலும் பல எப்.எம்.ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது

20 September 2012

துவாலுவில் கேத் மற்றும் வில்லியம்ஸ் ஆடிய நடனம் [: வீடியோ]

20.09.2012.By.Rajah. கிழக்காசிய நாடுகளுக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டிருந்த வில்லியம்-கேட் பிரிட்டிஷ் அரச தம்பதியினர் சொலமன் தீவுகளில் தங்களது பயணத்தை தொடர்ந்திருந்தனர். அப்போது உலகின் நான்காவது மிகச் சிறிய நாடான துவாலு எனும் தீவில் கேத் மற்றும் வில்லியம்ஸ் இருவரும் அந்நாட்டு கலாச்சார ஆடல் பாடல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அந்நாட்டு மக்களோடு சேர்ந்து ஆடி பாடி மகிழ்ந்துள்ளனர்.

18 September 2012

அச்சச்சோ வட போச்சே {காணொளி }

By.Rajah.

12 September 2012

கின்னஸ் சாதனைக்காக சந்தித்துக்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஆணும் பெண்ணும் [ வீடியோ]

By.Rajah.வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள்ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபாளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹதுர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வயதுடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.

ஒருத்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய இந்த Match Makers, செப்டம்பர் 13 இல் வெளியாகவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்ட போட்டோ சூட் ஒன்றிட்காகவே இவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டுள்ளது.

மேலும் இந்த போட்டோ சூட்டின் போது இவர்கள் இருவருக்கும் இடையே 12 இஞ்ச் உயரமுள்ள கின்னஸ் புத்தகம் ஒன்றையும் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்களில் சந்திரா பஹதுர் டாங்கி 21.5 இஞ்ச் உயரமும் ஜோதி அம்கே 25 இஞ்ச் உயரமும் உடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது.