Search This Blog n

12 September 2012

கின்னஸ் சாதனைக்காக சந்தித்துக்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஆணும் பெண்ணும் [ வீடியோ]

By.Rajah.வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள்ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபாளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹதுர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வயதுடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.

ஒருத்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய இந்த Match Makers, செப்டம்பர் 13 இல் வெளியாகவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்ட போட்டோ சூட் ஒன்றிட்காகவே இவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டுள்ளது.

மேலும் இந்த போட்டோ சூட்டின் போது இவர்கள் இருவருக்கும் இடையே 12 இஞ்ச் உயரமுள்ள கின்னஸ் புத்தகம் ஒன்றையும் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்களில் சந்திரா பஹதுர் டாங்கி 21.5 இஞ்ச் உயரமும் ஜோதி அம்கே 25 இஞ்ச் உயரமும் உடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது.



0 கருத்துகள்:

Post a Comment