Search This Blog n

19 September 2012

சினிமா நடிகர் பெரிய கருப்புத் தேவர் மரணம்

 Wednesday, 19 September 2012,
By.Rajah.தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் பெரிய கருப்புத் தேவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்ரெம்பர் 18) காலமானார்.
சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் இருந்த இவர், சுமார் 1,000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.
தாலாட்டு என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், கரகாட்டக்காரன், பூ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஆடுகளம் படத்தில் அயூப் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
பெரிய கருப்புத் தேவரின் உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான கருமாத்தூரில் இன்று தகனம் செய்யப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment